எல்சா வான் தியேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல்சா வான் தியேன் (Elsa van Dien) (ஜூலை 12, 1914 – 2007) ஒரு டச் வானியலாளர் ஆவார்.  இவர் தனது முனைவர் பட்ட்த்தை ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் பெற்றார்.  இவர் கேல் புரூனோ வான் அல்பாதா எனும் வானியலாளரை மணந்தார்.

இவர் சுரினாமில் உள்ள பரமாரிபோவில் 1914 ஜூலை 14 இல் பிறந்தார். இவரது தாயார் இரெபேக்கா தா சிலவா ஆவார். இவரது தந்தையார் கெரிட் வான் தியேன் ஆவார். இவர் குடும்பம் 1923 இல் நெதர்லாந்துக்குப் பெயர்ந்தது. இவர் 1932 இல் ஆம்சுடர்டாம் பல்கலைக்கழகத்தில் வானியல் படிக்கத் தொடங்கினார். இவர் 1935 இல் நெதர்லாந்தில் இருக்கும் இலெய்டன் பல்கலைக்கழகத்திலும் அதன் வான்காணகத்தை அணுக பதிவு செய்திருந்தார்.[1] இவருக்கு 1939 இல் இராடுகிளிப்பே கல்லூரி ஆய்வு நலகையை வாழங்கியது. ஆனால், இரண்டாம் உலகப் போரால் அவர் முனைவர் பட்ட ஆய்வை அங்கே 1945 இல் தான் தொடங்க முடிந்தது. இதற்கு, இவருக்கு அமெரிக்கப் பல்கலைக்கழக மகளிர் கழகமும் முழு ஒத்துழைப்பை நல்கியது. இவரது 1947 ஆம் ஆண்டு ஆய்வுத் தலைப்பு ஏ, பி கதிர்நிரல் விண்மீன்களில் உயர் பால்மர் வரிகளின் விளைவு என்பதாகும்.[2] முனைவர் பட்டம் பெற்ரதும், இவர் சிலகாலம் கனடா, விக்டோரியாவில் அமைந்த டொமினியன் வானியற்பியல் காணகத்தில் பணிபுரிந்தார்.இவர் 1948 இல் நெதர்லாந்துக்குத் திரும்பினார். இவர் 1948 ஆகத்து மாதத்தில் இந்தோனேசியாவில் பாந்தாங் அருகில் உள்ள போசுச்சா வான்காணகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கே தான் இவர் புரூனோ வான் அல்பாதாவைச் சந்தித்து மணந்துகொண்டார். இவர் 1958 வரையில் தன் வானியல் ஆய்வைத் தொடர்ந்தார். பின்னர் இவரது குடும்பம் நெதர்லாத்துக்கே திரும்பி வந்து சேர்ந்தது. இவர் தன்கணவர் அல்பாதா 1972 திசம்பரில் இறந்ததும் தன் வானியல் ஆய்வை மீண்டும் தொடரலானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jaarboek der Rijksuniversiteit te Leiden 1936 : Album Studiosorum - 17 September 1935 tot 20 September 1936, p. 102.
  2. National Union Catalogue: ND 0262272; MH.

தகவல் வாயில்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்சா_வான்_தியேன்&oldid=3236465" இலிருந்து மீள்விக்கப்பட்டது