சாகசம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகசம்
சுவரிதழ்
இயக்கம்அருண் ராஜ் வர்மா
தயாரிப்புதியாகராஜன்
சாந்தினி தியாகராஜன்
பிரசாந்த்
ஹரீஸ் விக்ரம் விஜய் குமார்
மூலக்கதைஜூலை
படைத்தவர் திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ்
திரைக்கதைதியாகராஜன்
இசைஎஸ். தமன்
நடிப்பு
ஒளிப்பதிவு
  • சாஜி குமார்
  • சவுண்ட்ராஜன்
  • சக்தி சரவணன்
படத்தொகுப்புசாஸி குமர்
டான் மேக்ஸ்
கலையகம்தியாகராஜன்
விநியோகம்ஶ்ரீ தேனான்டாள் பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 5, 2016 (2016-02-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாகசம் என்பது பெப்ரவரி 5, 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதில் பிரசாந்த், அமந்தா ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] நாசர் (நடிகர்), தம்பி ராமையா ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் தயாரித்துள்ளார். இதற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியது.

இந்தத் திரைப்படம் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும். இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. படம் வசூலில் தோல்வியுற்றது.[2]

கதைச்சுருக்கம்[தொகு]

ரவி (பிரசாந்த்) கவலையற்ற இளைஞன். அவர் தனது தந்தையிடம் (நாசர்) இரண்டு மணி நேரத்தில் பத்தாயிரத்தை ஒரு லட்சமாக மாற்ற முடியும் என்று சவால் விடுகிறார். ரவி அனைத்து பணத்தையும் கிரிக்கெட் பந்தயத்தில் முதலீடு செய்ய கிளப்புக்குச் செல்லும் வழியில் மோசமான குற்றவாளியான பிட்டுவை (சோனு சூத்) சந்திக்கிறார். சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் ரவி காவல் துறையிடம் சிக்குகிறார். அதே காவல் துறையினரின் உதவியுடன் 1500 கோடி பணத்தை வங்கியில் இருந்து கொள்ளையடிக்கும் பிட்டுவின் கும்பலைத் தன் உயிரை பணயம் வைத்து மீட்டெடுத்து உரியவரிடம் ஒப்படைப்பதே படத்தின் கதை

நடிகர்கள்[தொகு]

ரவி நாராயணன் - பிரசாந்த்

மது - அமண்டா ரொசாரியோ

ரவியின் தந்தை நாராயண மூர்த்தி - நாசர்

ஏ.சி.பி சீதாராமன் - தம்பி ராமையா

பிட்டு - சோனு சூத்

சீதாராமனின் மகள் கவிதா - அபீதா

கோத்தண்டபாணி - அபி சரவணன்

சதானந்தம் - எம்.எஸ்.பாஸ்கர்

வரதராஜன் - கோட்டா சீனிவாச ராவ்

கமிஷனர் ராஜமணிக்கம் - ராவ் ரமேஷ்

'டிராவல்' மூர்த்தி - பிரம்மஜி

மதுவின் தந்தை - மதன் பாப்

'செயின்' ஜெய்பால் - ஜான் விஜய்

பார் உரிமையாளர் - ரியாஸ் கான்

ரவியின் தாய் காமேஸ்வரி - துளசி

லலிதா - தேவதர்ஷினி

தயாரிப்பு[தொகு]

பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் ஆகியோர் படப்பிடிப்பை நடத்துவதற்கான இடங்களை குவைத், ஆத்திரேலியா ஆகிய இடங்களை வணிக பயணங்களின் போது பார்வையிட்டனர்.[3] படத்தின் தலைப்பு இறுதி செய்யப்படுவதற்கு படக்குழு முகநூலில் ரசிகர்களிடம் அஸ்திரம், மோதி பார் உள்ளிட்ட தலைப்புகளுடன் கருத்துக் கணிப்பு நடத்தி ரசிகர்களை பெயரிடுமாறு கேட்டுக்கொண்டது. 2014 ஆம் ஆண்டில் பெப்ரவரியில் இயக்குனராக அருண் ராஜ் வர்மாவும், ஒளிப்பதிவாளராகவும்,  இசை அமைப்பாளராகவும் முறையே சக்தி சரவணன் மற்றும் தேவி ஶ்ரீ பிரசாத் என்போர் பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தேவி ஶ்ரீ பிரசாத்திற்கு பதிலாக தமன் இசையமைப்பாளராக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டில் பிற்பகுதியில் ஒரு இடைவெளிக்குப் பிறகு படக்குழு மீண்டும் பணியைத் தொடங்கியது. நர்கிஸ் பக்ரி பாடலில் தோன்றுவதற்கு கையெழுத்திட்டதாக அறிவிக்கப்பட்டது.[4] தமனில் இசையமைப்பில் மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடல் 2014 ஆம் ஆண்டு சூலையின் பிற்பகுதியில் சென்னையின் பின்னி மில்ஸில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் ஒரு பகுதியாக நர்கிஸ் பக்ரி ஹங்கேரியிலிருந்து வந்தார். ராஜூ சுந்தரம் இந்தப் பாடலின் நடன அமைப்பாளராக பணியாற்றினார். படத்தின் கதாநாயகியாக தமன்னா முதலில் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் ஆத்திரேலிய வடிவழகியான அமந்தா ரொசாரியோ படத்தின் தமன்னாவிற்கு பதிலாக முன்னணி நடிகையாக தேர்வு செய்யப்பட்டார்.[5] இந்த திரைப்படம் 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும், 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் கோயம்புத்தூர், சென்னை, மலேசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது.[6] 2016 ஆம் ஆண்டு பெப்ரவரியில் படம் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், வரி சலுகைகளை திரும்பப் பெறுவதற்காக திரைப்படத்தின் தலைப்பு சாகசம் என்ற வீரச்சாயல் என்று மறு பெயரிடப்பட்டது.

ஒலி வரி[தொகு]

இந்தத் திரைப்படத்தின் பிண்ணனி இசை மற்றும் பாடல்களுக்கான இசை அமைத்தது தமன்[7]

வ.

எண்

பாடல் பாடலாசிரியர் பாடியவர்கள்
1 டேசி கேர்ள் மதன் கார்க்கி சிலம்பரசன், லட்சுமி மேனன்
2 ஓ மது நா. முத்துக்குமார் அனிருத் ரவிச்சந்த்திரன்
3 புடிக்கும் கபிலன் சங்கர் மகாதேவன், சிரேயா கோசல்
4 ஆங்கிரி பேர்டு

பெண்ணே

நா. முத்துக்குமார் மோகித் சௌகான்
5 ஓ மது (மறு ஆக்கம்) நா. முத்துக்குமார் விஜய் பிரகாஷ்

சான்றுகள்[தொகு]

  1. "Saahasam (sahasam) Cast & Crew, Saahasam Tamil Movie Cast, Actor, Actress, Director - Filmibeat", FilmiBeat (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-03-20
  2. "Prashanth is back with 'Sahasam' - Tamil News". IndiaGlitz.com. 2014-02-27. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
  3. "Nargis Fakhri to shake a leg in Prashanth's comeback film". Archived from the original on 2019-11-06.
  4. "Nargis Fakhri shoots item song for 'Saahasam'". Sify (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
  5. "Australian girl for Prashanth's 'Saahasam'". Sify (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
  6. "Actor Prashanth talks about his film Saagasam". Behindwoods. 2016-02-04. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
  7. https://www.raaga.com/tamil/movie/Saahasam-songs-T0004293
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகசம்_(திரைப்படம்)&oldid=3709324" இலிருந்து மீள்விக்கப்பட்டது