வயதுவந்த நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வயதுவந்த நாள்
Coming of Age Day
கடைபிடிப்போர்சப்பான்
வகைதேசிய அளவில்
முக்கியத்துவம்20 வது ஆனவர்கள் வயதுக்கு வந்தவர்களாக கருதி கொண்டாடப்படும் விழா.
நாள்இரண்டாவது திங்கள் in சனவரி
2023 இல் நாள்சனவரி Expression error: Unexpected > operator.  (பிழை: செல்லாத நேரம்)
2024 இல் நாள்சனவரி Expression error: Unexpected > operator.  (பிழை: செல்லாத நேரம்)
2025 இல் நாள்சனவரி Expression error: Unexpected > operator.  (பிழை: செல்லாத நேரம்)
2026 இல் நாள்சனவரி Expression error: Unexpected > operator.  (பிழை: செல்லாத நேரம்)
நிகழ்வுஆண்டு
(காணொலி) விழா அன்று மாலை கோயிலுக்கு சென்று வரும் இளம் பெண்கள்.

வயதுவந்த நாள் (Coming of Age Day) (成人の日|Seijin no Hi) என்பது சப்பானிய விடுமுறை நாளாகும். இது ஒவ்வோராண்டும் சனவரி மாதம் இரண்டாம் திங்கட் கிழமை அன்று வருகிறது. இந்த நாளானது 20 வது வயதுக்கு வந்தவர்களின் கொண்டாட்ட நாளாகும். இளம் பெண்கள் பூப்பெய்துவது வெவ்வேறு வயதிலும் நாட்களிலும் இருந்தாலும் எல்லா பருவப் பெண்களும் 20 வது வயது தொடங்கும்போது அதற்காகக் கொண்டாடப்படுகின்றனர்.

வரலாறு[தொகு]

கி.பி 714 இல் இருந்து இந்த விழா சடங்குகளுடன் சப்பனில் கொண்டாடப்படுகிறது.[1] 1948 ஆம் ஆண்டு முதல் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு சனவரி 15 அன்று கொண்டாடப்பட்டது.[2] 2000 ஆம் ஆண்டில் இருந்து, விழாவானது ஆண்டுதோரும் சனவரி மாதம் இரண்டாவது திங்கட்கிழமை என மாற்றப்பட்டது.[1][3][4]

விழா[தொகு]

விழாநாளன்று இருபது வயதை எட்டியவர்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் காலை நேர வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அப்போது நகராட்சி நிர்வாகிகள், இளைஞர்கள் எப்படிப் பொறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்பட்டு முன்னுக்கு வர வேண்டும் என்று அறிவுரையாற்றுவார்கள். பிறகு, இந்த இளைஞர்கள், யுவதிகளின் குடும்பத்தினர் ஆலயங்களுக்குச் சென்று வாழ்க்கையில் வெற்றியும் நல்ல ஆரோக்கியமும் கிட்ட வழிபடுவார்கள்.

விழாவின்போது பெரும்பாலான பெண்கள் நாட்டின் பாரம்பரிய உடையான கிமோனோவின் பாணியில் நீண்டு கால்கள்வரை தொங்கியபடி இருக்கும் ஆடையான ஃபுரிசோடை அணிவர் மேலும் ஸோரி என்ற செருப்புகளை அணிந்து கொண்டாடுவர். பெரும்பாலானவர்கள் இவ்வகை ஆடைகளை வைத்திருக்க மாட்டார்கள், மேலும் இந்த ஆடைகள் விலை உயர்ந்ததவை என்பதால் விலை கொடுத்து வாங்காமல் உறவினர்களிடம் இரவல் வாங்கியோ அல்லது, வாடகைக்கு வாங்கியோ அணிவர். ஆண்கள் சிலநேரங்களில் பாரம்பரிய உடையை அணிவர், ஆனால் இக்காலத்தில் பல ஆண்கள் பாரம்பரிய ஆடைகள் அணிவதை விடுத்து மேற்கத்திய ஆடைகள் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.[5] அன்று மாலையில் இளைஞர்கள் மதுபானக் கேளிக்கை விருந்துகளில் கூட்டமாக கலந்துகொள்கின்றனர்.[1]

கவலைகள்[தொகு]

மாலையில் நடக்கும் இந்த மதுபான கேளிக்கை விருந்துகளின் போக்கு தற்போதைய மூத்த ஜப்பானியர்களுக்குக் கலக்கத்தை அளித்துவருகின்றது. குடித்துவிட்டுக் கத்துவது, ஆடுவது, சண்டையில் இறங்குவது, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மகளிருடன் குலாவுவது போன்ற செயல்கள் வரம்பு மீறிக்கொண்டே வருவது கவலையை அளித்து வருகிறது. மேலும் ஜப்பானில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதும் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாலும் விழாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைவதும் ஒரு பெரிய கவலையாகிவிட்டது.[6] 2017 ஆம் ஆண்டு 12.30 லட்சம் பேர் 20 வயதை எட்டினர். 1970 உடன் ஒப்பிடுகையில் இது பாதிதான். ஜப்பானின் மொத்த மக்கள்தொகை யில் 25%-க்கும் மேல் 65 வயது மற்றும் அதைத் தாண்டியவர்கள். 2015 முதல் 2030-க்குள் மக்கள்தொகை மேலும் ஒரு கோடி குறையவிருக்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கக் கூடும் என அரசு அஞ்சுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Allen, David; Sumida, Chiyomi (January 9, 2004). "Coming of Age Day, a big event for Japanese youths, is steeped in tradition". Stars and Stripes இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 16, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090216174548/http://www.stripes.com/article.asp?section=104&article=19733. 
  2. Araiso, Yoshiyuki (1988). Currents: 100 essential expressions for understanding changing Japan. Japan Echo Inc. in cooperation with the Foreign Press Center. பக். 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-4-915226-03-8. https://archive.org/details/currents100essen0000unse. 
  3. Kyōkai, Nihon Rōdō (2000). Japan labor bulletin, Volume 39. Japan Institute of Labour. பக். 3. 
  4. Glum, Julia (11 January 2015). "Japan Coming Of Age Day 2015: Facts About Japanese Holiday Celebrating Young People [PHOTOS]". International Business Times.
  5. Robertson, Jennifer Ellen (2005). A companion to the anthropology of Japan. Wiley-Blackwell. பக். 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-631-22955-1. 
  6. Joyce, Colin (January 15, 2002). "Drunken Japanese youths ruin coming of age rituals". The Daily Telegraph. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/japan/1381592/Drunken-Japanese-youths-ruin-coming-of-age-rituals.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயதுவந்த_நாள்&oldid=3583548" இலிருந்து மீள்விக்கப்பட்டது