பார்ச்சூன் இந்தியா 500

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்ச்சூன் இந்தியா 500
டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில்
வரிசை நிறுவனம் மொத்த வருவாய்

( அமெரிக்க$ பில்லியன்)

1 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 65
2 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 51
3 பாரத ஸ்டேட் வங்கி 47
4 டாடா மோட்டார்ஸ் 42
5 பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 37
6 இந்துஸ்தான் பெட்ரோலியம் 33
7 ஓ.என்.ஜி.சி 22
8 டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 17
9 ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்  16
10 டாடா ஸ்டீல் 9
பார்ச்சூன் இந்தியா அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2017-09-16 at the வந்தவழி இயந்திரம்

பார்ச்சூன் இந்தியா 500  தகுதி வரிசை என்பது சமீபத்திய விற்பனை மற்றும் மொத்த வருவாயின் அடிப்படையில் இந்தியாவிலுள்ள முதல் 500 பெரும் நிறுவனங்களின் தொகுப்பாகும். இந்த தகுதிவரிசை ஆண்டுதோறும் பார்ச்சூன் பத்திரிகையினால் வெளியீடப்படுகிறது.[1] பார்ச்சூன் இந்தியாவானது, சீனா, துருக்கி, கொரியா, இந்தோனேசியா, கீரிஸ்  ஆகிய நாடுகளின்  உள்ளூர் பதிப்புகளைப் தொடர்ந்து வெளிவரும் ஆறாவது சர்வதேச பதிப்பு ஆகும்.[2][3]

பார்ச்சூன் இந்தியா மாதாந்திர பத்திரிக்கையாக ஆங்கிலத்தில் வெளிவருகிறது. இதன் பதிப்பு  உரிமமானது பார்ச்சூன்ப திப்பாளர் டைம் குழுமம்  மற்றும்  இந்தியாவின்  பெரிய  ஊடக குழுமமான கொல்கத்தாவைச்-சார்ந்த ஏபிபி குழுவிற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மூலம் நடைமுறையில் உள்ளது.[4][5] பார்ச்சூன் இந்தியாவின் முதல் பதிப்பு  செப்டம்பர் 2010ல் வெளியிடப்பட்டது.[6][7] 

2017 ஆம் ஆண்டு பதிப்பு[தொகு]

இந்திய எண்ணெய் கழகம் முதலிடமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இரண்டாமிடமும், அடுத்த மூன்று இடங்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ராஜேஸ் இண்டஸ்ட்ரீஸ் பெறுகிறது.

2011ஆம் ஆண்டு பதிப்பு[தொகு]

இந்திய எண்ணெய் கழகம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்  இரண்டாவது ஆண்டு பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.[8]

ஜீ பொழுதுபோக்கு நிறுவனங்கள் (#1 ஊடகங்கள், #256 ஒட்டுமொத்த), சன் டிவி நெட்வொர்க் (#2, #347), ஹெச்டி மீடியா (#3, #383), நெட்வொர்க் 18 (#4, #413) மற்றும் டிஷ் டிவி (#5, #437) போன்ற ஊடக நிறுவனங்கள் பார்ச்சூன் இந்தியா 500 பட்டியலில் இந்தியாவின் பெரிய நிறுவனங்களாக திகழ்கிறது.[9]

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (#1 தகவல் தொழில்நுட்பம், #20 ஒட்டுமொத்த), விப்ரோ (#2, #25), இன்போசிஸ் (#3, #27), ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட் (#4, #49), சத்யம் கணினி சேவைகள் (#5, #153) மற்றும் டெக் மஹிந்திரா (#6, #161) போன்ற தகவல்தொழில் நுட்ப நிறுவனங்கள் பார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பெறுகிறது.[10]

2011  நகரங்கள் சார்ந்த பட்டியல்[தொகு]

இந்த தரவரிசை, உலகம் முழுவதுமுள்ள பெரிய 500 நிறுவனங்கள் நிறைந்த முதல் எட்டு நகரங்களின் பட்டியல் அடிப்படையில் உள்ளது.[11]

வரிசை நகரங்களில் பெரிய நிறுவனங்கள் இந்தியா
1 மும்பை 177
2 டில்லி-என். சி. ஆர் 111
3 கொல்கத்தா 38
4 சென்னை 34
5 பெங்களூர் 25
6 புனே 25
7 அகமதாபாத் 19
8 ஹைதராபாத் 17

2010ஆம் ஆண்டு பதிப்பு[தொகு]

இந்திய எண்ணெய் கழகம்  பார்ச்சூன் இந்தியா 500 தரவரிசையில் முதலிடம்  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பட்டியலில் இரண்டாவது இடமும். அடுத்த மூன்று இடங்களில்  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் முறையே வருகிறது.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The top 20 companies in India — Rediff.com Business". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23.
  2. "Fortune 6th international edition". Fortune. பார்க்கப்பட்ட நாள் December 9, 2010.
  3. "Fortune launches Indian edition". Medianewsline.com. 2010-09-27. Archived from the original on 2011-09-06. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23.
  4. "'Fortune India' launches today; Bates 141 roped in as creative agency". Exchange4media.com. 2010-09-24. Archived from the original on 2014-08-11. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23.
  5. "MIB nod to Indian edition of 'Fortune' magazine". Exchnge4media.com. 2010-02-16. Archived from the original on 2014-08-11. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23.
  6. "Fortune India makes its debut". Archived from the original on 2016-05-12. பார்க்கப்பட்ட நாள் 2018-02-25.http://www.campaignindia.in/Article/233439,fortune-india-makes-its-debut.aspx பரணிடப்பட்டது 2016-05-12 at the வந்தவழி இயந்திரம்
  7. Business Standard (2010-09-24). "Fortune India hits the stands, finally". Business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23. {{cite web}}: |last= has generic name (help); More than one of |author= and |last= specified (help)
  8. "Fortune India 500 second year list". Fortune. பார்க்கப்பட்ட நாள் December 18, 2011.
  9. Media Tv Print Media Radio Ooh Mediaah!. "Dish TV makes it to Fortune India 500, 4 biggies exit list". MxM India. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  10. "Fortune India 500 complete list" (PDF). Fortune Indis. Archived from the original (PDF) on January 3, 2012. பார்க்கப்பட்ட நாள் December 18, 2011.
  11. "India 500 2011: City". Fortune India. பார்க்கப்பட்ட நாள் December 14, 2011. Number of companies data taken from the "Pick a city" box.
  12. "Fortune India 500". Fortune. பார்க்கப்பட்ட நாள் December 9, 2010.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்ச்சூன்_இந்தியா_500&oldid=3653862" இலிருந்து மீள்விக்கப்பட்டது