விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைப் போட்டி தொடர்பான ஐயங்கள், கேள்விகளை இங்கு தெரிவிக்கலாம்.

பதிவேற்றம் செய்தல்[தொகு]

வணக்கம் நான் இவான்கா டிரம்ப் எனும் கட்டுரையை விரிவாக்கியுள்ளேன் ஆனால் அதனை பதிவேற்றம் செய்ய இயலவில்லை . உதவி செய்யவும் . நன்றி Dsesringp (பேச்சு) 10:09, 28 பெப்ரவரி 2018 (UTC)

@Dsesringp: போட்டிக்கான காலக்கெடு இன்னும் தொடங்கவில்லை. மார்ச் 1 முதல் தான் ஆரம்பம் என்பதைக் கருத்தில் கொள்க. போட்டிக்குக் கட்டுரைகளைப் பதிவு செய்யும் Fountain கருவிக்கான இணைப்பு போட்டிப் பக்கத்தில் விரைவில் பகிரப்படும் அதில் முன்பதிவு செய்தால் போதும். சிலந்தி மனிதன், இவாங்கா டிரம்ப் போன்ற கட்டுரையில் இட்டுள்ள முன்பதிவுக் குறிப்புகள் தேவையில்லை நீக்கிவிடுங்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 11:25, 28 பெப்ரவரி 2018 (UTC)

-நீச்சல்காரன் (பேச்சு) 11:25, 28 பெப்ரவரி 2018 (UTC) நீக்கம் செய்து விட்டேன் நன்றி. Dsesringp (பேச்சு) 02:46, 1 மார்ச் 2018 (UTC)

இலங்கைப் பயனர்கள் போட்டியில் கலந்து கொள்ளல்[தொகு]

இது இந்தியா முழுமைக்குமான திட்டம் என்பதால் குறிப்பிட்ட விதிகளையும் பரிசுகளையும் பொதுவாக எழுதினாலும், மீண்டும் படித்துப் பார்த்தால் எனக்கே உறுத்தலாக இருக்கிறது :( ஏன் எனில், இது வரை நாம் தமிழ் விக்கிப்பீடியாவில் இலங்கை/இந்தியா என்று எதனையும் பிரித்து நடத்தியதில்லை. மூன்று மாதங்களுக்கான மொத்தப் பரிசுத் தொகையுமே 18,000 இந்திய ரூபாய் தான் என்பதால், ஒரு வேளை இலங்கைப் பயனர்களும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றால், நாம் 15ஆம் ஆண்டு கொண்டாட்டத்துக்குப் பெற்றுள்ள நல்கை தொகையில் இருந்து ஒரு சிறு தொகையை ஒதுக்கிப் பரிசுகளை வழங்க இயலுமே! இவ்வாறு செய்வது நம் ஒற்றுமையையும் ஓங்கச் செய்யும். இலங்கையில் இருந்து அதிகம் தேடப் படும் தலைப்புகளையும் கூகுளிடம் இருந்து பெற முடிகிறதா என்று பார்க்கிறேன். இதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உள்ளடக்கத்தையும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க முடியும். தமிழுக்கான இச்சிக்கலை யோசிக்கும் போது தான் வங்க மொழிக்கும் இதே சிக்கல் இருப்பதை உணர முடிகிறது. விக்கிமீடியா வங்க தேசக் கிளையிடமும் உதவி கோரலாம் என்று இருக்கிறேன். உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும். @Sancheevis, Mayooranathan, Sivakosaran, Shriheeran, Shriheeran, and Kanags: நன்றி. --இரவி (பேச்சு) 01:57, 1 மார்ச் 2018 (UTC)

👍 விருப்பம். ஆம், 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் கட்டுரைப் போட்டிகளுக்காகப் பெற்றுக்கொண்ட நல்கையில் ஒரு தொகையை ஒதுக்கிப் பரிசளிக்க முடியும். --சிவகோசரன் (பேச்சு) 14:53, 1 மார்ச் 2018 (UTC)

ஆம், 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் கட்டுரைப் போட்டிகளுக்காகப் பெற்றுக்கொண்ட நல்கையில் ஒரு தொகையை ஒதுக்கிப் பரிசளிக்க முடியும்.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:50, 1 மார்ச் 2018 (UTC)

குறிப்பு[தொகு]

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி என்ற வார்ப்புருவை கட்டுரையில் இணைக்கத் தேவையில்லை. மாறாக பேச்சுப்பக்கத்தில் பயன்படுத்த அறிவுறுத்தவும். மேலும், ஏற்கெனெவே உருவாக்கிய கட்டுரைகள் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியின் போது உருவாக்கப்பட்ட கட்டுரைகள் என்ற பகுப்பில் சேர்க்கப்படுவது தவிர்க்கப்படுவது நல்லது. அல்லது வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியின் போது தொகுக்கப்பட்ட கட்டுரைகள் என்று பகுப்பிடுக. நன்றி. --AntanO (பேச்சு) 21:57, 5 மார்ச் 2018 (UTC)

