டூ கண்ட்ரீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டூ கண்ட்டீசு (Two Countries)
இயக்கம்ஷபி
இசைகோபி சுந்தர்
நடிப்புதிலிப்
மம்தா மோகன்தாஸ்
இஷா தல்வார்
ஓட்டம்161 minutes
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
மொத்த வருவாய்மதிப்பீடு.55 crore[1]

டூ கண்ட்டீசு (Two Countries) (தமிழ்: இரண்டு நாடுகள்) என்பது 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழி திரைப்படம் ஆகும். இதன் கதை ரபி என்பவரால் எழுதப்பட்டு ஷபி என்பவரால் இயக்கப்பட்டதாகும். இப்படத்தில் திலிப், மம்தா மோகன்தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இது ஒரு நகைச்சுவைகலந்த காதல் படம் ஆகும். பின்னர் இப்படம் தெலுங்கிலும், கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[2]

கதை[தொகு]

எப்படியாவது கடின உழைப்பு ஏதுமின்றி கோடிசுவரனாக நினைத்து ஊர்க்காரர்களை ஏமாற்றுவதுபோல் அந்த ஊரில் வசதியான ஊணமுற்ற சிம்ரன் என்ற பெண் ஒருத்தியை மணமுடிக்க நினைக்கிறான் உல்லாஸ்(திலீப்). ஆனால் விதிவேறு விதமாக அவன் வாழ்க்கையில் இந்திய-கனடாவாழ் மலையாழி பெண் லேயா ரூபத்தில் விளையாடுகிறது. இந்திய பணத்தைவிட கனடா டாலருக்கு இருக்கும் மதிப்பை நினைத்து அப்பெண்ணை மணமுடிக்கிறான். அப்பெண் போதைப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டு உள்ளது அறிந்து வேதனைப்படுகிறான். பின் மணமுறிவு வரை சென்று மீண்டும் இணைகிறார்கள்.

நடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டூ_கண்ட்ரீசு&oldid=3759515" இலிருந்து மீள்விக்கப்பட்டது