அவள் (2017 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவள்
இயக்கம்மிலிந்த் ராவ்
தயாரிப்புசித்தார்த்
கதைமிலிந்த் ராவ் , சித்தார்த்
இசைகிரிஷ்
நடிப்புசித்தார்த்
ஆண்ட்ரியா ஜெராமையா
ஒளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா
படத்தொகுப்புலாரன்ஸ் கிஷோர்
கலையகம்எடாகி என்டெர்டெயின்மென்ட்
வெளியீடு3 நவம்பர் 2017 (2017-11-03)
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
தமிழ்
தெலுங்கு [1]

அவள் (aval) (English: She) இந்தி ( தெ ஹவுஸ் நெக்ஸ்டு டோர்) தெலுங்கு (க்ருஹம்) என்பது 2017 ஆம் ஆண்டு வந்த திகில் திரைப்படம் . இதனை உடன் எழுதி இயக்கியவர் மிலிந்த் ராஜு. சித்தார்த், ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்தார்த் இந்தத் திரைப்படத்தில் உதவி எழுத்தாளராகவும், உதவி தயாரிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். இந்தத் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ்

இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவானது.[2] 2017, நவம்பர் 3 அன்று வெளியானத் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.[3]

கதையின் மையக்கரு[தொகு]

இந்தத் திரைப்படம் பழங்கால ஒரு ஜப்பானியக் குடும்பத்தில் இருந்து தொடங்குகிறது. அவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக சென்றுகொண்டிருகிறது, அப்போது அந்தத் தாய் கர்ப்பமடைகிறாள். பின்பு நிகழ்காலத்திற்கு வருகிறது. நிகழ்காலத்தில் மருத்துவர் கிருஷ்ணகாந்த் (சித்தார்த்), லட்சுமி (ஆண்ட்ரியா ஜெரெமையா) ஆகியோர் தங்கள் வாழ்க்கையின் இனிமையான் தருணங்களை பகிர்ந்துகொள்கின்றனர். அப்போது அவர்களின் வீட்டிற்கு அருகில் பாலின் (அதுல் குல்கர்ணி) குடும்பம் குடியேறுகிறது.

இரண்டு குடும்பத்தினரிடையே சுமூகமான உறவு இருந்தது. பாலின் மூத்த மகள் ஜெனிக்கு சித்தார்த்தின் மீது ஒரு ஈர்ப்பு வருகிறது. அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு இரவு உணவின்போது ஜெனி கிணற்றுக்குள் விழுவதைப் பார்த்து சித்தார்த் அவரை காப்பாற்றுகிறார். அந்த இரவில் ஜெனி திடீரென்று ஒரு நோயினால் தாக்கப்படுகிறார் அப்போது மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி அவருக்கு உதவி செய்கிறார். மற்றொரு நாள் ஜெனி தனது வீட்டின் அருகே இருக்கும் மலையின் மீது இருந்து குதிக்க முற்படுகிறார், சாராவும் அவரைப் பின்தொடர்கிறார் ஆனால் இறுதியில் கிருஷ்ணமூர்த்தி சாராவை காப்பாற்றுகிறார்.

பால் ஜெனியைக் காப்பாற்ற முயலும்போது தானே எதுவும் பேசாமல் வீட்டிற்கு வருகிறார். பின்பு அவரை ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்கிறார். ஒருநாள் மனநல மருத்துவர் பாலுடன் அவருடைய வீட்டிற்குச் செல்கிறார். அப்போது, அங்கு இருக்கும் நூல்கள், மற்றும் ஜெனியின் தற்போதைய கூகிள் தேடல்கள் போன்றவை பேய் தொடர்பானவைகளாக இருந்ததை அறிகிறார். எனவே அவர் ஒரு ஆன்மாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற முடிவுக்கு வருகிறார்.

