மக்கள் நீதி மய்யம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்கள் நீதி மய்யம்
சுருக்கக்குறிMNM/மநீம
தலைவர்கமல்ஹாசன்
நிறுவனர்கமல்ஹாசன்
தொடக்கம்21 பெப்ரவரி 2018 (6 ஆண்டுகள் முன்னர்) (2018-02-21)
தலைமையகம்4, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா-600018
அரசியல் நிலைப்பாடுநடுநிலை[1]
நிறங்கள்சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை
இ.தே.ஆ நிலைஅங்கீகரிக்கப்படாத கட்சி
தேசியக் கூட்டுநர்கமல்ஹாசன்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
0 / 234
தேர்தல் சின்னம்
பேட்டரி டார்ச்
இணையதளம்
மய்யம்
இந்தியா அரசியல்

மக்கள் நீதி மய்யம் (Makkal Neethi Maiyam) என்பது நடிகர் கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும்.[2] கமல்ஹாசன் இந்த கட்சியின் நிறுவனத்தலைவர் ஆவார்.

தொடக்கம்[தொகு]

பிப்ரவரி 21, 2018 இல் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் கமல் தம் கட்சிப் பெயர் மற்றும் கொடியை ஏற்றி வைத்தார்.[3][4] இந்தப் பொதுக்கூட்டத்தில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.[5] கேரள முதல்வர் பினராயி விஜயன் காணொளிக் காட்சி மூலம் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.[6]

கமல்ஹாசன் தமது டுவிட்டர் பக்கத்தில் ”நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’ தமிழகம் விழித்தெழட்டும்’’ என்று பதிவிட்டார்.[7]

கட்சியின் பொறுப்பாளர்கள்[தொகு]

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை அருணாசலம் ஏற்றுள்ளார். துணைத் தலைவர்களாக மவுரியா, தங்கவேலு உள்ளனர்.[8]

கட்சியின் சின்னம் மற்றும் கொள்கை[தொகு]

கட்சியின் சின்னத்தில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களையும், மற்றும் நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். மக்களையும், நீதியையும் மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி மக்கள் நீதி மய்யம் என்று கமல் கூறினார்.[9] தேர்தல் ஆணையத்தால் மக்கள் நீதி மய்யத்திற்கு "கை மின்விளக்கு" சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.[10]

2019 நாடாளுமன்ற தேர்தல்[தொகு]

  • இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்களவை உறுப்பினர்கள் பட்டியல்களை தலைவர் கமலஹாசன் வெளியிட்டார்.
  • இதில் பெரம்பலூர் தொகுதி மநீம வேட்பாளர் அருள்பிரகாசம் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி இந்தியக் குடியரசுக் கட்சி (கூட்டணிக் கட்சி) வேட்பாளர் தங்கராஜ் ஆகியோரின் வேட்புமனு தாக்குதல் நிராகரிக்கப்பட்டது.

2021 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "கட்சிக்கொடி என்.சி.ஓ. போல் இருந்தால் என்ன தவறு? விளக்கும் கமல்ஹாசன்". Archived from the original on 2018-02-23. பார்க்கப்பட்ட நாள் 2018-02-22. (22 பெப்ரவரி, 2018), நக்கீரன்.
  2. "'மக்கள் நீதி மையம்' கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்கள் அறிவிப்பு", The Hindu Tamil, பார்க்கப்பட்ட நாள் 2018-02-22
  3. "மதுரையில் பிறந்தது கமலின் புதுக் கட்சி... மக்கள் நீதி மையம்!", https://tamil.oneindia.com, பார்க்கப்பட்ட நாள் 2018-02-22 {{citation}}: External link in |journal= (help)
  4. "மக்கள் நீதி மையம் - கமல் கட்சியின் பெயர்", Dinamalar, பார்க்கப்பட்ட நாள் 2018-02-22
  5. ""நிஜ கதாநாயகனாகத் திகழ்கிறார்": கமலுக்கு கெஜ்ரிவால் புகழாரம்", BBC News தமிழ் (in பிரிட்டிஷ் ஆங்கிலம்), 2018-02-22, பார்க்கப்பட்ட நாள் 2018-02-22
  6. "ஜனநாயகத்தைக் கமல் காப்பார் - பினராயி விஜயன் வாழ்த்து!", nakkheeran (in ஆங்கிலம்), archived from the original on 2018-02-25, பார்க்கப்பட்ட நாள் 2018-02-22
  7. "மக்கள் நீதி மய்யம்.. தமிழகம் விழித்தெழட்டும்.. டிவிட்டரிலும் அறிமுகப்படுத்திய கமல்!", https://tamil.oneindia.com, பார்க்கப்பட்ட நாள் 2018-02-22 {{citation}}: External link in |journal= (help)
  8. மக்கள் நீதி மய்யம்: வெளியேறிய நிர்வாகிகளுக்கு மாற்று; புதிய பட்டியல் வெளியிட்ட கமல் ஹாசன் - தமிழ்நாடு அரசியல். பிபிசி தமிழ். 26 சூன் 2021. https://www.bbc.com/tamil/india-57623346. 
  9. "'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் கொள்கை என்ன? கமல் விளக்கம்!", nakkheeran (in ஆங்கிலம்), archived from the original on 2018-02-25, பார்க்கப்பட்ட நாள் 2018-02-22
  10. "கமல் கட்சியின் சின்னம் 'பேட்டரி டார்ச் '". தினமலர். 10 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_நீதி_மய்யம்&oldid=3885415" இலிருந்து மீள்விக்கப்பட்டது