இறக்கை முறுக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறக்கைக்கான பிணை சட்டங்களையும், பறப்பின்போது இறக்கைகளை முறுக்குவதற்குப் பயன்பட்ட குச்சிகளுடன் இணைக்கப்பட்ட இழைகளையும் காட்டும், ரைட் சகோதரர்களின் 1899 இன வானூர்தியின் வரைபடம்.

இறக்கை முறுக்கல் (Wing warping) என்பது, பக்கவாட்டுக் (உருட்சி) கட்டுப்பாட்டுக்காக நிலைத்த இறக்கை வானூர்திகளில் பயன்பட்ட தொடக்ககால முறை ஆகும். இம்முறை ரைட் சகோதரர்களால் பயன்படுத்தப்பட்டுக் காப்புரிமை பெறப்பட்டது. இது இறக்கைகளின் இரு முனைகளையும் எதிர்த் திசைகளில் முறுக்குவதற்காகக் கப்பிகளையும் கம்பி வடங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. பல அம்சங்களில் இந்த அணுகுமுறை கடதாசி வானூர்திகளில் அதன் இறக்கைகளின் பின் பகுதியை வளைத்து அவற்றின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு ஒப்பானது.

பல பறவைகள் தமது பறப்பைக் கட்டுப்படுத்துவதற்காக இறக்கை முறுக்கலைப் பயன்படுத்துகின்றன. இது தொடக்ககால வானூர்தி வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செலுத்தியது.

விளக்கம்[தொகு]

நடைமுறையில், பெரும்பாலான இறக்கை முறுக்கல் வடிவமைப்புக்களில் அமைப்பு உறுப்புக்கள் வளையவேண்டி இருப்பதால், கட்டுப்படுத்துவது கடினம் என்பதுடன் அமைப்புச் சிதைவுகளும் ஏற்படக்கூடும். 1911 ஆம் ஆண்டிலேயே பக்கவாட்டுக் கட்டுப்பாட்டுக்கு, குறிப்பாக இருதள இறக்கை வானூர்தி வடிவமைப்புக்களில் இறக்கை முறுக்கலுக்குப் பதிலாக இறக்கைத் துடுப்புக்கள் மிகப் பொதுவாகப் பயன்படத் தொடங்கின. அக்காலத்து ஒருதள இறக்கை வானூர்தி வடிவமைப்புக்கள் பெருமளவு நெகிழ்வுத்தன்மை கொண்டவை ஆதலால் இறக்கை முறுக்கலுக்கு கூடுதல் பொருத்தமானவையாகக் காணப்பட்டன. ஆனாலும், 1915க்குப் பின்னர் ஒருதள இறக்கை வானூர்திகளுக்கும் இறக்கைத் துடுப்புக்களே நியமமாக ஆயின.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறக்கை_முறுக்கல்&oldid=2749404" இலிருந்து மீள்விக்கப்பட்டது