@AntanO: கவனிக்கிறோம். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. --இரவி (பேச்சு) 23:12, 5 மார்ச் 2018 (UTC)
@AntanO and Viswaprabha: அன்டன், முதலில் நீங்கள் சுட்டிக் காட்டிய படி தொகுக்கப்பட்ட கட்டுரைகள் என்று ஒற்றைப் பகுப்பே கொண்டிருந்தோம். பிறகு, புதிதாக உருவான கட்டுரைகள், ஏற்கனவே இருந்து கூடுதலாக விரிவாக்கப்பட்ட கட்டுரைளைத் தனியே இனங்காணும் பொருட்டு புதிய பகுப்பு முறையைக் கொண்டிருந்தோம். அதற்கேற்ப வார்ப்புருவும் இருந்தது. அனைத்து இந்திய மொழிகளிலும் இந்தப் பகுப்பு முறை ஒரே முறையில் கையாளப்பட்டு அதனை வைத்து Google Sheetல் சில நிரல்களை இயக்கி போட்டியின் தாக்கத்தை அளவிட்டு வந்தோம். எனவே, அண்மையில் கண்ட பகுப்பு முறையில் குறிப்பாக ஏதேனும் சிக்கல் இருந்ததா என்று அறிய விரும்புகிறேன். இல்லையெனில், ஏற்கனவே இருந்த முறைக்கு மீ்ள்விப்பது உதவும். --இரவி (பேச்சு) 14:06, 16 ஏப்ரல் 2018 (UTC)
Thank you for the understanding. Hope the reverting will be soon withdrawn or suitably amended. The only requirement is to keep the categorization switches and conditions in tact. The graphics and text presentation format may be modified in any fashion that you may feel appropriate. Viswaprabha (பேச்சு) 14:19, 16 ஏப்ரல் 2018 (UTC)
சுருக்கமான ஓர் எடுத்துக்காட்டு: பேச்சு:ரசினிகாந்த் இக்கட்டுரை ஏற்கெனவே உருவாக்கப்பட்டது. ஆனால், வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2018 மூலம் உருவாக்கிய கட்டுரைகள் பகுப்பில் உள்ளது. இதனை விளங்கப்படுத்த வார்ப்புவை மீளமைத்துள்ளேன். --AntanO (பேச்சு) 15:14, 16 ஏப்ரல் 2018 (UTC)
@AntanO: சிக்கலைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. விரிவாக்கிய கட்டுரைகளைத் தனியே இனங்கண்டு அவற்றிற்கான வார்ப்புருவில் expanded=yes என்று சேர்க்க வேண்டி இருக்கிறது. இது போல் பல கட்டுரைப் பேச்சுப் பக்கங்களில் Kanags உரிய மாற்றங்களைச் செய்து வந்திருக்கிறார். இனி நானும் கவனிப்பதுடன் பங்கேற்பாளர்களையும் உடனுக்குடன் கவனித்து மாற்றச் சொல்கிறேன். எனவே, வார்ப்புரு முன்பிருந்தவாறே தொடர வேண்டுகிறேன். இது போட்டியின் உண்மையான தாக்கத்தை அளவிட உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 11:12, 17 ஏப்ரல் 2018 (UTC)
👍 விருப்பம்--AntanO (பேச்சு) 15:37, 17 ஏப்ரல் 2018 (UTC)
Thanks again. Apart from this, I myself shall be overlooking any misfitting placement of templates in all wikis. Viswaprabha (பேச்சு) 07:39, 18 ஏப்ரல் 2018 (UTC)

எழுதிய கட்டுரை இணையாமல் இருப்பது[தொகு]

பத்மினி சேத்தூர் என்ற தலைப்பில் ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து, இத்திட்டத்திற்குரிய கட்டுரையை, மொழிபெயர்த்து எழுதினேன். இணைக்க முயற்சிக்கும்போது இணைப்புப்பட்டியலில் என் பெயரோ, கட்டுரையின் தலைப்போ இணையவில்லை. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:23, 14 மார்ச் 2018 (UTC)

