ஹர்திக் பாண்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹர்திக் பாண்டியா
ஆகத்து 2015இல் பாண்டியா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹர்திக் ஹிமான்சு பாண்டியா
பிறப்பு11 அக்டோபர் 1993 (1993-10-11) (அகவை 30)
சூரத், குஜராத், இந்தியா
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது கை மித வேகம்
பங்குபன்முக ஆட்டக்காரர்
உறவினர்கள்குருணால் பாண்டியா (சகோதரர்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 289)26 சூலை 2017 எ. இலங்கை
கடைசித் தேர்வு30 ஆகத்து 2018 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 215)16 அக்டோபர் 2016 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப2 திசம்பர் 2020 எ. ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 58)26 சனவரி 2016 எ. ஆத்திரேலியா
கடைசி இ20ப8 திசம்பர் 2020 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012/13–தற்போதுபரோடா
2015–தற்போதுமும்பை இந்தியன்ஸ் (squad no. 33)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா. இ20ப
ஆட்டங்கள் 11 57 38
ஓட்டங்கள் 532 1167 310
மட்டையாட்ட சராசரி 31.29 34.32 16.31
100கள்/50கள் 1/4 0/6 0/0
அதியுயர் ஓட்டம் 108 92 * 33 *
வீசிய பந்துகள் 937 2392 976
வீழ்த்தல்கள் 17 55 38
பந்துவீச்சு சராசரி 31.05 40.34 25.68
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 6/50 3/31 4/38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 22/– 23/–
மூலம்: ESPNcricinfo, 8 திசம்பர் 2020

ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) என்பவர் இந்தியாவிற்காக பன்னாட்டு அரங்கில் மட்டைப்பந்து விளையாடும் விளையாட்டு வீரர். இவரது முழுப்பெயர் அர்திக் இமான்சூ பாண்டியா. இவர் பந்துவீச்சு, மட்டைவீச்சு, தடுப்பு ஆகிய சகலத் துறையராக அறியப்படுகிறார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஹர்திக் பாண்டியா அக்டோபர் 11, 1993 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஹிமான்சூ பாண்டியா சூரத்தில் ஒரு சிறிய தானுந்து நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். ஹர்திக் பாண்டியாவிற்கு ஐந்து வயதாக இருக்கும் போது அந்த நிறுவனத்தை நிறுத்தி விட்டு அவர் வதோதரா சென்றார். அங்கு தான் தனது இரு மகன்களுக்கான (ஹர்திக், குருனல் பாண்டியா) சிறந்த துடுப்பாட்ட பயிற்சி கிடைக்கும் என்ற காரணத்திற்காக அங்கே குடியேறினார். அவர் வதோதராவில் உள்ள கிரண் மோர் பயிற்சி நிறுவனத்தில் தனது இரு மகன்களையும் சேர்த்தார்.[1] பொருளாதாரச் சிக்கலின் காரணமாக கோர்வாவில் ஒரு வாடகை வீட்டில் இருந்தனர். ஒரு பழைய தானுந்திலேயே அவர்கள் தினமும் துடுப்பாட்ட மைதானத்திற்குச் சென்றனர்.[2] ஒன்பதாம் வகுப்பு வரை எம். கே நடுநிலைப் பள்ளியில் பயின்றார்.[3]

இவருடைய சகோதரர், இளையோர் அளவிலான மன்ற துடுப்பாட்டப் போட்டிகளில் பலவற்றை ஹர்திக் பாண்டியா தனி ஆளாக வென்று கொடுத்தார் எனக் கூறியுள்ளார்.[1] ஹர்திக் பாண்டியா இந்தியன் எக்சுபிரசுக்கு அளித்த பேட்டியில் தனது மனோபாவத்தின் காரணமாக மாநில அணியிலிருந்து விலக நேரிட்டது எனக் கூறியுள்ளார். தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தன்னால் இயலவில்லை எனக் கூறியுள்ளார்.[4]

உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகள்[தொகு]

2013 ஆம் ஆண்டிலிருந்து பரோடா துடுப்பாட்ட அணியில் விளையாடி வருகிறார். 2013 -2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற சயது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் அந்த அணி வெற்றி பெறுவதில் முக்கியப் பங்காற்றினார். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் விளையாடினார். அந்தப் போட்டியில் 8 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அதே போட்டியில் இலக்குகளை (விக்கெட்) எடுத்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அந்தப் போட்டி முடிந்தவுடன் , சச்சின் டெண்டுல்கர் இவரிடம் நீங்கள் இன்னும் 18 மாதங்களில் இந்திய அணிக்காக விளையாடுவாய் எனக் கூறினார். அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே 2016 ஆசிய கோப்பை மற்றும் 2016 ஐசிசி உலக இருபது20 போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது. அதில் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து அணி வெற்றிபெற உதவிகரமாக இருந்தார்.[5] அந்தப் போட்டியில் அதிகமாக ஆறு ரன்கள் எடுத்ததற்கான யெசு வங்கி விருதைப் பெற்றார்.[6]

2016 ஆம் ஆண்டு சனவரியில் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் விதர்பா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் பரோடா அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா 8 ஆறு ரன்கள் உட்பட 86 ஓட்டங்கள் எடுத்து ஆறு இலக்குகள் (விக்கெட்) வித்தியாசத்தில் வெற்றிபெற காரணமாக இருந்தார்.[7]

இருபது20[தொகு]

2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். அக்டோபர் 14, ஐதராபாத்து மைதானத்தில் கோவா மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியில் 42 பந்துகளில் 52 இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி எட்டு இலக்குகளில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார். இந்தப் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பையில் 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார். பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய போது 28 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைப் பெற்று அந்த அணியை 83 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது. மார்ச் 23 அன்று வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய பரபரப்பான போட்டியில் கடைசி 3 பந்துகளில் 2 இலக்குகளைப் பெற்று 1 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.[8]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

