சுந்தரபாண்டியன்பட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுந்தரபாண்டியன்பட்டினம் (எஸ் பி பட்டினம்), இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். வங்காள விரிகுடா கடற்கரை கிராமமான சுந்தரபாண்டியன்பட்டினத்தின் அஞ்சல் சுட்டு எண் 623406 ஆகும். தொலைபேசி குறியீடு எண் 04561 ஆகும். இக்கிராமத்தினரின் முக்கியத் தொழில் கடல் மீன் பிடித்தல் ஆகும்.

இக்கிராமம் திருவாடானையிலிருந்து 17 கிமீ தொலைவிலும்; இராமநாதபுரத்திற்கு வடக்கே 75 கிமீ தொலவிலும் உள்ளது.

சுந்தரபாண்டியன்பட்டினம், திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

அருகமைந்த கிராமங்கள் வட்டானம், நிலமழகியமங்கலம், ஓரியூர், பாசிப்பட்டினம், கட்டிவயல் ஆகும். அருகில் அமைந்த சிற்றூர்கள்: தொண்டி, மற்றும் திருவெற்றியூர் ஆகும். அருகமைந்த நகரங்கள் தேவகோட்டை, பேராவூரணி, காரைக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகும்[1]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சுந்தரபாண்டியன்பட்டினத்தின் மொத்த மக்கள்தொகை 4,007 ஆகும். இதில் இசுலாமியர்கள் 83.88% ஆகவும்; கிறித்துவர்கள் 13.75% ஆகவும்; இந்துக்கள் 1.92% ஆகவும், பிறர் 0.45% ஆகவும் உள்ளனர். [2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sundarapandianpattinam
  2. Sundarapandianpattinam Population Census 2011

வெளியிணைப்புகள்[தொகு]