அறிவியல் மையம் சிங்கப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவியல் மையத்தின் நுழைவாயில்

அறிவியல் மையம் சிங்கப்பூர் (SCS, முன்பு சிங்கப்பூர் அறிவியல் மையம் என்று அழைக்கப்பட்டது)[1] என்பது  ஜூரோங் கிழக்கு, சிங்கப்பூரில் அமைந்துள்ள ஒரு அறிவியல் நிறுவனமாகும். இதன் சிறப்பம்சம் பொதுமக்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியை ஊக்குவிப்பதாகும். இங்கு எட்டுக்கும் மேற்பட்ட அரங்குகளில் 850க்கும் மேற்பட்ட காட்சிகள் உள்ளன, அதை ஒர் ஆண்டுக்கு ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கின்றனர் மற்றும் இதன் வெள்ளிவிழா கொண்டாட்ட ஆண்டான 2003-ம் ஆண்டு வரை 25மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேற்பட்டவர் பார்த்துள்ளனர்.

வரலாறு[தொகு]

அறிவியல் மையமானது தேசிய அருங்காட்சியகத்திலிருந்து தனித்து செயற்படுவதின் மூலம் அருங்காட்சியகமானது கலை மற்றும் வரலாற்று சேகரிப்புகளில் கவனம் செலுத்தமுடியும். இந்த கருத்து 1969களில் சிங்கப்பூர் அறிவியல் சபையினால் முன்மொழியப்பட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம் விரைவாக விஞ்ஞானமயமாக்கப்படும் நாட்டிற்கு தொழில்நுட்பத்துறையினில் ஊக்கமளிக்கும் அறிவியல் கல்வியை வழங்க சாத்தியமானது.

சிங்கப்பூர் அறிவியல் மைய கட்டிடமானது, அறிவியல் மைய குழுவினரால் நடத்தப்பட்ட கட்டிட வடிவமைப்பு போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டது, இந்த போட்டி மூலம் தேர்வான ரேமண்ட் வூ இந்த திட்டத்தின் வடிவமைப்பாளராக தேர்வுசெய்யப்பட்டார். ஜீரோங் கிழக்கில் அமைந்துள்ள 60,000-சதுரமீட்டர் (650,000 சதுர அடி) கட்டிடத்தின் கட்டுமானச் செலவு S$12 மில்லியன் ஆகும். இது அதிகாரப்பூர்வமாக அப்பொழுதைய சிங்கப்பூர் அறிவியல் அமைச்சர் டா. டோ சின் சே அவர்களினால் 10 திசம்பர் 1977ல் திறக்கப்பட்டது.

1987ல், இந்த மையம் பெருமளவில் விரிவாக்கப்பட்டது, சிங்கப்பூரின் முதல் மற்றும் ஒரே ஒம்னிமேக்ஸ் (ஆங்:OMNIMAX; தற்போழுது IMAX Dome) திரையரங்கம், $18 மில்லியன் கட்டுமானச் செலவில், 23-மீட்டர் (75 அடி) சாய்ந்த மாடத்தின் கீழ் 276 இருக்கைகளுடன் கட்டப்பட்டது.

1999ல், $38 மில்லியன் செலவில் மையத்தின் கண்காட்சி பகுதி விரிவுபடுத்தப்பட்டது, இதன் மூலம் புதிய நுழைவுவாயில், திறந்தவெளி கண்காட்சியகம், ஒம்னி திரையரங்கத்துடன் நேரடி இணைப்பு ஆகியன ஏற்படுத்தப்பட்டன.

2000ல், வெப்பமண்டல பிரதேசமான சிங்கப்பூரில், −5 °C (23 °F) வெப்பநிலையில் பனிநகரம்(snow city) அமைக்கப்பட்டன.

7 திசம்பர் 2007ல் 30வருட கொண்டாட்டத்தின்பொழுது, அறிவியல் மையமானது, அறிவியல் மையம் சிங்கப்பூர்(SCS) என்ற பெயர் மாற்றம் செய்யப்ப்ட்டது.

ஆய்வு மையம்[தொகு]

அறிவியல் மையத்தின் ஆய்வு மையம் 1°20′03″N 103°44′09″E / 1.3342°N 103.7357°E / 1.3342; 103.7357, கடல் மட்டத்திற்கு மேலே15.27 மீட்டர்கள் (50.1 அடி) அமைந்துள்ளது. பூமத்திய ரேகைக்கு அருகே அமைந்துள்ள உலகின் சில ஆய்வு மையங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த தனித்துவமான நிலை வட மற்றும் தென் வானியல் அரைக்கோளங்களிலுள்ள நட்சத்திர கூட்டங்களை ஆய்வு செய்ய வழிவகுக்கிறது. இந்த அவதான நிலையம் வானியல் படிப்புகள், ஸ்லைடு நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல் வகுப்பறை போன்ற நுணுக்கமான வசதிகளுடன் உள்ளது.

இந்த ஆய்வு மையம் பிரதி வெள்ளி மாலை 7:50முதல் இரவு 10:00 வரை 50 பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது. வானிலை நன்றாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே தொலைநூக்கி மூலம் ஆகாயத்தினை பார்வையிடலாம்.

இங்குள்ள பிரதான தொலைநோக்கி 520 சென்டிமீட்டர் (200 அங்குலம்) குவியத் தூரம் கொண்ட 40 சென்டிமீட்டர் (16 அங்குலம்) கேசெக்ரெய்ன் எதிரொளிப்பான் ஆகும். துணை தொலைநோக்கியானது 180 சென்டிமீட்டர்(71அங்குலம்) குவியத் தூரம் கொண்ட 15-சென்டிமீட்டர் (5.9 அங்குலம்) 'அபோகுரொமாடிக் கெப்ளர் ஒளிவிலகல் தொலைநோக்கியாகும்'.

மேலும் பார்க்க[தொகு]

  • சிங்கப்பூர் சுற்றுலா தலங்களின் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

  1. "The Singapore Science Centre turns 30!" (PDF). Archived from the original (PDF) on 2020-03-23. பார்க்கப்பட்ட நாள் 2018-04-29.

வெளிப்புற இணைப்பு[தொகு]