நுண்சுவடுத் தனிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிர்வேதியியலில் நுண்சுவடுத் தனிமம் (ultratrace element) என்பது குறிப்பிட்ட ஓர் உயிரினத்தில் கிராம் ஒன்றுக்கு ஒரு மைக்ரோகிராம் அளவுக்கும் குறைவாக அடங்கியுள்ள தனிமத்தைக் குறிக்கிறது. எடையளவில் இது 0.0001% இலும் குறைவான இருப்பைக் குறிக்கிறது. ஆனால் அவ்வுயிரினத்தின் வளர்சிதை மாற்றத்தில் இத்தனிமம் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக இருக்கும்.

சிலிக்கன், நிக்கல், போரான், வனேடியம் [1], கோபால்ட்டு [2] போன்ற நுண்சுவடுத் தனிமங்கள் மனித உயிரினத்தில் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. இதே போல புரோமின், காட்மியம், புளோரின், ஈயம், இலித்தியம், வெள்ளீயம் போன்றவை பிற உயிரினங்களில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன [3].

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. J. Mann & A. S. Truswell (editors). Essentials of Human Nutrition (3rd edition, 2007). Oxford: Oxford University Press
  2. Yamada, Kazuhiro (2013). "Chapter 9. Cobalt: Its Role in Health and Disease". in Astrid Sigel. Interrelations between Essential Metal Ions and Human Diseases. Metal Ions in Life Sciences. 13. Springer. பக். 295–320. doi:10.1007/978-94-007-7500-8_9. 
  3. Nielsen, Forrest H., Ultratrace Elements in Nutrition, Annual Review of Nutrition Vol. 4: 21-41 (Volume publication date July 1984)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்சுவடுத்_தனிமம்&oldid=2461542" இலிருந்து மீள்விக்கப்பட்டது