ஜூஸ் ஜாக்கிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொதுப் பேருந்திலுள்ள யூ.எஸ்.பி. மின்னேற்றி
யு.எஸ்.பி. மின்னேற்றி போலவும் செயல்படும், வீட்டு ஏ.சி. மின்சாரக் கொக்கிகள்

ஜூஸ் ஜாக்கிங் (Juice jacking) என்பது கைபேசி, கைக் கணினி அல்லது கணினிக் கருவிகளை மின்னேற்றும் போது தீப்பொருளைப் பரப்பி சைபர் தாக்குதலை உண்டாக்குதலாகும்.

தாக்குதல்முறை[தொகு]

பொதுவாக விமான நிலையம், இரயில் நிலையம், வணிக வளாகம், விடுதி போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில், தங்கள் மின்சாதனப் பொருட்களை மின்னேற்றிக் கொள்ள ஏதுவாக, யூ.எஸ்.பி மின்னேற்றிகள் இருக்கும். கொந்தர்கள் இதனைப் பயன்படுத்தி, இதில் இணைக்கப்படும் கருவிகளின் தரவுகளை உரிமையாளருக்கே தெரியாமல் திருடுகிறார்கள். 

வரலாறு[தொகு]

பிரைன் கிரப்ஸ் என்பவரே முதன்முதலாக ஜூஸ் ஜாக்கிங் என்ற வகை தாக்குதலுக்குப் பெயரிட்டார். 2011 ஆகத்து மாதத்தில் இதுதொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிட்டார்.[1]

தடுப்புமுறைகள்[தொகு]

மின் சாதன நிறுவனங்களே பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்தினாலும் பொதுவிடங்களில் உள்ள யூ.ஏஸ்.பி.யைப் பயன்படுத்தும் முன் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நேரடியாகக் கருவிகளை இதில் இணைக்காமல் பவர்பேங்க் எனப்படும் சக்தி வங்கியினை இணைத்து மின்னேற்றிவிட்டு, பின்னர் அதைக் கருவியுடன் இணைத்து மின்னேற்றிக் கொள்ளலாம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Beware of Juice Jacking?", Krebs on Security
  2. "சைபர் அட்டாக்கில் இது புதுசு... மின்சாரம் தந்து தகவல் திருடும் 'ஜூஸ் ஜேக்கிங்'!", விகடன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூஸ்_ஜாக்கிங்&oldid=2816886" இலிருந்து மீள்விக்கப்பட்டது