அரிவாள் பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பனையேறியின் இடையில் கட்டப்பட்டுள்ள அரிவாள் பெட்டி

அரிவாள் பெட்டி அல்லது அருவா பெட்டி என்பது பனை மரத்தில் கள், பதநீர் போன்றவற்றை இறக்கும் தொழிலாளர்கள் அதற்குத் தேவைப்படும் அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதத்தை எடுத்துக்கொண்டு மரம் ஏறும்போது, அவை தவறி கீழே விழுந்துவிடாதபடி இருக்க இடுப்பில் கட்டியிருக்கும் ஒரு கொள்கலனைக் குறிப்பது ஆகும்.[1]

விளக்கம்[தொகு]

அரிவாள் பெட்டியானது தென்னை மரத்தின் மூன்று தென்னங் கொதும்புகளைக் (தென்னம் பாளை) கொண்டு செய்யப்படுகிறது. கொதும்புகளைத் தண்ணீரில் ஒருநாள் ஊறவைத்து, பின்னர் அதை பனை நாரைக் கொண்டு கட்டிச் செய்யப்படுகிறது.

அரிவாள் பெட்டியானது அரிவாளின் பிடி மட்டும் வெளியே தெரியும் வகையில், முக்கால் அடி உயரம் கொண்டதாக இருக்கும். இந்தப் பெட்டியின் மேற்பகுதி சற்று அகன்றும், கீழ்ப்பகுதி சற்று குறுகியும் காணப்படும். பெட்டியின் நடுவில் இரண்டு தென்னங் கொதும்பைகளைக்கொண்டு மூன்று பாகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு பக்கம் பாளை அருவா வைப்பதற்கும், நடுவில் மட்டையருவாள் வைப்பதற்கும், மற்றொரு பகுதியில் சுண்ணாப் பெட்டி வைப்பதற்கான தகடு போன்ற கொடும்பு பயன்படும். அரிவாளைத் தீட்டிக் கூர்மைப்படுத்த பயன்படும் வெள்ளைக்கல் பொடியைப் வைக்கப் பயன்படும் மூங்கில் குழாயையும் இதில் வைத்துக்கொள்வார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கைவரை இதே முறை இருக்கின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ப. ஜெகநாதன் (15 சூன் 2019). "ஈச்சங் கள் கனவு". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2019.
  2. காட்சன் சாமுவேல் (29 ஏப்ரல் 2018). "பனையேறி எனும் ஆதி சூழலியலாளன்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 3 மே 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிவாள்_பெட்டி&oldid=3576466" இலிருந்து மீள்விக்கப்பட்டது