சுல்தான் அஷ்லான் ஷா காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான் அஷ்லான் ஷா கேலரி
Sultan Azlan Shah Gallery
Galeri Sultan Azlan Shah
Map
பொதுவான தகவல்கள்
வகைGallery
இடம்மலேசியா, கோலாகங்சார், பேராக்
திறப்பு2003 திசம்பர் 9

சுல்தான் அஷ்லான் ஷா கேலரி (Sultan Azlan Shah Gallery (மலாய்: Galeri Sultan Azlan Shah) என்பது மலேசியாவின் பேராக்கின்கோலாகங்காசரில் உள்ள ஒரு காட்சியகம் ஆகும்.[1][2]

வரலாறு[தொகு]

1898 ஆம் ஆண்டில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. 1903 ஆம் ஆண்டில் பெரக் சுல்தான் முதலாம் இட்ரிஸ் ஷாவின் குடியிருப்பாக இது இருந்தது. இந்தக் காட்சியக உருவாக்க எண்ணமானது பேலக் சுல்தான் அஸ்லான் ஷாவின் யோசனையிலிருந்து வந்தது.   2001 ஆம் ஆண்டு சூன் 13 ஆம் தேதி, பேராக் மாநில அரசு காட்சியகத்தை அமைபதற்கான அனுமதியை அளித்தது. காட்சியக கட்டுமானம் 2001 நவம்பர் 30 இல் தொடங்கப்பட்டு,  2003 ஏப்ரல் 15 இல் நிறைவு செய்யப்பட்டது. காட்சியகம் அதிகாரப்பூர்வமாக 2003 திசம்பர் 9 அன்று திறக்கப்பட்டது.[3]

கட்டிடக்கலை[தொகு]

இந்தக் காட்சியகம் உலு அரண்மனை கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையானது முழுக்கவும் இயற்கை உபரகரணங்களைக் கொண்டே அழகு சொட்டும் அரண்மனையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.   கட்டிடத்தின் வடிவமைப்பானது தேசிய அரண்மனை, ஈப்போ உயர் நீதிமன்றம் மற்றும் ஈப்போ ரயில் நிலையங்களின் பொதுவான அம்சங்களாகும். இதில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன சுல்தான் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Administrator. "Galeri Sultan Azlan Shah - Laman Web Rasmi Galeri Sultan Azlan Shah". Archived from the original on 2018-04-29. பார்க்கப்பட்ட நாள் 2018-02-08.
  2. "Istana Ulu (Galeri Sultan Azlan Shah), Kuala Kangsar". Archived from the original on 2016-04-17. பார்க்கப்பட்ட நாள் 2018-02-08.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-16. பார்க்கப்பட்ட நாள் 2018-02-08.