@பா.ஜம்புலிங்கம்: உங்கள் சார்பாக கட்டுரையைச் சேர்க்க முயன்றேன். கட்டுரையில் 266 சொற்களே உள்ளதாக கருவி சொல்கிறது. இன்னும் சற்று கட்டுரையை விரிவாக்கி விட்டு முயன்று பாருங்கள். --இரவி (பேச்சு) 14:10, 14 மார்ச் 2018 (UTC)
@Ravidreams: நேகா சர்மா கட்டுரை எவ்வளவு விரிவாக்கினாலும் 246 வார்த்தைகளையே காட்டுகிறது (ஆனால் wordcounttools ல் 386 வார்த்தைகளைக் காட்டுகிறது). எனவே அதை இணைக்க இயலவில்லை. நேரம் கிடைக்கும் போது சற்று கவனியுங்கள். நன்றி.--இரா. பாலாபேச்சு 11:11, 24 மார்ச் 2018 (UTC)
@Balurbala: என்னாலும் இணைக்க முடியவில்லை. கருவியை உருவாக்குபவரிடம் கேட்டுப் பார்க்கிறேன். அது வரை இணைப்பதில் சிகல் உள்ள இத்தகைய கட்டுரைகளை இங்கு இடலாம். இவை போட்டிக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். --இரவி (பேச்சு) 15:23, 24 மார்ச் 2018 (UTC)

உணவுப் பொறியியல் கட்டுரையையும் ஊற்றுக் கருவியில் இணைக்க முடியவில்லை.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 00:56, 25 மே 2018 (UTC)[பதிலளி]

மேலதிக தலைப்புகள்[தொகு]

விண்வெளி அறிவியல் தொடர்பான சில தலைப்புகளை இணைக்க இயலுமா? நன்றி.--இரா. பாலாபேச்சு 15:28, 16 மார்ச் 2018 (UTC)

@Balurbala: இன்னும் என்னென்ன தலைப்புகள் சேர்க்கலாம் என்று இங்கு கருத்து கேட்டு வருகிறார்கள். அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய கட்டுரைகள் என்ற வகையில் இப்பட்டியலை உருவாக்க முனைகிறார்கள். உங்கள் பரிந்துரைகளைச் சேர்க்க வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 18:10, 22 மார்ச் 2018 (UTC)

வேண்டுகோள்[தொகு]

வணக்கம், “நீரின்றி அமையாது உலகு” மானிடர்க்கும், மற்றும் மற்ற உயிர்க்கும் இன்றியமையாத ஒன்று நீர், ஆக நீராதாரங்களை முன்னிலைப்படுத்தி கட்டுரைத் தலைப்புகளை வழங்கலாம், எ கா: ஏரிகள், ஆறுகள் “ஆகரமே எவ்வுயிர்க்கும் ஆதாரம்” ஆதலால் விவசாயம் தொடர்பான தலைப்புகளையும் தொகுத்தளிக்கலாம். மேற்குறிப்பிட்டதை ஆவணச் செய்யும்படி உங்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்.நன்றிகள்... அன்பு♥முனுசாமிᗔ உறவாடுகᗖᗗஉரையாடுக! : 08:55, 22 மார்ச்சு 2018 (UTC)[பதிலளி]

@Anbumunusamy: இன்னும் என்னென்ன தலைப்புகள் சேர்க்கலாம் என்று இங்கு கருத்து கேட்டு வருகிறார்கள். அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய கட்டுரைகள் என்ற வகையில் இப்பட்டியலை உருவாக்க முனைகிறார்கள். உங்கள் பரிந்துரைகளைச் சேர்க்க வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 18:10, 22 மார்ச் 2018 (UTC)

விரிவாக்கம்[தொகு]

போட்டி விதிமுறைகளில் கட்டுரை விரிவாக்கமும் தகுதியுடையதாக உள்ளது. ஆனால் நான் தேங்காய் எண்ணெய் கட்டுரையை 300 சொற்களுக்கு மேல் விரிவாக்கியும் பவுண்டனில் பதிவேற்ற இயலவில்லை; முன்பே பயனர் இக்கட்டுரையை பதிவேற்றியுள்ளதாக செய்தி வருகிறது. அதாவது ஒருவர் உருவாக்கிய அல்லது விரிவாக்கிய கட்டுரைக்கு மற்றொருவர் விரிவாக்க இயலா நிலை உள்ளது. இது போட்டி விதிகளின்படியானதா ? --மணியன் (பேச்சு) 16:08, 22 மார்ச் 2018 (UTC)

ஒரே கட்டுரைக்கு இருவருக்கு மதிப்பெண்கள் அளிக்க முடியாது என்பதால் முதலில் 9000 பைட்டுகள் மற்றும் 300 சொற்கள் சேர்ப்பவர் கணக்கில் கட்டுரை சேரும். இரண்டாவதாகச் சேர்க்க முயலும் போது கருவி ஏற்காது என்று நினைக்கிறேன். குழப்பத்துக்கு வருந்துகிறேன். அடுத்து கட்டுரைகளை விரிவாக்கும் போது போட்டிக் காலத்தில் ஏற்கனவே கட்டுரைகளை விரிவாக்கியுள்ளார்களா என்று சரிபார்த்த பின் விரிவாக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 18:01, 22 மார்ச் 2018 (UTC)
நன்றி இரவி. புரிந்து கொண்டேன். குழப்பமில்லை--மணியன் (பேச்சு) 10:50, 23 மார்ச் 2018 (UTC)

