இந்திய அறக்கட்டளை சட்டம் 1882

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அறக்கட்டளை சட்டம் 1882 ( Indian Trusts Act 1882) இந்தியாவில் உள்ள தனியார் அறக்கட்டளையும்,அறங்காவலர்களையும் கட்டுப்படுத்தும். அறக்கட்டளை என்பது என்ன, சட்டப்படி யார் அறங்காவலர்களாக இருக்க முடியும் என்பதை விளக்குகிறது. இச்சட்டத்திற்கு 2013-ம் ஆண்டு கொண்டுவந்த திருத்தம், அறக்கட்டளை நிதியை முதலீடு செய்வதற்கு இருந்த சில கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. அதே சமயத்தில் அரசிற்கு, அறக்கட்டளை முதலீடுகளை சுயமாக ஆய்வு செய்யும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளது.[1][2]

உள்ளடக்கம்[தொகு]

ஒரு அறக்கட்டளையை நிறுவனர் எவ்வாறு உருவாக்குவது, அறங்காவலர்களை எவ்வாறு நியமிப்பது, தமது சொத்தை எவ்வாறு அறக்கட்டளையின் கட்டுப்பாட்டிற்கு அளிப்பது போன்றவற்றை இச்சட்டம் விளக்கும். அறக்கட்டளை குறித்து அறிய வேண்டிய சில விளக்கங்களாவன .[3][4]

  • நிறுவனர் அறக்கட்டளை துவங்குவதற்கான எண்ணம்
  • அறக்கட்டளையின் குறிக்கோள்
  • யாருடைய நன்மைக்காக அறக்கட்டளை துவங்கப்பட்டது
  • அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட சொத்தின் விவரம்
  • இச்சொத்தினை நிர்வாகம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது
  • மேலும் இச்சட்டம் அறங்காவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கீழே உள்ளவைகளைக் குறிப்பிடுகிறது
    • விருப்பு வெறுப்பு காட்டக்கூடாது
    • அறக்கட்டளையின் சொத்துக்களை அறக்கட்டளையின் நோக்கத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்துதல் கூடாது.
    • அறக்கட்டளையின் விதிமுறைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்
    • இப்பணியிடையே இதற்காக செய்யும் செலவுகளையும், அதற்கான ஊதியமும் பெற்றுக்கொள்ளலாம்
    • நிறுவனரின் நம்பிக்கைக்கும் அறக்கட்டளையின் நன்மைக்கும் மாறாக செயல்படக் கூடாது
    • அறக்கட்டளையின் சொத்துக்களை முதலீடு செய்யும் போது விதிகளுக்கு மீறி செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-01-27. பார்க்கப்பட்ட நாள் 2018-02-17.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-01-23. பார்க்கப்பட்ட நாள் 2018-02-17.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-01-27. பார்க்கப்பட்ட நாள் 2018-02-17.
  4. http://articles.economictimes.indiatimes.com/2011-07-18/news/29787429_1_private-trusts-estate-planning-indian-trusts-act
  5. https://indiankanoon.org/doc/470004/