லட்சுமி தான் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய கணவனிடம் கூறிய சில நாளில் ஒரு பயங்கர உருவத்தைப் பார்த்து தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே விழுகிறார். அதில் வயிற்றில் அவருக்கு அடிபடுகிறது, ஆனால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. கிரிஷ் ஒரு அறுவை சிகிச்சையின் போது அந்த பயங்கர உருவத்தினைப் பார்த்து பயந்து தவறான சிகிச்சை செய்ததினால் அவர் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். ஒரு காவலாளியின் உதவியுடன் கிரிஷ் சாட்சியாக இருக்கக்கூடிய ஒரு பெண்ணைப் பார்க்க கிராமத்திற்கு சென்று விசாரிக்கின்றனர். அவர், ஒரு ஜப்பானிய வணிகர் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாகவும் , அவர் சாத்தானை வழிபடுபராகவும் தன் மனைவி வயிற்றில் இருக்கும் சிசுவை சாத்தானுக்கு வலய மறைப்பு அன்று பலிகொடுத்தால் ஆண்குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் கூறுகிறார்.

இறுதியில் பாதிரியாரின் உதவியுடன் ஆன்மாவினால் பாதிக்கப்பட்டிருப்பது கிருஷ் தான் என்பதை அறிந்து அந்தக் குடும்பத்தை ஆண்ட்ரியா ஜெரெமையா (லட்சுமி), பால் மற்றும் அவரின் நண்பர்களின் உதவியுடன் அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். லட்சுமிக்குப் பிறந்த ஆண் குழந்தை அந்த சாத்தானின் கண் கொண்டு இருப்பதாக திரைப்படத்தை முடித்திருப்பார்கள்.

கதை மாந்தர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இந்தத் திரைப்படத்தின் முறையான அறிவிப்பு சித்தார்த் அவர்களால் சூன்,2016 அன்று வெளியிடப்பட்டது. அதில் ஆண்ட்ரியா ஜெரெமையா உடன் நடிக்க இருப்பதாகவும் அதனை காதல் முதல் கல்யாணம் எனும் இன்னும் வெளிவராத திரைப்படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார். இந்தத் திரைப்படத்தின் தலைப்பு தெ ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் எனவும் , ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்[2]. அக்டோபர்,2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்ததாக ஆண்ட்ரியா ஜெரெமையா தெரிவித்தார்.[4]

பாடல்கள்[தொகு]

அவள்
வ.எ தலைப்பு பாடலாசிரியர் பாடகர்கள் நீளம்
1. காரிகை கண்ணே முத்தமிழ் விஜய் பிரகாஷ் ,சக்தி ஸ்ரீ கோபாலன் 5:20
2. யாரடா மார்க் தாமஸ், ஆண்ட்ரியா ஜெரெமையா 4:25
3. சியோ, சியோ மா சென் -யு மக்லின், பூர்ணா எம் 2:25
4. அவள் கரு பாடல் இசை உபகரணங்கள் 1:54

சான்றுகள்[தொகு]

  1. Siddharth. "Viacom18 & Etaki Entertainment jointly produce 'The House next door' (working title). Dir - Milind Rau. Shoot starts August. Trilingual". பார்க்கப்பட்ட நாள் 15 November 2017.
  2. 2.0 2.1 "Andrea and Sid to team up for a trilingual film". The Times of India. 12 June 2016. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Andrea-and-Sid-to-team-up-for-a-trilingual-film/articleshow/52702745.cms. பார்த்த நாள்: 13 June 2016. 
  3. "Aval movie review: The Siddharth and Andrea Jeremiah starrer will test your immunity to horror films". 3 November 2017. பார்க்கப்பட்ட நாள் 15 November 2017.
  4. "Andrea Jeremiah Finishes The House Next Door Shoot; Talks about Taramani, and its Portrayal of Relationships". 21 October 2016. பார்க்கப்பட்ட நாள் 15 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவள்_(2017_திரைப்படம்)&oldid=3709348" இலிருந்து மீள்விக்கப்பட்டது