கூடுதல் தலைப்புகள்[தொகு]

இன்னும் என்னென்ன தலைப்புகள் சேர்க்கலாம் என்று இங்கு கருத்து கேட்டு வருகிறார்கள். அனைத்து இந்திய மொழி விக்கிப்பீடியாக்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய கட்டுரைகள் என்ற வகையில் இப்பட்டியலை உருவாக்க முனைகிறார்கள். உங்கள் பரிந்துரைகளைச் சேர்க்க வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 18:10, 22 மார்ச் 2018 (UTC)

போட்டிக்கு விரிவாக்காத கட்டுரை[தொகு]

சோதனைக்கு ஒரு பழைய கட்டுரையை புவியின் வரலாறு கருவியில் இட்டதால் சேர்ந்துவிட்டது. கருவியிலிருந்து நீக்கவோ சேர்க்கவோ தனியாக முடியாது எனத் தெரிகிறது. உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து மன்னித்துடுங்கள். :) -நீச்சல்காரன் (பேச்சு) 13:43, 28 மார்ச் 2018 (UTC)

@Neechalkaran: அதனால் என்ன, மதிப்பிடும் போது புள்ளிகள் தராமல் தவிர்த்து விடுவோம். பல ஆண்டுகள் கழித்து நீங்கள் மீண்டும் கட்டுரைப் பங்களிப்புகளைத் தொடர்வது மிக்க மகிழ்ச்சி--இரவி (பேச்சு) 14:04, 28 மார்ச் 2018 (UTC)

போட்டியாளர்களுக்கான குறிப்புகள்[தொகு]

@Rsmn, உலோ.செந்தமிழ்க்கோதை, கி.மூர்த்தி, TNSE Mahalingam VNR, Dsesringp, and Arulghsr: கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு வரும் அனைவருக்கும் நன்றி. சில பொதுவான குறிப்புகள்.

  • சரியாக, 9,000 பைட்டுகள் விரிவாக்கியதோடு கட்டுரைகளை நிறுத்த வேண்டாம். இவ்வாறு செய்யும் போது, மேற்கோள்கள் முதலியவற்றை நீக்கிப் பார்க்கும் போது 300 சொற்கள் அளவு கட்டுரை விரிவாகி இருப்பதில்லை. https://wordcounttools.com/ கொண்டு கட்டுரையில் உள்ள சொற்கள் எண்ணிக்கை அறியலாம். இக்குறிப்பினை, நீங்கள் ஏற்கனவே போட்டிக்கு விரிவாக்கிய கட்டுரைகள் முதற்கொண்டு இனிவரும் கட்டுரைகளிலும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
  • Fountain கருவியில் கட்டுரையைச் சேர்க்கும் போது அது தானாகவே பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு சேர்க்கும். ஆனால், ஏற்கனவே இருந்து நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகள் உட்பட அனைத்துக் கட்டுரைகளையும் புதிதாக உருவாக்கிய கட்டுரைகள் என்றே குறிப்பிடும். இதனைத் தவிர்க்க, பேச்சுப் பக்கத்தைக் கவனித்து வார்ப்புருவில் |expanded=yes என்று சேர்த்து விடுங்கள். எடுத்துக்காட்டுக்கு, இந்தத் தொகுப்பைக் காணுங்கள்.
  • தகவற்பெட்டி சேர்க்க வாய்ப்புள்ள கட்டுரைகளில் அதனையும் வழமை போல் சேர்த்து உதவிடுங்கள்.

வேறு ஏதேனும் ஐயங்கள், கேள்விகள் இருப்பின் குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 12:03, 18 ஏப்ரல் 2018 (UTC)

