தோரிசு தவோவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரிசு தவோவு
பிறப்பு1964 (1964)
இலெபனான்
வாழிடம்இலெபனான்; கனடா; பால்டிமோர், மேரிலாந்து.
துறைவானியல்
பணியிடங்கள்அமெசு ஆராய்ச்சி மையம்
கல்வி கற்ற இடங்கள்மாண்ட்ரீல் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநாசா தொலைத்தொடர்புகள்

தோரிசு தவோவு (Doris Daou) (பிறப்பு: 1964)[1] ஓர் இலெபனானில் பிறந்த கனடிய வானியலாளர் ஆவார். இவர் கல்வி, பரப்புரை சார்ந்து நாசாவுக்காகப் பணிபுரிகிறார். இவர் நாசா நிலா அறிவியல் நிறுவனத்தின் இணை இயக்குநராவார்.[2] இவர் மேலும் நாசாவின் கோள்தேட்டத்துக்கான சிறுபுத்தாக்கத் (SIMPLEx) திட்டத் தொடர்பாளர் ஆவார்".[3]

இளமையும் கல்வியும்[தொகு]

தவோவின் குடும்பம் இவரது குழந்தைப் பருவத்திலேயே போரால் பீடிக்கப்பட்ட இலெபனானில் இருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்தது.[சான்று தேவை] இவர் கியூபெக்கில் உள்ள மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று, மாறும் விண்மீன்களின் வளிமண்டல அளபுருக்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.[1]

வாழ்க்கைப்பணி[தொகு]

இவர் பிறகு அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து, பால்டிமோருக்கு சென்று, அங்கு 9 ஆண்டுகள் அபுள் விண்வெளித் தொலைநோக்கியில் பணிசெய்தார். பின்னர், இவர் சுபிட்சர் விண்வெளித் தொலைநோக்கியை ஏவும் ஆயத்தப் பணிக்காக மாற்றப்பட்டார்.[4] இங்கு இவர் கல்விப் பணியிலும் மக்கள் பரப்புரைப் பணியிலும் ஈடுபட்டார்.[2]

இவர் அமெசு ஆராய்ச்சி மையத்தில் பரப்புரை, கல்வி வல்லுனராக வேலை செய்துள்ளார்.[5][6] மேலும் நாசாவின் நல்கைத் திட்டங்களிலும் பணிபுரிந்துள்ளார்.[3]

இப்போது தவோவு வாசிங்டன் டி. சி யில் நாசா தலைமையக வானியலாளராக உள்ளார்[7] இவர் வானியலாளரைக் கேளுங்கள் காணொளிப் படத் திட்டத்தை வடிவமைத்து தயாரித்துள்ளார்.[8] இவர் தொடர்ந்து அறிவியல் இதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார்.[9][10][11]

இவர் பிரெய்லியில் 2008 இல் வெளியிடப்பட்ட கட்புலனாத வானத்தைத் தொட்டுப் பாருங்கள் (Touch the Invisible Sky) எனும் நூலின் இணையாசிரியர் ஆவார்.[12]

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்[தொகு]

Daou, D. et al. (1990) Spectroscopic studies and atmospheric parameters of pulsating da white-dwarf (zz-ceti) stars, Astrophys. J. 364(1), 242-250. DOI: 10.1086/169407

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "SIRTF Profiles: Doris Daou". Spitzer Space Telescope. NASA. Archived from the original on 11 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 11 January 2017. I was only five years old... They are walking on the moon, she said."
    "My journey started at the University of Montreal, where I completed my degree. I worked on determining the atmospheric parameters of a group of pulsating stars.
    {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 Trouille, Laura (September 11, 2014). "Women in Astronomy, Career profiles: Astronomer to Associate Director of the NASN Lunar Science Institute" (PDF). Northwestern.edu. பார்க்கப்பட்ட நாள் January 9, 2017.[தொடர்பிழந்த இணைப்பு] பிழை காட்டு: Invalid <ref> tag; name ":0" defined multiple times with different content
  3. 3.0 3.1 "NASA ROSES-16 Amendment 35: C.21 SIMPLEx deferred to ROSES-2017". www.spaceref.com. October 4, 2016. பார்க்கப்பட்ட நாள் January 9, 2017.
  4. "Profiles: Doris Daou". legacy.spitzer.caltech.edu. August 2001. Archived from the original on ஜூலை 11, 2010. பார்க்கப்பட்ட நாள் January 9, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "SERVI - Solar System Exploration Research Virtual Institute". nasa.gov. July 19, 2009. பார்க்கப்பட்ட நாள் January 9, 2017.
  6. "NASA educative video uplink for aspiring Emirati astronauts". Khaleej Times. 11 May 2011 இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180923005703/https://www.highbeam.com/doc/1G1-256149899.html. 
  7. "NASA - NASA Unveils Cosmic Images Book in Braille for Blind Readers". www.nasa.gov (in ஆங்கிலம்). January 15, 2008. பார்க்கப்பட்ட நாள் 2017-01-09.
  8. "NASA - Cool Cosmos Videos". www.nasa.gov. April 10, 2009. பார்க்கப்பட்ட நாள் January 9, 2017.
  9. Daou, Doris (2015). "NASA's Solar System Exploration Research Virtual Institute – Expanded Goals and More Partners" (PDF). European Planetary Science Congress. பார்க்கப்பட்ட நாள் January 11, 2017.
  10. Bailey, B.; Schmidt, G.; Daou, D.; Pendleton, Y. (2014). "A New Direction for NASA's Solar System Exploration Research Virtual Institute: Combining Science and Exploration" (PDF). European Planetary Society Congress. பார்க்கப்பட்ட நாள் January 11, 2017.
  11. Daou, D. (2012). "The NASA Lunar Science Institute, International Efforts" (PDF). European Planetary Science Congress. பார்க்கப்பட்ட நாள் January 11, 2017.
  12. Flatow, Ira (18 January 2008). "'Invisible Sky' Presents NASA Images in Braille". NPR. http://www.npr.org/templates/story/story.php?storyId=18222816. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரிசு_தவோவு&oldid=3559771" இலிருந்து மீள்விக்கப்பட்டது