இலித்தியோபாசுப்பேட்டு
இலித்தியோபாசுப்பேட்டு | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பாசுப்பேட்டு கனிமங்கள் |
வேதி வாய்பாடு | Li3PO4 |
இனங்காணல் | |
நிறம் | வெண்மை, இளம் சிவப்பு, நிறமற்றது |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
பிளப்பு | முற்றுப்பெற்றது |
விகுவுத் தன்மை | நொறுங்கத்தக்கது |
மோவின் அளவுகோல் வலிமை | 4 |
மிளிர்வு | கண்ணாடி போன்றது |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஓளிபுகும், ஒளிகசியும் |
மேற்கோள்கள் | [1][2][3] |
இலித்தியோபாசுப்பேட்டு (Lithiophosphate) என்பது Li3PO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இலித்தியம் உலோகத்தின் கனிமம் ஆகும். தூய்மையான இலித்தியம் ஆர்த்தோபாசுப்பேட்டின் இயற்கை வடிவம் இலித்தியோபாசுப்பேட்டு என்று கருதப்படுகிறது. மிகவும் அரிதான வகை கனிமமான இது சிலவகையான சிறப்பு அனற்பாறைகளில் தோன்றுகிறது.