போன்னீ புராத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் போன்னீ ஜே. புராத்தி (Dr. Bonnie J. Buratti) ஒரு கோள் வானியலாளர் ஆவார். இவரது ஆய்வு கோள் மேற்பரப்புகளின் உட்கூறுகளையும் இயற்பியல் பண்புகளையும் பகுத்தாய்வதாகும். இவர் கலிபோர்னியா பசதேனாவில் உள்ள தாரைச் செலுத்தா ஆய்வகத்தின் புவி, விண்வெளி அறிவியல் புலங்கள் பிரிவில் பணிபுரிகிறார். இங்கு இவர் வால்வெள்ளிகள், சிறுகோள்கள், நிலாக்கள் குழுவை வழி நடத்துகிறார்.[1] மேலும், இவர் வெளிப்புறச் சூரியக் குடும்ப ஆவியாக்கப்பொருள் போக்குவரத்து பற்ரியும் ஆய்வு செய்கிறார்.[2]


கல்வி[தொகு]

இவர் தன் மூதறிவியல் பட்டத்தை மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் புவி, விண்வெளி அறிவியல் புலங்களில் பெற்றார். மேலும், இவர் வானியலிலும் விண்வெளி அறிவியலிலும் மூதறிவியல் பட்டமும் முனைவர் பட்டமும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுள்ளார்.

வாழ்க்கைப்பணி[தொகு]

முனைவர் புராத்தி வாயேஜர் திட்டம், காசினி-ஐகன்சு விண்கலத் திட்டம், நியூஒரைசன் விண்வெளி ஆய்கலத் திட்டம் ஆகியவற்றில் பங்கேற்கிறார்.[3] இவர் காசினி திட்ட்த்துக்காக நாசாவின் உயரிய சாதனை படைத்தமைக்கான பதக்கத்தை 2006 இல் பெற்றார். முனைவர் புராத்தி பள்ளி, கல்லூரி கல்விப் பரப்புதலில் ஈடுபட்டு வருகிறார்.[4] இப்போது இவர் புளூட்டோவையும் அதன் நிலாக்களையும் ஆயும் நியூஒரைசன் திட்டத்தின் அறிவியல் குழுவில் உள்ளார். இவர் 2014 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் கோள் அறிவியல் பிரிவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5] 90502 புராத்தி எனும் சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[6] In November 2015 Dr. Buratti was named the NASA Project Scientist for the European Space Agency's Rosetta Mission to Comet 67P/ Churyumov-Gerasimenko.[7] She is a Fellow of the American Geophysical Union[8]

நூல்தொகை[தொகு]

நூல்கள்

  1. Worlds Fantastic, Worlds Familiar: A Guided Tour of the Solar System ISBN 9781316591444

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jet Propulsion Laboratory: Bonnie Buratti". JPL.Gov. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
  2. Buratti, Bonnie (May 2015). "Photometry of Pluto 2008--2014: Evidence of Ongoing Seasonal Volatile Transport and Activity". Astrophysical Journal Letters 804 (1): L6. doi:10.1088/2041-8205/804/1/L6. Bibcode: 2015ApJ...804L...6B. http://adsabs.harvard.edu/abs/2015ApJ...804L...6B. பார்த்த நாள்: 17 May 2015. 
  3. Buratti, J., Bonnie (1 April 2005). "Cassini Visual and Infrared Mapping Spectrometer Observations of Iapetus: Detection of CO2". The Astrophysical Journal Letters 622 (2). doi:10.1086/429800. http://iopscience.iop.org/1538-4357/622/2/L149. பார்த்த நாள்: 15 May 2015. 
  4. "Teachers Touch The Sky". jpl.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 14 May 2015.
  5. "DPS Officers". Division of Planetary Sciences. பார்க்கப்பட்ட நாள் 17 May 2015.
  6. "JPL Small-Body Database Browser". JPL. பார்க்கப்பட்ட நாள் 15 May 2015.
  7. "Rosetta Team Members". JPL. Archived from the original on 17 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 October 2016.
  8. American Geophysical Union https://honors.agu.org/fellows/fellows-alpha-list/. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=போன்னீ_புராத்தி&oldid=3565852" இலிருந்து மீள்விக்கப்பட்டது