சிவப்பு விக்கி இணைப்புகள்: போட்டிக் கட்டுரைகளில் சிவப்பு இணைப்புக்கள் இருக்கலாகாதா ? சில நுட்பக் கட்டுரைகளில்பயன்படுத்தும் கலைச்சொற்களுக்கு மட்டும், சீரான கலைச்சொல்லாக்கம் நிகழ, இது தேவையானதாகக் கருதுகிறேன். பெயர்சொற்களுக்கும் இடங்களுக்கும் தவிர்க்கலாம். மிகவும் கண்டிப்பு எனில் இவற்றிற்கு மூன்றுவரி குறுங்கட்டுரைகள் தேவையா ?--மணியன் (பேச்சு) 03:44, 8 மே 2018 (UTC)[பதிலளி]
@Rsmn: தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். இந்தப் பக்கத்தைக் கவனிக்காமல் விட்டு விட்டேன். சிகப்பு இணைப்புகளே கூடாது என்று போட்டி விதி ஏதும் இல்லை. சொல்லப் போனால், தகுந்த இடங்களில் சிகப்பு இணைப்புகளைத் தருவது புதிய கட்டுரைகள் உருவாக்கத் தூண்டும். இது விக்கிப்பீடியா வழமையே. தொடர்புடைய கட்டுரைகள் உருவாக்கப்பட வாய்ப்புண்டு என்று கருதும் இடங்களில் சிகப்பு இணைப்புகள் தரலாம். இது ஒவ்வொரு பங்களிப்பாளரின் மதிப்பீட்டைப் பொருத்தே. நீங்கள் தந்துள்ள வரையறையும் ஏற்புடையதே. ஆனால், இவை எண்ணிக்கையில் மிகுந்து பக்கத்தின் தோற்றத்தைக் கெடுக்காதவாறு அமைய வேண்டும். சில பயனர்கள் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிபெயர்க்கும் போது சிகப்பு இணைப்புகளை அப்படியே விட்டு விடுவதால் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. அதே போல் மேற்கோள்கள் போன்ற துணைப்பகுதிகளில் சிகப்பு இணைப்புகள் இருப்பதைத் தவிர்க்கலாம். @Dineshkumar Ponnusamy: கவனிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 03:51, 28 மே 2018 (UTC)[பதிலளி]

தவறுதலாக சேர்க்கப்பட்ட கட்டுரையை நீக்க வேண்டுதல் குறித்து[தொகு]

கிழக்கு சைபீரியக் கடல் என்ற கட்டுரை என்னால் உருவாக்கப்பட்டது. ஆனால், கிழக்கு சைபீரியன் கடல் என்ற பெயரில் முன்னதாக ஒரு பயனர் இதே கட்டுரையானது உருவாக்கப்பட்டு இருந்துள்ளது. தற்போது முன்னதாக உருவாக்கப்பட்ட கட்டுரை தானியங்கித் தமிழாக்கம் என்பதைச் சுட்டிக்காட்டி நீக்கப்பட்டுள்ளது. நான் உருவாக்கிய கிழக்கு சைபீரியக் கடல் கட்டு்ரையை கணக்கில் எடுத்துக் கொண்டு முன்பு தவறுதலாக சேர்க்கப்பட்ட கிழக்கு சைபீரியன் கடல் கட்டுரையை நீக்கி விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.மகாலிங்கம் (பேச்சு) 06:19, 5 மே 2018 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று --இரவி (பேச்சு) 03:47, 28 மே 2018 (UTC)[பதிலளி]

கட்டுரையின் புள்ளி[தொகு]

நுரையீரல் சவ்விடை வளிமத்தேக்கம் எனும் கட்டுரையை சமர்ப்பித்தேன், ஆனால் நடுவர்களால் புள்ளி வழங்கப்படவில்லை. என்ன பிரச்சனை என்று தெரிவிக்க முடியுமா?--சி.செந்தி (உரையாடுக) 03:41, 13 மே 2018 (UTC)[பதிலளி]

@Drsrisenthil: கட்டுரை தற்போது ஏற்கப்பட்டுள்ளது. 1000+ கட்டுரைகள் குவிந்திருப்பதால் மதிப்பீட்டுப் பணிப்பளு மட்டும் தான் தாமதத்துக்கு ஒரே காரணம். தொடர்ந்து உற்சாகத்துடன் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவை வெல்ல வைக்க வேண்டுகிறோம். நன்றி--இரவி (பேச்சு) 01:56, 28 மே 2018 (UTC)[பதிலளி]

இக்கட்டுரை கணக்கில் வருமா?[தொகு]

சமவெளி என்ற புதிய கட்டுரையை அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது, இப்போட்டிக்காக உருவாக்கி வருகிறேன். மற்றொரு நண்பர் 70 பைட்டுகளை இதுபோல இணைத்துள்ளார். எனவே, இக்கட்டுரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா?--உழவன் (உரை) 14:22, 25 மே 2018 (UTC)[பதிலளி]

@Info-farmer: கட்டுரை உங்கள் கணக்கில் ஏற்கப்பட்டுள்ளது. கட்டுரையில் முதலில் 9000 பைட்டுகள் மற்றும் 300 சொற்கள் சேர்க்கும் பயனர் பெயரில் கட்டுரை கணக்கில் கொள்ளப்படும். இதில் ஏதும் குழப்பம், விடுபடல்கள் இருந்தால் என்னையோ தினேசையோ தொடர்பு கொள்ளுங்கள். --இரவி (பேச்சு) 01:24, 28 மே 2018 (UTC)[பதிலளி]

