ரிச்சர்டு ஹென்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிச்சர்டு ஹென்டர்சன்
FRS FMedSci
ரிச்சர்டு ஹென்டர்சன், ஸ்டாக்ஹோம், December 2017
பிறப்பு19 சூலை 1945 (1945-07-19) (அகவை 78)
எடின்பரோ, ஸ்காட்லாந்து
துறைகட்டமைப்பு உயிரியல்
எலக்ட்ரான் நுண்ணோக்கி
பணியிடங்கள்மூலக்கூறு உயிரியல் ஆய்வகம்
கல்விஎடின்பரோ பல்கலைக்கழகம் (BSc)
Darwin College, Cambridge (PhD)
ஆய்வு நெறியாளர்டேவிட் ப்ளோ
அறியப்படுவதுஒற்றைத் துகள் எலக்ட்ரான் நுண்ணோக்கி
விருதுகள்2017 நோபல் பரிசு (2017)

ரிச்சர்டு ஹென்டர்சன் (பிறப்பு 19 சூலை 1945) [1] , ஒரு ஸ்காட்டிஸ் மூலக்கூறு உயிரியலாளர் மற்றும் உயிரி இயற்பியலாளர் மற்றும் உயிரியல் மூலக்கூறுகளுக்கான எலக்ட்ரான் நுண்ணோக்கி துறையில் முன்னோடி.. இவர் 2017 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு ஜாக்ஸ் துபோகேத் மற்றும் யோக்கிம் பிராங்கு ஆகியோருடன் இணைந்துப் பெற்றார்.

ஆராய்ச்சிப் பணி[தொகு]

ஹென்டர்சன் அவரது ஆய்வுப் பட்டத்திற்காக (Ph.D.). சிமோடரிப்சினின் (chymotrypsin) கட்டமைப்பு மற்றும் இயக்க முறைமையைப் பற்றி ஆராய்ச்சியை டேவிட் ப்ளோ உடன் MRC ஆய்வகத்தின் மூலக்கூறு உயிரியலில் துறையில் பணியாற்றினார்.[2] சவ்வுப் புரதம் குறித்த அவருக்கு இருந்த ஆதீத ஆர்வம் காரணமாக யேல் பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்திற்குப் பிந்தய ஆராய்ச்சியாளராக மின்னழுத்த - சோடியம் கடத்தல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

வாழ்க்கை[தொகு]

ஹென்டர்சன் பரோக்முயர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியலில் இயற்பியலில் பட்டம் பெற்றார் (B.Sc. Hons Physics, 1st Class). 1969 ஆம் ஆண்டில் இவர் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வகத்தின் மூலக்கூறு உயிரியலில் டேவிட் ப்ளோவின் மேற்பார்வையின் கீழ் தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1973 ஆம் ஆண்டு முதல் கேம்பிரிட்ஜ் மருத்துவ ஆய்வக கவுன்சிலின் மூலக்கூறு உயிரியல் (MRC LMB) ஆய்வகத்தில் பணிபுரிந்தார், 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அதன் இயக்குநராக இருந்தார்.[3] இவர் 1993 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மில்லர் கல்வி நிறுவனத்தில், ஒரு கெளவரவ பேராசிரியராகவும் இருந்தார்.[4] தற்போது அவர் மருத்துவ அறிவியல் கழகத்தில் அறிமுகத் திட்டத்தின் வழிகாட்டியாக இருக்கிறார்.[2]

விருதுகள்[தொகு]

  • 2017 வேதியியலுக்கான நோபல் பரிசு

மேற்கோள்கள்[தொகு]

  1. HENDERSON, Dr Richard, Who's Who 2014, A & C Black,2014; online edn, Oxford University Press, 2014
  2. 2.0 2.1 Dr Richard Henderson FRS FMedSci Fellow Profile, Academy of Medical Sciences
  3. CV of Richard Henderson
  4. Nouriani, Olivia (October 6, 2017). "2 scientists with ties to UC Berkeley win 2017 Nobel Prize in Chemistry". The Daily Californian. http://www.dailycal.org/2017/10/06/2-former-scientists-ties-uc-berkeley-2017-nobel-prize-chemistry/. பார்த்த நாள்: 10 October 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்டு_ஹென்டர்சன்&oldid=2895665" இலிருந்து மீள்விக்கப்பட்டது