மிகிர போஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகிர போஜன்
ஆதி வராகன்
மிகிர போஜன்
ராஜ்புத் பேரரசர் பேரரசர் மிகிர போஜன் சிலை, டெல்லி
6வது கூர்ஜர-பிரதிகாரப் பேரரசர்
ஆட்சிக்காலம்அண். கிபி 836 – அண். 885
முன்னையவர்இராமபத்திரன்
பின்னையவர்முதலாம் மகேந்திரபாலன்
இறப்பு885
நர்மதை ஆறு
குழந்தைகளின்
பெயர்கள்
முதலாம் மகேந்திரபாலன்
தந்தைஇராமபத்திரன்
மதம்இந்து

மிகிர போஜன் அல்லது முதலாம் போஜன் (Mihira Bhoja or Bhoja I) (கிபி 836–885) மேற்கு இந்தியாவின் தற்கால குஜராத், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலப் பகுதிகளை ஆண்ட 6வது பிரதிகாரப் பேரரசர் ஆவார்.

விஷ்ணு பக்தர்களான கூர்ஜர வம்ச மன்னர்கள் ஆதிவராகன் எனும் பட்டத்தை சூட்டிக் கொள்வர். ராஜ்புத் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் வராக உருவத்தை பொறித்துள்ளனர்.[1] மிகிர போஜன் காலத்தில் பிரதிகாரப் பேரரசு, தெற்கில் நர்மதை ஆறு, வடமேற்கில் சத்லஜ் ஆறு, கிழக்கில் வங்காளம், வடக்கில் இமயமலை அடிவாரம் வரையிலும் பரவியிருந்தது.[2][3]

தெலி கோயில் சிற்பம், குவாலியர் கோட்டை

மிகிர போஜன் தென்னிந்தியாவின் இராஷ்டிரகூடர்களையும், வங்காளத்தின் பாலப் பேரரசையும் வீழ்த்தி தனது இராச்சியத்தை விரிவாக்கினார். [4][5]:20–21 சிறந்த இராஜதந்திரியான முதலாம் மிகிர போஜன், அண்டை நாட்டுப் பகுதிகளான தற்கால இராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களின் பெரும் பகுதிகளை வென்றார். [4][6] மிகிர போஜன், தனது ஆட்சிக் காலத்தில் கூர்ஜரப் பேரரசின் தலைநகரை கன்னோசிக்கு மாற்றினார்.

தெலி கோயிலின் நுழைவு வாயில், குவாலியர் கோட்டை

முதலாம் மிகிர போஜன் அரேபிய படையெடுப்புகளைக் கடுமையாக எதிர்த்தவர். [4].[7]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Satish Chandra, National Council of Educational Research and Training (India) (1978). Medieval India: a textbook for classes XI-XII, Part 1. National Council of Educational Research and Training. பக். 9. https://books.google.com/books?cd=7&id=tHVDAAAAYAAJ&dq=adivaraha+mihir+bhoj&q=adivaraha#search_anchor. 
  2. E-gazeteer-History of Etawah district
  3. Digital South Asia Library
  4. 4.0 4.1 4.2 Radhey Shyam Chaurasia (2002). History of Ancient India: Earliest Times to 1000 A. D.. Atlantic Publishers & Distributors. பக். 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-269-0027-5. 
  5. Sen, S.N., 2013, A Textbook of Medieval Indian History, Delhi: Primus Books, ISBN 9789380607344
  6. Radhey Shyam Chaurasia (2002). History of Ancient India: Earliest Times to 1000 A. D.. Atlantic Publishers & Distributors. பக். 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-269-0027-5. https://books.google.com/books?id=cWmsQQ2smXIC&pg=PA207&dq. "Besides being a conqueor, Bhoja was a great diplomat..." 
  7. Radhey Shyam Chaurasia (2002). History of Ancient India: Earliest Times to 1000 A. D.. Atlantic Publishers & Distributors. பக். 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-269-0027-5. https://books.google.com/books?id=cWmsQQ2smXIC&pg=PA207&dq. "The king of Gurjars maintain numerous faces and no other Indian prince has so fine a cavalry." 

மேற்கோள்கள்[தொகு]

  • Deyell, John S. (1999), Living without Silver, Oxford University Press, New Delhi, ISBN 0-19-564983-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகிர_போஜன்&oldid=3476560" இலிருந்து மீள்விக்கப்பட்டது