ராதிகா ராமசாமி[தொகு]

ராதிகா ராமசாமி இந்தக் கட்டுரையை இதற்கு மேல் மேம்படுத்த போதிய தரமான தகவல்களோ மேற்கோள்களோ இல்லாததால் 300 வார்த்தைகள் எட்டவில்லை. ஏற்கக்கூடியதென்றால் போட்டியில் சேர்த்துக் கொள்க -நீச்சல்காரன் (பேச்சு) 11:27, 27 மே 2018 (UTC)[பதிலளி]

@Dineshkumar Ponnusamy: உங்கள் கருத்து என்ன? நானும் ஓரிரு கட்டுரைகளை எவ்வளவு தான் முயன்றும் 300 சொற்கள் தேவையை எட்ட முடியவில்லை. இந்தக் கட்டுரையை விதிவிலக்காக ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். கருவியில் இணைக்க முடியாத போது, இங்கு பதிவேற்றலாம். --இரவி (பேச்சு) 01:54, 28 மே 2018 (UTC)[பதிலளி]
போட்டி விதிகளின் படி கட்டுரை ஏற்கப்பட மாட்டாது. கட்டுரையில் மேலதிக தகவலை சேர்க்க முயல்கிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:24, 29 மே 2018 (UTC)[பதிலளி]

விரிவாக்கம் செய்யப்படும் அளவு[தொகு]

ஒரு கட்டுரையை ஒருவர் 9000 பைட்டுக்கள் சேர்க்கவோ, அல்லது 300 சொற்கள் சேர்க்கவோ வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருவர் விரிவாக்கிய கட்டுரையை, வேறொருவர் ஒரு சில சொற்களைச் சேர்த்துவிட்டு போட்டிக்குச் சமர்ப்பித்தால், அது வேறொருவரின் பெயரில் ஏற்றுக் கொள்ளப்படுமா? @Ravidreams: சமிபாடு கட்டுரையைப் பார்த்தபோது தோன்றிய கேள்வி இது. ஒருவர் போட்டிக்காகக் குறிப்பிட்ட காலப் பகுதியில் தேவையான அளவு விரிவாக்கம் செய்த பின்னர், வேறொருவர் ஒரு சில மாற்றங்கள் செய்துவிட்டு அந்தக் கட்டுரையைச் சமர்ப்பித்தால், அந்த வேறொருவரின் பெயரில் கட்டுரை ஏற்றுக் கொள்ளப்படுமா? பொதுவாக அறிந்து கொள்ளும் நோக்கில் மட்டுமே இதனைக் கேட்கின்றேன். --கலை (பேச்சு) 12:13, 27 மே 2018 (UTC)[பதிலளி]

