காவேரி மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவேரி மருத்துவமனை
வகைபொதுப் பங்கு
வர்த்தகப் பெயர்Kauvery Hospital
முதன்மை நபர்கள்அரவிந்தன் செல்வராஜ் (செயல் இயக்குநர்)
தொழில்துறைநலம் பேணல்
உற்பத்திகள்மருத்துவமனை, மருந்தகம்,நோய் கண்டறியும் மையம்
வருமானம்54.83 கோடி (US$6.9 மில்லியன்) (2016-2017)[1]
நிகர வருமானம்2.05 கோடி (US$2,60,000)
பணியாளர்648 (2017, மார்ச்)
ஒசூர் காவேரி மருத்துவமனை

காவேரி மருத்துவமனை என்பது தமிழ்நாட்டின் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பல்நோக்கு மருத்துவமனை ஆகும். இந்நிறுவனத்தின் கிளைகள் சென்னை, சேலம், காரைக்குடி, ஒசூர் ஆகிய ஊர்களில் அமைந்துள்ளன. சென்னையில் ஆழ்வார்பேட்டை மற்றும் அண்ணாநகர் ஆகிய இரண்டு இடங்களில் கிளைகள் உள்ளன.  

விரிவான தகவல்[தொகு]

காவேரி மருத்துவமனை ஸ்ரீ காவேரி மெடிக்கல் கேர் என்ற பெயரில் 1997 ஆம் ஆண்டு மருத்துவர் எஸ். சந்திரகுமார் மற்றும் மருத்துவர் எஸ். மணிவண்ணன் ஆகியவர்களால் துவங்கப்பட்டது. இந்த மருத்துவமனை சென்னையில் ஆழ்வார்பேட்டை மற்றும் அண்ணா நகர் ஆகிய இடங்களில் செயல்படுகிறது. 

வரலாறு[தொகு]

  • 1997 ஆம் ஆண்டு 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக காவேரி மெடிக்கல் செண்டர் திருச்சியில் துவங்கப்பட்டது. 
  •  2002 ஆம் ஆண்டு காவேரி மெடிக்கல் செண்டர் என்ற பெயர் காவேரி மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 
  •  2004 ஆம் ஆண்டு திருச்சியில் இருதய நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் முதல் மையத்தைத் துவங்கினார்கள். 
  •  2008 ஆம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சீஹார்ஸ் மருத்துவமனை கையகப்படுத்தப்பட்டது. 
  •  2011 ஆம் ஆண்டு காவேரி மருத்துவமனை சென்னை ஆழ்வார்பேட்டையில் துவங்கப்பட்டது 

சிறப்பு மருத்துவங்கள்[தொகு]

இதயவியல், சிறுநீரகவியல், குழந்தைகள் மருத்துவம், இரையகக் குடலியவியல், நரம்பியல், முதுகெலும்பு அறுவை சிகிச்சை, மருந்தியல், எலும்பு நோயியல், வாஸ்குலர் அறுவை சிகிச்சை, மயக்க மருந்து, உட்சுரப்பியல், இண்டர்வென்ஷனல் ரேடியாலஜி, குழந்தை இருதயவியல், ஊடுகதிரியல், சிக்கலான கவனிப்பு, காது மூக்கு தொண்டை, தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம், வாதவியல், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல், பல் & மாக்ஸில்லோஃபேஷியல், சைக்காலஜி, தோல் மருத்துவம், எலும்பியல் மற்றும் புல்மோனாலஜி போன்ற சிறப்பு மருத்துவங்கள் இங்கு உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Annual report 2016-2017" (PDF). www.bseindia.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரி_மருத்துவமனை&oldid=3817891" இலிருந்து மீள்விக்கப்பட்டது