லோகேந்திர பகதூர் சந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோகேந்திர பகதூர் சந்த்
लोकेन्द्र बहादुर चन्द
27வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
11 அக்டோபர் 2002 – சூன், 2003
முன்னையவர்செர் பகதூர் தேவ்பா
பின்னவர்சூரிய பகதூர் தாபா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 15, 1940 (1940-02-15) (அகவை 84) [1]
குர்குடியா கிராமம், பைத்தடி, நேபாளம்
அரசியல் கட்சிராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி

லோகேந்திர பகதூர் சந்த் (Lokendra Bahadur Chand) (நேபாளி: लोकेन्द्र बहादुर चन्द (பிறப்பு:15 பிப்ரவரி 1940), நேபாளத்தின் 27வது பிரதம அமைச்சராக 1983 - 1986, 1970, 1997 மற்றும் 2002 - 2003 ஆகிய காலகட்டங்களில் நான்கு முறை பதவி வகித்தவர்.

இவர் நேபாள மன்னர்களிடம் அதிக பற்று கொண்டவர். முதலிரண்டு முறை நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்த காலத்தில், இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவராக செயல்பட்டார்.

இவர் 1997ல் ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சியின் உறுப்பினரானார். நேபாளி காங்கிரஸ் கட்சியின் பிரதம அமைச்சரான செர் பகதூர் தேவ்பாவின் அமைச்சரவையை, நேபாள மன்னர் பதவி விலக்கிய போது, லோகேந்திர பகதூர் சந்த் 11 அக்டோபர் 2002ல் நேபாள பிரதம அமைச்சராக பொறுப்பேற்றார்.

மாவோயிசவாதிகளால் நடத்தப்பட்ட உள்நாட்டு கலவரத்தால், லோகேந்திர பகதூர் சந்த் விலகினார்.

2008 நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றத் தேர்தலில், லோகேந்திர பகதூர் சந்த், ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சியின் சார்பாக விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Group, Gale (1 January 2003). "Worldmark Encyclopedia of the Nations". Gale Group. பார்க்கப்பட்ட நாள் 1 August 2016 – via Google Books.
  2. "Ca Election report". Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
அரசியல் பதவிகள்
முன்னர்
சூரிய பகதூர் தாபா
நேபாள பிரதம அமைச்சர்
1983 – 1986
பின்னர்
நாகேந்திர பிரசாத் ரிஜால்
முன்னர்
மரீச் மன்சிங் சிரேஸ்தா
நேபாள பிரதம அமைச்சர்
1990
பின்னர்
கிருஷ்ண பிரசாத் பட்டாராய்
முன்னர்
செர் பகதூர் தேவ்பா
நேபாள பிரதம அமைச்சர்
1997
பின்னர்
சூரிய பகதூர் தாபா
முன்னர்
ஞானேந்திரா
நேபாள பிரதம அமைச்சர்
2002 – 2003
பின்னர்
சூரிய பகதூர் தாபா
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகேந்திர_பகதூர்_சந்த்&oldid=3570354" இலிருந்து மீள்விக்கப்பட்டது