2016 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.அக்டோபர் 16 தர்மசாலா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 7 ஓவர்களை வீசி 31 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மூன்று இலக்குகளைக் கைப்பற்றினார். மட்டையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணி ஆறு இலக்குகளால் வெற்றி பெற்றது. இதில் ஆட்ட நாயகன் விருதினையும் இவர் பெற்றார்.[9] 2019 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி ஐசிசி உலகக் கிண்ணத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடியது. சூலை 9 மான்செச்டர் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் பத்து ஓவர்களை வீசி 55 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். மட்டையாட்டத்தில் 66 பந்துகளைச் சந்தித்து 32 ஓட்டங்களை எடுத்து சாண்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[10]

ஆட்ட நாயகன் விருது[தொகு]

வ. எண் எதிரணி இடம் நாள் போட்டி செயல்பாடு முடிவு
1  நியூசிலாந்து தர்மசாலா 16 அக்டோபர் 2016 7–0–31–3 ; DNB  இந்தியா ஆறு இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது[11]
2  ஆத்திரேலியா சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்

சென்னை

17 செப்டம்பர் 2017 83 (66 பந்துகள்: 5x4, 5x6) ; 4–0–28–2  இந்தியா 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது (D/L).[12]
3  ஆத்திரேலியா இந்தூர் 24 செப்டம்பர் 2017 10-0-58-1 ; 78 (72 பந்துகள்: 5x4, 4x6)  இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[13]

பன்னாட்டு இருபது 20[தொகு]

முதல் பன்னாட்டு இருபது20 போட்டியை சனவரி 27 , 2016 அன்று ஆத்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார்.[14] அப்போது அவருக்கு வயது 22. இவருடைய முதல் இலக்காகக் கிறிஸ் லின்னை வெளியேற்றினார். இந்தப் போட்டியில் மூன்று ஓவர்களை வீசி 31 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணி 37 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[15] 2019 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. செப்டம்பர் 22 இல் பெங்களூரு துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் 18 பந்துகளில் 14 ஓட்டங்கள் எடுத்து ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒன்பது இலக்குகளில் வெற்றி பெற்றது.[16]

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி[தொகு]

2017 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .சூலை 26, காலி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 49 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்து சங்காரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் எட்டு ஓவர்களை வீசி 51 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஏழு ஓவர்களை வீசி 21 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[17]

2019 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .ஆகஸ்டு 30 சவுதம்ப்டன் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல் ஆட்டப் பகுதியில் 5 பந்துகளில் 4 ஓட்டங்களை எடுத்து அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் எட்டு ஓவர்களை வீசி 51 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஒன்பது ஓவர்களை வீசி 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. மட்டையாட்டத்தில் 7 பந்துகளைச் சந்தித்து ஓட்டங்கள் எதுவும் எடுக்காம்ல் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 60 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

வெளியிணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Mehta, Jigar (25 February 2016). "From unknown game-changer to national team: The six weeks that changed Hardik Pandya's life". Firstpost. http://www.firstpost.com/sports/from-unknown-game-changer-to-national-team-six-weeks-that-changed-hardik-pandyas-life-2563550.html. பார்த்த நாள்: 2 June 2017. 
  2. Tere, Tushar (25 May 2017). "Pandya brothers finally build their dream home". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/vadodara/pandya-brothers-finally-build-their-dream-home/articleshow/58831111.cms. பார்த்த நாள்: 2 June 2017. 
  3. Tere, Tushar (17 January 2015). "'Every individual has different set of talents'". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/vadodara/Every-individual-has-different-set-of-talents/articleshow/47703096.cms. பார்த்த நாள்: 2 June 2017. 
  4. Sundaresan, Bharat (26 May 2017). "I always dreamt big. I wanted cars…and the only way I could get that was through my sport, says Hardik Pandya". The Indian Express. http://indianexpress.com/article/sports/cricket/i-always-dreamt-big-i-wanted-cars-and-the-only-way-i-could-get-that-was-through-my-sport-hardik-pandya-4674067/. பார்த்த நாள்: 2 June 2017. 
  5. "List of players sold in IPL 8 auction". Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2015.
  6. "M43: CSK vs MI – Yes Bank Maximum Sixes". Archived from the original on 2015-05-15. பார்க்கப்பட்ட நாள் 2018-03-09.
  7. Pandya sixathon secures Baroda victory
  8. "India win after WWW in last three balls". ESPN Cricinfo. 23 March 2016. http://www.espncricinfo.com/ci/content/story/988173.html. பார்த்த நாள்: 27 July 2017. 
  9. "Pandya's debut three-for sets up India's six-wicket win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 October 2016.
  10. "Full Scorecard of India vs New Zealand, World Cup, 1st Semi-final - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
  11. "New Zealand in India ODI Series, 2016–17 – 1st ODI match". பார்க்கப்பட்ட நாள் 16 October 2016.
  12. "New Zealand in India ODI Series, 2016–17 – 1st ODI match". பார்க்கப்பட்ட நாள் 17 September 2017.
  13. "3rd ODI (D/N), Australia tour of India at Indore, Sep 24 2017". பார்க்கப்பட்ட நாள் 24 September 2017.
  14. "India tour of Australia, 1st T2020I: Australia v India at Adelaide, Jan 26, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
  15. "Full Scorecard of Australia vs India 1st T20I 2016 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
  16. "Full Scorecard of India vs South Africa 3rd T20I 2019 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
  17. "Full Scorecard of Sri Lanka vs India 1st Test 2017 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்திக்_பாண்டியா&oldid=3573678" இலிருந்து மீள்விக்கப்பட்டது