வேர்நுனி மூடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிதாகப்பட்ட வேர்நுனி 100×. 1. ஆக்குத்திசு 2. சிருதூணமைப்பு (சிடாட்டோலித்துகள் என்னும் அமைப்புடன் சிடாட்டோசைட்டு செல்கள்) 3. வேர்நுனுயின் பக்கவாட்டுப்பகுதி 4. அழிந்த செல்கள் 5. நீட்சிப்பகுதி

வேர்நுனி மூடி (Root cap) என்பது வேர்களின் முனைகளில் அமைந்துள்ள தொப்பி போன்ற திசுக்களின் பகுதியாகும்[1]. கேலிப்ட்ரா என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. சிடாடோசைட்டுகள் எனப்படும் செல்கள் வேர்நுனி மூடியில் காணப்படுகின்றன. இவை தாவரங்களின் புவியீர்ப்பு தூண்டுதல்களுக்க்கு ஏற்ப துலங்குவதில் பங்கேற்கின்றன[1]. வேர்நுனி மூடி கவனமாக அகற்றப்பட்டால் வேர் மண்ணுக்குள் புகும்போது எளிதில் ஒடிந்துவிடக்கூடும். வேர்களின் நுனிப்பகுதியை சேதமடையாமல் பாதுகாக்கும் பணியை வேர்நுனி மூடி செய்கிறது[1]. மேலும் பிசினைச் சுரந்து வேர்கள் எளிதாக மண்ணுக்குள் புகுவதற்கும்[1], மண்ணின் நுண்ணுயிர்தொகுதியுடன் தொடர்பு கொள்ளவும் இவை உதவுகின்றன[1].

கீழ்நோக்கிய வேரின் வளர்ச்சியைத் தூண்டுவது வேர்நுனி மூடி அமைந்திருப்பதன் நோக்கமாகும். வேர்களின் நுனிப்பகுதியிலுள்ள திசுப்பகுதியைப் சேதமடையாமல் மூடிப் பாதுகாப்பது இதன் பனியாகும்[2]. மேலும் புவியீர்ப்பு விசையின் தூண்டல்களுக்கு ஏற்ப செயல்படுவதற்கும் இது காரணமாகிறது[3].

சில ஒட்டுண்ணித் தாவர வேர்களிலும்[4]:138, நீர்வாழ்த் தாவரங்களிலும் வேர்நுனி மூடி அமைப்பு காணப்படுவதில்லை. இவ்வகை தாவரங்களில் வேர்நுனி மூடிக்குப் பதிலாக பை போன்ற அமைப்பில் வேர் பைகள் காணப்படுகின்றன[5]:2–76.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேர்நுனி_மூடி&oldid=3764928" இலிருந்து மீள்விக்கப்பட்டது