@Kalaiarasy: இதைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. கட்டுரையை முதலில் 9000 பைட்டுகள் மற்றும் 300 சொற்கள் தாண்டி விரிவாக்குபவர் பெயரில் தான் கணக்கு வைக்க முடியும். ஒரே கட்டுரையை மீண்டும் இன்னொருவர் விரிவாக்கி போட்டிக்குப் பதிவேற்ற முடியாது. இந்தக் கட்டுரையைப் பொருத்தவரை அது உங்கள் கணக்கிலேயே வந்திருக்க வேண்டும். எனினும், 1000+ கட்டுரைகள் குவிந்திருக்கும் நிலையில், நன்கு அறிந்த பயனர்கள் போட்டி விதிகளின் படியே கட்டுரைகளைப் பதிவேற்றுவர் என்ற எதிர்பார்ப்பில் கட்டுரையின் வரலாற்றைக் கவனிக்காமல் ஏற்றுக் கொண்டிருந்தேன். இப்போது Fountain கருவியில் இருந்து இதனை நீக்கி மீண்டும் உங்கள் பெயரில் கணக்கு வைக்க முடியும். @Sancheevis: இது பற்றி உங்கள் கருத்து என்ன? கட்டுரையைத் தவறுதலாகப் பதிவேற்றி விட்டீர்களா? ஏதேனும் புரிதல் இடைவெளி இருந்தால் பதில் அளிக்க அணியமாக இருக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 01:40, 28 மே 2018 (UTC)[பதிலளி]
வணக்கம் @Kalaiarasy: மற்றும் @Ravidreams:.இது எனது தவறாகவே இருக்கவேண்டும். பேச்சுப் பக்கத்தில் வேங்கைத் திட்டத்தில் யாரும் சேர்த்துள்ளனரா என்பதை மட்டும் கவனித்துவிட்டு சில உள்ளீடுகளைச் செய்துவிட்டு சொற்களின் அளவை பார்த்து விட்டு சேர்த்திருக்கின்றேன். இதனை கலையின் கணக்கில் சேர்ப்பதே சரி. இதுபோல இன்னும் கட்டுரைகள் போட்டி இலக்கு அளவை அண்மித்தவையாக இருந்தால் யாராவது பயனர் மிகுதியை எழுதிவிட்டு சேர்த்து விடலாமா? அதிக திருத்தங்கள் செய்தவரின் கணக்கில் அவற்றை கணக்கு வைக்கலாமே! ஏனெனில் போட்டி முடிவுத்திகதி நெருங்குவதால் தவறவிட்டால் உழைப்பு வீணாகி விடும். கலை எனது தவறைப் புரிந்து கொள்ளவேண்டுகின்றேன்.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:10, 28 மே 2018 (UTC)[பதிலளி]
@Ravidreams: வேறு கட்டுரைகளிலும் இவ்வாறு நடந்திருக்கலாமோ, எவ்வாறு இதன் நடைமுறை உள்ளது என்று அறியவே கேட்டேன். அதனை மாற்ற வேண்டிய தேவையில்லை. அது அப்படியே சஞ்சீவி சிவகுமார் பெயரிலேயே இருக்கலாம். பிரச்சனையில்லை. யாருடைய பெயரில் இருந்தாலும் கட்டுரை எண்ணிக்கை கூடினால் சரிதான். சஞ்சீவி சிவகுமார்! நான் அதனை எப்பொழுதோ விரிவாக்கிவிட்டு, அளவைச் சரிபார்க்க எண்ணிப் பின்னர் அப்படியே விட்டுவிட்டேன். நேற்று அதனைப் பார்த்தபோது, ஏற்கனவே அந்தக் கட்டுரை திட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தது. நான் விரிவாக்கியிருந்ததும் குறிப்பிட்ட அளவைத் தாண்டியிருந்ததுபோல் தெரிந்தது (சரியாகத் தெரியவில்லை). அதனால்தான் புரிந்து கொள்வதற்காகக் கேட்டேன். நான் கேட்டதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளாவிட்டால் சரி. உங்கள் நோக்கத்தைச் சரியாகவே புரிந்து கொள்கிறேன். நீங்கள் கூறியுள்ளபடி, இவ்வாறு விரிவாக்கப்பட்டு, திட்டத்தில் சேர்க்கப்படாமல் விடுபட்ட கட்டுரைகளையும் சேர்த்தால் நல்லதுதான்.--கலை (பேச்சு) 15:29, 28 மே 2018 (UTC)[பதிலளி]
@Kalaiarasy: கலை புரிதலுக்கு நன்றிகள். போட்டியின் இப்பொதுள்ள நிலையில் தனித்தனியே எத்தனை கட்டுரைகள் எழுதினோம் என்பதைவிட மொத்தமே முக்கியம் என்பது உண்மைதான். ஆயினும் எதிர்கால பதிவுக்காக, நீங்கள் அதிகம் விரிவாக்கிய கட்டுரை உங்கள் பெயரின் கீழ் பதிவிடப்படுவதே சரி. போட்டியின் விதிகளை மீறிவிட்டோம் என்கிற உறுத்தலும், இரவியை சங்கடப்படுத்திவிட்டோம் என்கின்ற கவலையும் கூடவே. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:52, 28 மே 2018 (UTC)[பதிலளி]
சஞ்சீவி சிவகுமார்! சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளும்போது எந்த உறுத்தலும் அவசியமில்லை. எனவே இதுபற்றிக் கவலை வேண்டாம். நான்தான், தேவையில்லாமல் ஒரு கேள்வி கேட்கப் போய், உங்களையும் குழப்பிவிட்டேன் போலிருக்கிறது . நானோ இத் திட்டத்தில் பெரியளவில் பங்களிப்பு எதுவும் செய்யவில்லை. எனவே கவலை வேண்டாம். --கலை (பேச்சு) 10:29, 29 மே 2018 (UTC)[பதிலளி]
@Kalaiarasy and Sancheevis: கவலை வேண்டாம். சமிபாடு கட்டுரையை கலையரசி கணக்கில் சேர்த்து இருக்கிறேன். இன்னும் ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகளில் இதே போன்ற குழப்பத்தைக் கண்டேன். அவற்றையும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் உரியவர் கணக்கில் சேர்த்து விடுகிறேன். --இரவி (பேச்சு) 17:45, 29 மே 2018 (UTC)[பதிலளி]

ஸ்டீவன் ஹாக்கிங் கட்டுரை[தொகு]

