டோரா (2017 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோரா
இயக்கம்தாஸ் ராமசாமி
தயாரிப்புஏ. சற்குணம்
இசைவிவேக் -மெர்வின்
நடிப்புநயன்தாரா தம்பி ராமையா
ஒளிப்பதிவுதினேஷ் கிருஷ்ணன்
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்ஏ,. சற்குணம் சினிமாஸ்
விநியோகம்ஆரா சினிமாஸ்
வெளியீடுமார்ச்சு 31, 2017 (2017-03-31)
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

'டோரா (Dora) என்பது தமிழ் திகில் திரைப்படம் ஆகும். ஏ. சற்குணம் தயாரித்த இந்தத் திரைப்படத்தை தாஸ் ராமசாமி என்பவர் இயக்கியுள்ளார். நயன்தாரா முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இதில் தம்பிராமையா , ஹரிஷ் உத்தமன், சுல்லி குமார் ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்[1]. படத்தயாரிப்பு வேலைகள் மார்ச் 2016 ஆம் ஆண்டிலும் படப்பிடிப்பு ஜூன் 2016 இல் படப்பிடிப்புத் துவங்கியது. தினேஷ் குமார் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.[2][3] இந்தத் திரைப்படம் மார்ச் 31, 2017 இல் வெளியானது.[4] இது காஞ்சனா: அற்புத தானுந்து என்ற பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

கதைச் சுருக்கம்[தொகு]

பவளக்கொடி (நயன்தாரா) மற்றும் தனது தந்தை வைரக்கன்னு (தம்பி ராமையா) ஆகிய இருவரும் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக சென்றுகொண்டிருக்கும் போது அவர்களது வீட்டின் அருகே இருக்கும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் மூன்று திருடர்கள் வீட்டில் உள்ள பெண்ணைக் கொன்று அவரது நகைகளைத் திருடிச் சென்று விடுகின்றனர். அதனை விசாரிக்கும் காவல் அதிகாரிக்கு (ஹரிஷ் உத்தமன்) அந்தக் கொலையாளிகள் பற்றிய ஆதாரம் கிடைக்காமல் குழப்பமடைகிறார். ஆனால் அந்த வீட்டில் ஒரு இராசத்தானியக் கம்பளம் இருப்பது பற்றி அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் வேலையாட்களிடம் விசாரிக்கிறார். ஆனால் அவர்களுக்கும் அந்தக் கம்பளம் குறித்துத் தெரியவில்லை.

வைரக்கன்னு தனது குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல பவளக் கொடியின் அத்தையிடம் தானுந்து கேட்கச் செல்கின்றனர். ஆனால் அவர்கள் அதனைத் தர மறுத்துவிடுகின்றனர். அவர்கள் வைரக்கன்னுவை தாக்க முற்படுகின்றனர். எனவே தாங்களும் வாடகைத் தானுந்து நிறுவனம் தொடங்குவோம் என பவளக்கொடி அவர்களிடம் கூறுகிறார். அவர்கள் சேர்த்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் வைத்து ஒரு இரண்டாம் தர தானுந்து வாங்கச் செல்கின்றனர். அங்கே மிகப் பழமையான ஒரு தானுந்தை வாங்குகின்றனர். அதைத் தொடர்ந்து சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன.

அவர்களின் வாடகைச் சீருந்திற்கு முதல் வாடிக்கையாளர் திருப்பதிக்கு 20 நாட்கள் செல்ல வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால் அந்தத் தானுந்தில் சில மீயியற்கை திறன்கள் இருப்பதை அந்த ஓட்டுநர் அறிந்து அவர் பவளக்கொடியைத் தொடர்புகொள்கிறார். அந்த மீயியற்கைத் திறன்களின் மூலம் வட மாநிலத்தவர் ஒருவனை அந்தத் தானுந்து கொலை செய்கிறது. ஒருநாள் அந்தத் தானுந்தின் உரிமையாளர் வீட்டிற்கு பவளக்கொடி சென்ற போது அந்த வட மாநிலத்தவர்கள் அந்தத் தானுந்தில் இருந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்ததையும் அவளது நாய் (டோரா) பற்றியும் கூறுகிறார். அந்தச் சிறுமியின் கொலைக்கு எவ்வாறு பவளக்கொடியும் , டோராவும் பழிதீர்த்தார்கள் என்பதைமீதமுள்ள திரைக்கதை தெரிவிக்கிறது.

கதை மாந்தர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

டிசம்பர் 2015 இல் சற்குணம் , நயன்தாரா முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஒரு திகில் படத்தைத் தான் தயாரிக்க இருப்பதாகவும் அதனை தனது உதவி இயக்குனரான தாஸ் ராமசாமி இயக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.[5] மார்ச் 2016 இல் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் நயன்தாரா மற்றும் ஹரிஷ் உத்தமன் நடிக்கும் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. பின்பு நயன்தாராவின் தந்தைக் கதாப்பாத்திரத்தில் நடிக்க தம்பி ராமையா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[6]

துவக்கத்தில் டிக் டிக் டிக் எனப் பெயரிடப்பட்டு (அதிகாரப்பூர்வமற்ற) துவங்கப்பட்ட இந்தத் திரைப்படம் சூலை 2016 இல் டோரா எனப் பெயரிடப்பட்டது.[7]இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவானது இந்தத் திரைப்படத்தின் திகில் காரணமாக சான்றிதழ் கொடுத்தது. படத்தை உருவாக்கியவர்கள் சில மாற்றங்களைச் செய்து படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினர் .ஆனால் தனிக்கை வாரியம் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.[8]

.

வெளியிணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் டோரா (2017 திரைப்படம்)

சான்றுகள்[தொகு]

  1. ""நயன்தாராவின் அடுத்தப் படம் டோராவா?' "". Archived from the original on 2016-07-10. பார்க்கப்பட்ட நாள் 2018-03-12.
  2. "நயன்தாரா தற்போது டோரா"
  3. "நயன்தாராவின் புதிய திகில்திரைப்படம்"
  4. "Nayanthara’s Dora Releases on March 31st" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2017-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170303043308/http://techiewheels.com/entertainment/cinema-news/nayanthara-dora-releases-march-31/. 
  5. "Nayanthara to Act in Director Sargunam's Next Production". பார்க்கப்பட்ட நாள் 25 December 2016.
  6. http://www.indiaglitz.com/thambi-ramaiah-plays-nayanthara-dad-in-new-horror-movie-tamil-news-149268.html
  7. "Nayanthara's next film has been titled Tik Tik". 20 April 2016. பார்க்கப்பட்ட நாள் 25 December 2016.
  8. "Nayanthara’s Dora gets an ‘A’" (in en). Deccan Chronicle. 2017-03-23. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/230317/nayantharas-dora-gets-an-a.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோரா_(2017_திரைப்படம்)&oldid=3660135" இலிருந்து மீள்விக்கப்பட்டது