ஆன் ஆடம்சு மெக்பாதென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலூசி ஆன் மெக்பாதென்

உலூசி ஆன் ஆடம்சு மெக்பாதென் (Lucy-Ann Adams McFadden) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் நாசா பணியாளர் ஆவார். இவர் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் அறிவியல், கண்டுபிடிப்பு, புடவி திட்டத்தையும் உருவாக்கியவர் ஆவார். இவர் சிறுவருக்கான அனைத்தையும் தேடல் அறிவியல் மையத்தையும் உருவாக்கியுள்ளார்..

வாழ்க்கை[தொகு]

இவர் 1952 இல் நியூயார்க் நகரில் பிறந்தார்.[1]இவர் தன் இளவல் பட்டத்தை ஆம்ப்சயர் கல்லூரியிலும் (1974) புவி, கோள் அறிவியலில் முதுவர் பட்டத்தை மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்திலும் (1977) தன் முனைவர் பட்டத்தை புவி, புவி இயற்பியல் பட்ட்த்தை அவாய் பல்கலிக்கழகத்திலும் (1983) பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை Spectral reflectance of near-Earth asteroids : implications for composition, origin and evolution என்பதாகும்.இவர் காலேஜ் பர்க்கில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகம், சாந்தியகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கலிபோர்னியா விண்வெளி நிறுவனம், விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தார். நாசாவில், இவர் 4 வெசுட்ட சீரிசு குறுங்கோள் பயணத்துக்கான டான் திட்டத்திலும் ஆழ்மொத்தல், EPOXI திட்டங்களிலும் ஆய்வாளராக இருந்துள்ளார். Sஇவர் புவியண்மை வட்டணை சிறுகோள் திட்ட அறிவியல் பணிக்குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார்; 2007-2008 ANSMET தேட்டக்குழு உறுப்பினராக இருந்துள்ளார்; இவர் 2009 வடசூடான் அல்ம சிட்டா விண்கல் பொழிவு தேட்டக்குழுவில் உறுப்பினர் ஆவார்; இவர் 2010 நாசா கோடார்டு உயர்கல்வி, பல்க்லைக்கழகத் திட்டங்களின் தலைவராக இருந்துள்ளார்; ஆழ்மொத்தல், டான் திட்டம் ஆகியவற்றின் கல்வி, பரப்புரை நிகழ்ச்சியின் இயக்குநர்ரும் ஆவார்.[2]

தேர்ந்தெடுத்த பணிகள்[தொகு]

  • 1977, Visible Spectral Reflectance Measurements of the Galilean Satellites of Jupiter (MORE)
  • 1999, Encyclopedia of the solar system ( Paul Robert Weissman, T V Johnson ஆகியோருடன்)

விருதுகள்[தொகு]

  • 2015 AAAS வானியல் ஆய்வுறுப்பினர் [3]
  • 2012, நாசா குழு சாதனை விருது, டான் வெசுட்டா இயக்கப் பணிக்குழு
  • 2011, நாசா குழு சாதனை விருது, EPOXI அறிவியல் பணிக்குழு
  • 2009, தேசிய அறிவியல் அறக்கட்டளையின் அண்டார்ட்டிகா அறிவியல் பணி விருது
  • 2009, நாசா குழு சாதனை விருது, EPOXI திட்டப் பணிக்குழு
  • 2009, நாசா குழு சாதனை விருது, டான் அறிவியல் இயக்கப் பணிக்குழு
  • 2005, விண்வெளி முன்னணி அறக்கட்டளையின் நிலவுகை முன்னறிதல் விருது- ஆழ்தாக்கப் பணிக்குழு
  • 2005, வாழ்சிங்டன் புவியியல் கழகம், சிறந்த உரையாற்றல் விருது
  • 1987, ஏப்பிரலில் 3066 மெக்பாதென் சிறுகோள் பெயரிடப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

  1. Press 1982, ப. 58.
  2. "Dr. Lucy Ann A McFadden". நாசா. Archived from the original on 28 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 November 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. McFadden, Lucy. "AAAS Names NASA Goddard Scientists 2015 Fellows". NASA Goddard Scientists 2015 Fellows. NASA. பார்க்கப்பட்ட நாள் 22 October 2016.

நூல்தொகை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_ஆடம்சு_மெக்பாதென்&oldid=3543197" இலிருந்து மீள்விக்கப்பட்டது