@Ravidreams: ஸ்டீவன் ஹாக்கிங் கட்டுரையைச் சமர்ப்பித்திருந்தேன். ஏற்றுக்கொள்ளப்படவில்லை. விரிவாக்கம் போதாதா? எப்படி தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து, தேவையான அளவு விரிவாக்கம் நடைபெற்றுள்ளதா என்பதை அறிவது? 9000 பைட்டுக்களோ, 300 சொற்களோ என்பதைச் சரியாக அறிய முடியவில்லை. --கலை (பேச்சு) 14:33, 29 மே 2018 (UTC)[பதிலளி]

@Kalaiarasy: கட்டுரை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 1000+ கட்டுரைகள் குவிந்திருப்பதால் புதிதாக பங்கேற்போர் உருவாக்கிய கட்டுரைகள் மதிப்பிடப்படாமல் தேங்கி இருந்தது. தற்போது அந்த வரிசையைக் குறைக்க முயன்று வருகிறோம். பொறுமை காத்ததற்கு நன்றி. குழப்பத்துக்கு வருந்துக்கிறேன். --இரவி (பேச்சு) 17:46, 29 மே 2018 (UTC)[பதிலளி]
@Ravidreams: ஆனால் எப்படி சரியான அளவைக் கணிப்பது என எங்கே பார்க்கலாம்? ஏதாவது இணைப்பு உண்டா? பின்னர் விரிவாக்கிய கட்டுரை ஏற்கப்பட்டு, முதல் விரிவாக்கியது ஏற்கப்படாமையாலேயே, இதற்கு மேலும் விரிவாக்கம் தேவையோ, அவ்வாறெனில் விரிவாக்கலாம் என்று எண்ணியே கேட்டேன்.--கலை (பேச்சு) 19:59, 29 மே 2018 (UTC)[பதிலளி]
@Kalaiarasy: நீங்கள் உருவாக்குவது புதிய கட்டுரை என்றால் Fountain கருவியில் சமர்ப்பிக்க முயன்றாலே எத்தனைச் சொற்கள், எத்தனைப் பைட்டுகள் என்று காட்டி விடும். அது ஏற்றுக் கொண்டாலே கட்டுரை அளவு அடிப்படையில் தகுதியானது தான். ஏற்கனவே உள்ள கட்டுரையை விரிவாக்கும் போது, கட்டுரையின் வரலாற்றைப் பார்த்து தான் பைட்டு அளவைக் கணக்கிட முடியும். சொற்கள் எண்ணிக்கை அறிய https://wordcounttools.com/ பார்க்கலாம். சொற்களை எண்ணும் போது தகவல் பெட்டி, மேற்கோள்கள், நூல் பட்டியல் போன்ற பகுதிகளை வெட்டி ஒட்டி எண்ண வேண்டாம். விரிவாக்கப்படும் கட்டுரைகளைப் பொருத்த வரை, பொதுவாக, 9000 பைட்டுகளுக்குக் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருந்தாலே ஏற்றுக் கொள்கிறோம். --இரவி (பேச்சு) 21:55, 29 மே 2018 (UTC)[பதிலளி]
தகவலுக்கு நன்றி. --கலை (பேச்சு) 19:16, 30 மே 2018 (UTC)[பதிலளி]

சென்னையின் பாரம்பரியக் கட்டிடங்கள் - பட்டியல்[தொகு]

சென்னையின் பாரம்பரியக் கட்டிடங்கள் - பட்டியல் பக்கம் உருவாக்கியுள்ளேன். fountain ல் 59 வார்த்தைகள் என்றும் wordcount ல் 549 என்றும் வருகிறது. ஏற்புடையதெனில் வேங்கைத்திட்டத்தில் சேர்த்துக்கொள்க. நன்றி. த.சீனிவாசன் (பேச்சு) 20:32, 30 மே 2018 (UTC)[பதிலளி]

@Tshrinivasan: கட்டுரை ஏற்கப்படுகிறது. --இரவி (பேச்சு) 10:17, 31 மே 2018 (UTC)[பதிலளி]

இரவி (பேச்சு) வேளாண் பொறியியல் கட்டுரை 340+ சொற்கள் அமைந்தும் ஏற்கபபடாமல் உள்ளது. ஆவன செய்க!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:41, 31 மே 2018 (UTC)[பதிலளி]

@உலோ.செந்தமிழ்க்கோதை: கட்டுரை ஏற்கப்படுகிறது. கட்டுரையில் புள்ளி வரிசையாக ஒன்றின் கீழ் ஒன்றாக வரும் சொற்றொடர்களில் உள்ள சொற்களை கருவி கணக்கெடுப்பதில்லை. தற்போது கட்டுரையில் ஆங்கிலத்தில் உள்ள பகுதிகளைப் பிறகு நேரம் கிடைக்கும் போது தமிழாக்குங்கள். அல்லது, தற்காலிகமாக நீக்கி விடுங்கள்.--இரவி (பேச்சு) 15:04, 31 மே 2018 (UTC)[பதிலளி]