பேச்சு:சிறு முக்குளிப்பான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

en:Grebe என்பதை முக்குளிப்பான் எனவும் இக்கட்டுரையினை சிறு முக்குளிப்பான் எனவும் பெயர் மாற்றலாமா? --Anton (பேச்சு) 07:03, 30 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

முக்குளிப்பான் என்பதே தமிழ்நாட்டுப் பறவைகள் (க. ரத்னம்) நூலிலும் பல பறவை குறித்த நூல்களிலும் பறவைகள் சரணாலயங்களிலும் பயன்படுத்தப்படும் பெயர். சில பறவைகள் கையேடுகளில் சின்ன முக்குளிப்பான் என்று பயன்படுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் காணப்படும் மூன்று முக்குளிப்பான்களில் இப்பறவையைத் தவிர பிற முக்குளிப்பான்களான பெருங்கொண்டை முக்குளிப்பானும் [Great crested grebe] கருந்தொண்டை முக்குளிப்பானும் [Black-necked grebe] அரிதாகக் காணப்படும் பறவைகளாக இருப்பதால் இப்பறவையை வேறுபடுத்தி [அதாவது, சிறிய அல்லது சின்ன என்ற உரிச்சொல்லைப் பயன்படுத்தி] குறிப்பிடுவதற்கு அவசியம் இல்லை. எனவே, முக்குளிப்பான் என்ற பெயரே சிறந்தது. -PARITHIMATHI (பேச்சு) 16:28, 3 மே 2021 (UTC)[பதிலளி]