டெர்ட்-பியூட்டைல் குரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்ட் பியூட்டைல் குரோமேட்டு
tert-Butyl chromate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெர்ட் பியூட்டைல் குரோமேட்டு
வேறு பெயர்கள்
குரோமிக் அமிலத்தின் டை-டெர்ட்-பியூட்டைல் எசுத்தர்; பிசு(டெர்ட்-பியூட்டைல்) குரோமேட்டு
இனங்காட்டிகள்
1189-85-1
ChemSpider 11649895
InChI
  • InChI=1S/2C4H9O.Cr.2O/c2*1-4(2,3)5;;;/h2*1-3H3;;;/q2*-1;+2;;
    Key: PNWJTIFZRHJYLK-UHFFFAOYSA-N
  • InChI=1/2C4H9O.Cr.2O/c2*1-4(2,3)5;;;/h2*1-3H3;;;/q2*-1;+2;;/rC8H18CrO4/c1-7(2,3)12-9(10,11)13-8(4,5)6/h1-6H3
    Key: PNWJTIFZRHJYLK-PZTLRDNSAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 102059956 wrong formula
வே.ந.வி.ப எண் GB2900000
SMILES
  • O([Cr](OC(C)(C)C)(=O)=O)C(C)(C)C
பண்புகள்
[(CH3)3CO]2CrO2
வாய்ப்பாட்டு எடை 230.3 கி/மோல்[1]
தோற்றம் தெளிவான, நிரமற்ற நீர்மம்[2]
உருகுநிலை −2.8 °C (27.0 °F; 270.3 K) [3]
கலக்கும்[3]
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.005 மி.கி CrO3/மீ3 [தோல்][1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca TWA 0.001 மி.கி Cr(VI)/மீ3[1]
உடனடி அபாயம்
Ca 15 மி.கி/மீ3 Cr(VI ஆக[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டெர்ட்-பியூட்டைல் குரோமேட்டு (tert-Butyl chromate) என்பது (CH3)3CO]2CrO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூவிணைய பியூட்டைல் குரோமெட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். மூவிணைய பியூட்டைல் கார்பன் சட்டகத்தில் குரோமேட்டைப் பதிலீடு செய்த சேர்மமாக இது உருவாகிறது. டெர்ட்-பியூட்டைல் குரோமேட்டு ஒரு புற்றுநோய் ஊக்கியாகும்.

பயன்[தொகு]

குரோமியம் தயாரிப்பதற்குத் தேவையான கரிம மூலமாகவும், வினையூக்கிகள் தயாரிக்கவும் டெர்ட்-பியூட்டைல் குரோமேட்டு பயன்படுகிறது. யுரெத்தேன் நுரைகளை பதப்படுத்தும் முகவராகவும் இது பயன்படுத்தப்படுகிறது [2].

பாதுகாப்பு[தொகு]

ஒடுக்கும் முகவர்கள், ஈரப்பதம், அமிலங்கள், ஆல்ககால்கள், ஐதரசீன்கள் மற்றும் எரியக்கூடிய பிற பொருட்களுடன் வலிமையாக டெர்ட்-பியூட்டைல் குரோமேட்டு வினைபுரியும். டெர்ட்-பியூட்டைல் குரோமேட்டும் எளிதாக தீப்பிடித்து எரியும். நுரையீரல் புற்றுநோய் உருவாதலுக்கு இச்சேர்மம் காரணமாக இருப்பதால் தொழில் மற்றும் உடல்நலப் பாதுகாப்பு நிறுவனம் டெர்ட்-பியூட்டைல் குரோமேட்டு ஒரு புற்றுநோய் ஊக்கி என அறிவித்துள்ளது. கண், தோல், சுவாச உறுப்புகள் எரிச்சல் போன்றவை இச்சேர்மத்தின் பாதிப்பால் தோன்றும் அறிகுறிகளாகும். இவற்றைத் தவிர தசைகள் பலவீனமைடைதல், தோல் புண்கள், வாந்தி, இருமல், வயிற்றுப் போக்கு, மூச்சுத்திணறல், குமட்டல் போன்றனவும் மேலும் சில அறிகுறிகளாகும் [1][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0080". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 "Hazardous Substance Fact Sheet" (PDF). New Jersey Department of Health.
  3. 3.0 3.1 3.2 "Tert-butyl chromate". International Chemical Safety Cards. NIOSH. July 1, 2014.