டைதயோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைதயோனைட்டு எதிர்மின் அயனியின் வழக்கத்திற்கு மாறான கட்டமைப்பு. இதில் கந்தகம்-கந்தகம் பிணைப்பு குறிப்பிடத்தக்க அளவில் நீண்டுள்ளது
டைதயோனைட்டு எதிர்மின் அயனியின் பந்து மற்றும் குச்சி மாதிரி

டைதயோனைட்டு எதிர்மின் அயனி (Dithionite anion) என்பது [S2O4]2− என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் ஆக்சோ எதிர்மின் அயனியாகும் [1]. கந்தகத்தின் ஆக்சோ எதிர்மின் அயனியான இது டைதயோனசு அமிலத்திலிருந்து (H2S2O4) தருவிக்கப்படுகிறது.

வேதியியல்[தொகு]

டைதயோனசு அமிலத்தை தூய்மையான அமிலமாகவோ அல்லது கரைசலிலோ கண்டறிய முடிவதில்லை. அமில நீராற்பகுப்பு, கார நீராற்பகுப்பு இரண்டிலும் டைதயோனைட்டு அயனி பங்கேற்று முறையே தயோசல்பேட்டு மற்றும் பைசல்பைட்டாகவும், சல்பைட்டு மற்றும் சல்பைடு ஆகவும் பிரிகின்றன.

2 S2O2−
4
+ H2O → S2O2−
3
+ 2 HSO
3
3 Na2S2O4 + 6 NaOH → 5 Na2SO3 + Na2S + 3 H2O

பயன்கள்[தொகு]

சோடியம் டைதயோனைட்டு என்ற டைதயோனசு அமிலத்தின் சோடியம் உப்பு வேதித் தொழிர்சாலைகளில் ஓர் ஒடுக்கும் முகவராக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இரும்பு(III) ஆக்சி-ஐதராக்சைடை கரையக்கூடிய இரும்பு(II) சேர்மங்களாக ஒடுக்க சிட்ரிக் அமிலம் போன்ற ஒருங்கிணைப்பு முகவர்களுடன் டைதயோனைட்டு இணையாகச் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும் மண் ஆய்வுகளில் படிகமல்லாத இரும்பு(III) கனிமங்களை நீக்கவும் இது பயன்படுகிறது.

டைதயோனைட்டின் சிதைவால் கந்தகத்தின் ஒடுக்கப்பட்ட இனங்கள் உற்பத்தியாகின்றன. இவை எஃகு துருப்பிடித்தலில் தீவிரமாகச் செயல்படுகின்றன. தயோசல்பேட்டு (S2O2−3) குழியிட்டு அரித்தலைத் தூண்டுகிறது என்பது அறியப்பட்டதேயாகும். இதே போல கரைந்துள்ள சல்பைடுகள் (Na2S) பிளவுபடுத்தி அரிப்பை உண்டாக்குதலுக்கு காரணமாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. International Union of Pure and Applied Chemistry (2005). Nomenclature of Inorganic Chemistry (IUPAC Recommendations 2005). Cambridge (UK): RSC–IUPAC. ISBN 0-85404-438-8. p. 130. Electronic version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைதயோனைட்டு&oldid=2749402" இலிருந்து மீள்விக்கப்பட்டது