வாட்பேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாட்பேட் (Wattpad) என்பது ஒரு கதை சார்ந்த செயலி அல்லது தளம் ஆகும்.

கதை எழுதவும் அதைத் தங்கள் பெயரில் வெளியிடவும் இந்த தளம் அனுமதிக்கிறது. இது ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்தாலும், இலவசமாகவே உள்ளது.

உலகில் உள்ள கதை விரும்பிகளை ஒன்று சேர்க்க முயலுவதே இத்தளத்தின் குறிக்கோள் என பரப்பப் படுகிறது.

வரலாறு, இரத்தக் காட்டேரி, மனித ஓநாய், பயம், திகில், மர்மம், காதல், அறிவியல், கற்பனை, நகைச்சுவை, சாகசம், பதின்மம், பொது, கவிதை, சிறுகதை, அதிரடி, பழம்பெரும் என பல பிரிவுகளில் கதை எழுத இத்தளம் அனுமதிக்கிறது.

130 (௧௩௦) வேலையாட்களை தன்னகத்தே கொண்டு உலகம் முழுவதையும் இணையம் வழியே இத்தளம் இணைக்கிறது.

தமிழ் உட்பட 56 (௫௬) மொழிக் கதைகள் இத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழ், இந்தி, மராட்டி, குஜராத்தி, ஒடிசி, மலையாளம் என ஆறு இந்திய மொழிகளில் இத்தளத்தில் கதை எழுத முடியும்.

முன்னதாக இவ்வரிசையில் இருந்த கன்னடம், எழுத்தாளர்கள் இன்றி இத்தளத்தில் வழக்கொழிந்தது. சீனா, மலேசியா, இலங்கை, மாலத்தீவைச் சேர்ந்த தமிழர்களே வாட்பேட் அதிகம் பயன் படுத்துகின்றனர்.

தமிழகத்தில் இன்னும் இந்த தளத்தின் பால் விழிப்புணர்வு இல்லை. வாட்பேட் நிறுவனத்தின் தலைமைச் செயலகம் கனடா நாட்டின் டாரன்டோவில் உள்ளது.

இத்தளத்தில் கதை எழுதுபவர்களுக்கு காப்புரிமையும் வழங்கப் படுகிறது. அதாவது, இந்த தளத்தில் எழுதப்பட்ட கதை ஏனும் திருடப்பட்டால் வாட்பேட் ஒரு சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

அதே சமயத்தில், பிறர் எழுதிய கதை களை அவர்களின் அனுமதி இன்றி, வாட்பேடில் எழுதுவதும் குற்றமே. வாட்பேடில் எழுதப்பட்ட பல கதைகள் ஆங்கில திரையுலகில் வலம் வந்துள்ளன.

வாட்பேட் அமெரிக்காவில் வாழும் எழுத்தாளர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகளும் கொடுக்கிறது. கூகுள் ப்ளே செயலியின் மூலம் மட்டும் பத்து கோடிக்கும் அதிகமானவர்கள் இச்செயலியை தரவிறக்கம் செய்து உள்ளனர்.

2018 (௨௦௧௮) இன் தகவல் படி நாற்பது கோடிக்கும் அதிகமான நூல்கள் இத்தளத்தில் உள்ளன. ஆறு கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இத்தளத்திற்கு உண்டு.

இத்தனை நூல்கள் கொண்டு இருந்தாலும் புதிய எழுத்தாளர்களின் நூல்கள் படிக்கப்படும் வகையில் தனி அமைப்புகளையும் கொண்டு உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்பேட்&oldid=3601849" இலிருந்து மீள்விக்கப்பட்டது