பொன்ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்ராம்
பொன்ராம் 2017இல்
பணிஇயக்குநர், திரைகதை எழுத்தாளர்
பட்டம்திரைப்பட இயக்குநர்

பொன்ராம் (பொன்ராம் பெருமாள்) தமிழ்த்திரைப்பட இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் செயல்பட்டு வருகின்றார். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம்[1] (2013), ரஜினி முருகன்[2] (2016) ஆகி ய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது சீமராஜா என்னும் படத்தினை இயக்கி வருகின்றார்.

திரைப்படப்பணிகள்[தொகு]

2001இல்[தொகு]

பொன்ராம் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இவர் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வெளியான முதல் படம் தோஸ்த் (2001).

2002இல்[தொகு]

இவர் இயக்குநர் மஜித் இயக்கிய தமிழன் (2002) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இத்திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு இவர் எஸ். ஏ. சந்திரசேகரிடம் இயக்கிய முத்தம் (2002) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

2009[தொகு]

மு. இராசேசு இயக்கிய சிவா மனசுல சக்தி (2009) என்னும் திரைப்படத்தில் இவர் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

2010[தொகு]

மு. இராசேசு இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் (2010) என்னும் திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

2012[தொகு]

மு. இராசேசு இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி (2012) என்னும் திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

2013[தொகு]

2013இல் இவர் சிவகார்த்திகேயன் கதைநாயகனாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் படத்தினை இயக்கியுள்ளார். இவர் திரைத்துறைக்கு வந்ததில் இருந்து இயக்குநராக 12 ஆண்டுகள் ஆனது.

2016[தொகு]

இவர் 2016இல் இவர் சிவகார்த்திகேயன் கதைநாயனாக நடித்த ரஜினி முருகன்[3] என்னும் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

2017-தற்போது வரை[தொகு]

பொன்ராம், 2017இல் சிவகார்த்திகேயன் கதைநாயனாக நடிக்கும் சீமராஜா)[4]என்னும் திரைப்படத்தினை இயக்கி வருகின்றார்.

திரைப்படப்பணிகள்[தொகு]

திரைப்படபணித்தரவுகள்
ஆண்டு படம் பணி மொழி குறிப்புகள்
உதவி இயக்குநர் இணை இயக்குநர் இயக்குநர்
2001 தோஸ்த் Green tickY தமிழ்
2002 தமிழன் Green tickY தமிழ்
2002 முத்தம் Green tickY தமிழ்
2007 திருத்தம் Green tickY தமிழ்
2009 சிவா மனசுல சக்தி Green tickY தமிழ்
2010 பாஸ் என்கிற பாஸ்கரன் Green tickY தமிழ்
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி Green tickY தமிழ்
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் [5] Green tickY தமிழ்
2016 ரஜினி முருகன்[6] Green tickY தமிழ்
2018 சீமராஜா Green tickY தமிழ்

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்ராம்&oldid=3679674" இலிருந்து மீள்விக்கப்பட்டது