வடக்கு இங்கிலாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு இங்கிலாந்து
Northern England

North of England, the North Country
அடைபெயர்(கள்): The North
பிராந்திய எல்லைகளற்ற மூன்று வடக்கு இங்கிலாந்து பகுதிகள் காட்டப்பட்டுள்ளன. வடக்கு இங்கிலாந்து இங்கிலாந்தின் பிற பகுதிகளில் இருந்து கலாச்சார ரீதியில் வேறுபடுகின்றது.
பிராந்திய எல்லைகளற்ற மூன்று வடக்கு இங்கிலாந்து பகுதிகள் காட்டப்பட்டுள்ளன. வடக்கு இங்கிலாந்து இங்கிலாந்தின் பிற பகுதிகளில் இருந்து கலாச்சார ரீதியில் வேறுபடுகின்றது.
இறையாண்மை நிலைஐக்கிய இராச்சியம்
நாடுஇங்கிலாந்து
பெரிய குடியிருப்புகள்
பரப்பளவு
 • மொத்தம்37,331 km2 (14,414 sq mi)
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)[1]
 • மொத்தம்1,49,33,000
 • அடர்த்தி400/km2 (1,000/sq mi)
 • நகர்ப்புறம்1,27,82,940
 • நாட்டுப்புறம்21,50,060
இனங்கள்வடவர்
நேர வலயம்GMT (UTC)
 • கோடை (பசேநே)BST (ஒசநே+1)

வடக்கு இங்கிலாந்து (Northern England, மேலும் எளிதாக the North அழைக்கப்படுகிறது) என்பது இங்கிலாந்தின் வடக்குப் பகுதியாகும். இது ஒரு தனி கலாச்சாரப் பகுதியாக கருதப்படுகிறது. இதன் எல்லையானது வடக்கில் இசுக்கொட்லாந்து எல்லைவரையும், தெற்கில் டிரெண்ட் ஆற்றை எல்லையாகக் கொண்டும் பரவியுள்ளது, என்றாலும் அதன் தெற்கு எல்லை குறித்த வரையறைகளில் துல்லியத்தன்மையானது மாறுபடுகிறது. வடக்கு இங்கிலாந்து சுமார் மூன்று வட்டாரப் பகுதிகளைக் கொண்டுள்ளது அவை வட கிழக்கு, வட மேற்கு மற்றும் யார்க்ஷயர் மற்றும் ஹம்பர் ஆகிய வட்டாரங்கள் ஆகும். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது 37,331 km2 (14,414 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டு அதில் 14.9 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டதாக இருந்தது. இங்கிலாந்தின் தேசிய பூங்காக்களில் பெருமளவு பூங்காக்களானது வடக்கு இங்கிலாந்திலேயே உள்ளன. ஆனால் இதன் பெருமளவு பகுதிகள் நகரமயமானவையாக உள்ளன. இப்பகுதியானது கிரேட்டர் மான்செஸ்டர், மெர்ஸ்சைடு, டெஸ்ஸைடு, டையனேசைட், வியர்சைடு, தெற்கு மற்றும் மேற்கு யார்க்ஷயர் ஆகிய நகரத்தொகுப்புகளைக் கொண்டுள்ளது.

இப்பகுதியானது பல குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. பிரிட்டான்கள், பெரிய பிரித்தானியாவின் பிரிட்டோனிக் இராச்சியம் ஆகியவற்றில் இருந்து ரோமானியர்கள், ஆங்கிலோ-சாக்சன்ஸ், செல்ட்ஸ் மற்றும் டேன்ஸ் ஆகியோர் வரை இப்பகுதியைக் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1066 ஆம் ஆண்டில் நோர்மானியரின் வெற்றிக்குப் பிறகு, வடகிழக்கு ஹாரிங் அழிவைச் சந்தித்தது. இந்த பகுதியில் ஆங்கிலோ- ஸ்காட்லாந்து எல்லைப் போரானது பிரிட்டனானது ஸ்டூவர்ட்ஸின்கீழ் வரும்வரை நிகழ்ந்தது. இக்காலகட்டத்தில் சில நிலப் பகுதிகள் இங்கிலாந்திற்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையில் பலமுறை கைமாறின. தொழிற்புரட்சியின்போது பல கண்டுபிடிப்புகள் வட இங்கிலாந்தில் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இதன் நகரப்பகுதிகளில், சமூக எழுச்சியுடன், பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன, அதன் ஒரு பகுதியாக இப்பகுதிகள் தொழிற்சங்கவாதத்தில் இருந்து மான்செஸ்டர் முதலாளித்துவத்திற்கு மாறின. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், வடக்கின் பொருளாதாரத்தில் நெசவு, கப்பல் கட்டுதல், எஃகு உற்பத்தி மற்றும் சுரங்கம் போன்ற கனரக தொழில்கள் ஆதிக்கம் செலுத்தின. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தொடர்ந்து வந்த தொழில்மயமழிதல், வடக்கு இங்கிலாந்தைக் கடுமையாக பாதித்தது, மற்றும் தென் இங்கிலாந்தை ஒப்பிடும்போது இங்கு பல நகரங்கள் காலியாயின.

வடக்கு இங்கிலாந்தின் வலுவான பொருளாதார வளர்ச்சியில் அதன் சில பகுதிகளில் நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டங்கள் மற்றும் சேவைத் துறைப் பொருளாதார மாற்றம் போன்றவை ஏற்பட்டன. ஆனால் இங்கிலாந்தின் பொருளாதாரம் மற்றும் கலாசாசாரம் ஆகிய இரண்டிலும் ஒரு திட்டவட்டமான பிளவானது அதன் வடக்கு-தெற்கு பகுதிகளுக்கு இடையில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக நடந்த இடப்பெயர்வு, குடியேற்றம் மற்றும் உழைப்பு ஆகியவை வடக்கு இங்கிலாந்தின் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளன, மேலும் இப்பகுதியானது தனித்துவமான பேச்சுவழக்கு, இசை, உணவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

விளக்கம்[தொகு]

வடக்கு இங்கிலாந்தானது அரசாங்கத்தின் புள்ளிவிவர நோக்கங்களுக்காக, வட மேற்கு இங்கிலாந்து, வட கிழக்கு இங்கிலாந்து, யார்க்ஷயர் மற்றும் ஹம்பர் ஆகிய மூன்று புள்ளியியல் பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.[2] இந்த பகுதிகள் செஷைர், கும்பிரி, கவுண்டி டுர்ஹாம், யார்க்ஷயர், கிழக்கு மான்ஸ்டர்ஸ், லங்காஷயர், மெர்ஸெஸைட், நார்பும்பர்லேண்ட், நோர்த் யார்க்ஷயர், தென் யார்க்ஷயர், டைன் மற்றும் வேர் மற்றும் வெஸ்ட் யார்க்ஷயர், மேலும் வடக்கு லிங்கன்ஷையர் மற்றும் வட கிழக்கு லிங்கன்ஷையர் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Compton, Garnett (21 March 2013). "2011 Census: Population Estimates by five-year age bands, and Household Estimates, for Local Authorities in the United Kingdom". Office of National Statistics. பார்க்கப்பட்ட நாள் 15 May 2017.
  2. IPPR North 2012, ப. 20–22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_இங்கிலாந்து&oldid=3886871" இலிருந்து மீள்விக்கப்பட்டது