சுரபி நாடகக் குழ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ வெங்கடேஸ்வரா நாட்டிய மண்டலி (சுரபி)
சுரபி குழுவினர் இயக்கி நடித்த மாயா பஜார் நாடகத்தின் ஒரு காட்சி

சுரபி நாடகக் குழ அல்லது சிறீ வெங்கடேஸ்வரா நாட்டிய மண்டலி (Surabhi - also known as Sri Venkateswara Natya Mandali) ஐதராபாத்தைச் சேர்ந்த தெலுங்கு மொழி பேசும் ஒரு குடும்பத்தின் பல தலைமுறையினரால், 1880 முதல் 135 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து தற்போதும் இயங்கி வருகிறது.[1]

சுரபி நாடகக் குழுவினர், ஆண்டுகளாக இராமாயணம், மகாபாரதம் மற்றும் பாகவதப் புராணக் கதைகள் தொடர்பான மேடை நாடகங்களை நடத்தி வருகிறார்கள்.. [2] பிரான்சு போன்ற வெளிநாடுகளில் சுரபி நாடகக் குழுவினர் மேடை நாடகம் நடத்துகின்றனர். [3] [4]சுரபிக் குழுவின் மேடை நாடகக் கலைஞர்கள் அனைவருமே ஒரே குடும்பத்தின் தலைமுறையினர் ஆவார்.

இக்குடும்பத்தினரின் தற்போதைய தலைமுறையினர் கல்வியில் முனைவர் போன்ற பல பட்டங்களை பெற்றாலும், மேடை நாடகக் கலைக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். இந்நாடகக் கலைக் குழுவினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேறு பணிகளில் இருந்தாலும், இந்நாடகக் கலையையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க, மாலை நேரங்களில் மேடை நாடகங்களை நடத்தி வருகிறார்கள்.

இக்குடும்ப நாடகக் குழுவின் உறுப்பினர்கள், மேடை நாடகங்களுக்கான வசனம், இசை, பாடல்கள், இயக்கம், நடிப்பு, உடை, ஒப்பனை, ஒலி, ஒளி போன்றவகைகளை கவனித்துக் கொள்கின்றனர்.

வரலாறு[தொகு]

1880ம் ஆண்டுகளில், சுரபிக் குழுவின் முன்னோடிகள், பிரித்தானிய இந்தியா அரசின் கீழ் நாட்டுப்புற கலைஞர்களாக பணியாற்றினர். மகாபாரதம், இராமாயணம், பாகவதம் போன்ற இதிகாச மற்றும் புராணக் கதைகளை பொம்மலாட்டம் மூலம் விளக்கியவர்கள், பின்னர் மெதுவாக 1937ல் சிறீ வெங்கடேஸ்வரா நாட்டிய மண்டலி என்ற பெயரில் நாடகக் கலைஞர்களாக மாறினர்கள். 1885ஆம் ஆண்டில் சுரபி குழுவினர் முதல் முறையாக, மகாபாரத காவியத்தின் ஒரு பகுதியான கீச்சக வதம் என்ற நாடகத்தை அரங்கேற்றியது.[5]

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும், விதவிதமாக மேடைகள் அமைத்தும் நாடகம் நடத்துவது, இந்த கலையை பாதுகாக்க இக்குழுவினர் பயன்படுத்தும் தாரக மந்திரமாகும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் சுரபி நாடகக் குழுவை தொடங்கினர். பின்பு பல தலைமுறைகளாக இது தொடர்ந்து வந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் இக்கலையின் மீது வைத்திருக்கும் அன்புதான், இவர்கள் இன்னமும் இதை பாதுகாத்து வருவதற்கு காரணமாகும். இந்திய அரசு இந்நாடக் குழுவிற்கு சிறதளவு நிதியுதவி செய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை
  2. Magic once more with Surabhi
  3. Surabhi to represent India at France theatre fest
  4. A family in art surges ahead
  5. Theatre is their lifeline

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரபி_நாடகக்_குழ&oldid=3245504" இலிருந்து மீள்விக்கப்பட்டது