வானலைக் கட்டுப்பாட்டு வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானலைக் கட்டுப்பாட்டு வானூர்தியொன்றைப் பறக்கவிடும் காட்சி

வானலைக் கட்டுப்பாட்டு வானூர்தி (Radio-controlled aircraft) என்பது, கையில் வைத்து இயக்கக்கூடிய அலைபரப்பி ஒன்றைப் பயன்படுத்தி நிலத்தில் இருந்து தொலைக் கட்டுப்பாட்டு முறை மூலம் இயக்கப்படும் சிறிய பறக்கும் இயந்திரம் ஆகும். அலைபரப்பி வானூர்தியில் பொருத்தப்படும் அலைவாங்கியுடன் தொடர்புகொள்ளும். அலைவாங்கி, தான் பெறும் சமிக்ஞைகளுக்கு ஏற்ப பணிப்புப் பொறியமைப்புக்கு சமிக்ஞைகளை அனுப்பும். இங்கிருந்து கட்டுப்பாட்டு மேற்பரப்புகளுக்குச் செல்லும் கட்டளைகளுக்கு அமைய வானூர்தியின் திசை மாற்றப்படும்.

2000 ஆவது ஆண்டுக்குப் பின்னர், இயக்கிகள், மின்கலங்கள், மின்னியற் கருவிகள் ஆகியவற்றின் செலவு, நிறை, செயற்பாடு, திறன் ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக வானலைக் கட்டுப்பாட்டு வானூர்தி பறக்கவிடுதல் ஒரு பொழுதுபோக்காகப் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளது. அறிவியல், அரசாங்க, இராணுவ அமைப்புக்களும், பரிசோதனைகளுக்கும், காலநிலைத் தகவல்களைப் பெறுவதற்கும், வானியக்கவியல் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கும் இவ்வகை வானூர்திகளைப் பயன்படுத்துகின்றன. ஆளில்லா வானூர்திகள் அல்லது வேவு விமானங்கள் காணொளிகளை எடுக்கக்கூடிய திறன் கொண்டவையாகவும் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் ஆயுதங்களும் பொருத்தப்படுவது உண்டு.[1]

வரலாறு[தொகு]

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புழக்கத்தில் இருந்த ஐதரசன் நிரப்பிய வகை வான்கப்பல்களே மின்னியல் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்ட வானூர்திகளுக்கான தொடக்க எடுத்துக்காட்டுகள். இசை நிகழ்ச்சிகளின்போது அரங்கங்களைச் சுற்றி இவை பறக்கவிடப்பட்டன. அடிப்படையான பொறியுமிழ் வானலைச் சமிக்ஞைகளைப் பயன்படுத்தி இவை இயக்கப்பட்டன.[2]

மேற்கோள்கள்[தொகு]