வான்பயண உட்பதிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாங்காக்கிலுள்ள சுவர்ணபூமி வானூர்தி நிலையத்தில் தாய் ஏர்வேசின் உட்பதிகை சேவை முகமைகள்
Aer Lingus self-check-in at Dublin Airport

வான்பயண உட்பதிகை (Airport check-in) என்பது வானூர்தி நிலையத்தில் பயணத்திற்கு முன்பாக வான்சேவை நிறுவனங்கள் பயணிகளின் முன்பதிவுச் சீட்டை சரிபார்த்து ஏற்கும் செயற்பாட்டைக் குறிப்பதாகும். இதற்காக வானூர்தி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சேவை முகப்புகளை இந்நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. உட்பதிகையை பொதுவாக வான்வழிப் போக்குவரத்து நிறுவனமே மேற்கொள்கிறது; அல்லது வான்வழிப் போக்குவரத்து நிறுவனத்தின் சார்பாக கையாள்கை முகமை அலுவலர்கள் பணிபுரிவர். பயணிகள் தாங்கள் வானூர்தியின் உள்ளறையில் எடுத்துச்செல்லவியலா அல்லது விரும்பாத பெட்டிகளை இங்கு ஒப்படைக்கின்றனர். பயணிகளுக்கு இதற்கான சரக்குச்சீட்டும் இருக்கையிடம் இடப்பட்ட ஏறுகை அனுமதிச்சீட்டும் வழங்கப்படுகின்றது. வானூர்தியில் ஏறுவதற்கு இந்த அனுமதிச்சீட்டு அவசியமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்பயண_உட்பதிகை&oldid=3712784" இலிருந்து மீள்விக்கப்பட்டது