அமி பர்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமி ஜே. பர்கர் (Amy J. Barger) (பிறப்பு: ஜனவரி 18, 1971) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மிகத் தொலைவான வான்பொருள்களாகிய குவேசார்கள், கருந்துளைகள் போன்றவற்றின் ஆய்வுகளில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். இவர் அருகில் உள்ள பால்வெளிகளின் கருந்துளைகள் பெரியவை மட்டுமன்றி, மிக அண்மையில் உருவாகியவை எனக் காட்டினார். இவர் பிற ஆய்வாளரோடு இணைந்து தொலைவில் அமைந்த பால்வெளிகளைச் சார்ந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார். இவர் இப்போது விசுகான்சின்-மாடிசன் பல்கலைக்கழகப் பேராசிரியராக உள்ளார்.

இவர் 1997 இல் கேம்பிரிட்ஜ் பலகலைக்கழகத்தின் கிங்சு கல்லூரியில் மார்ழ்சல் ஆய்வாளராக இருந்து வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து இவர், தொலைவாக உள்ள பால்வெளிகளின் தோற்ரமும் புறவடிவமும் குறித்து மார்ப்சு கூட்டுறவுத் திட்டத்தில் பணிபுரிந்தார்.[1] இவர் பல விருதுகளும் ஆய்வுநல்கைகளும் பெற்றுள்ளார். இவற்றில் வானியலுக்கான 2001 ஆம் ஆண்டின் ஆன்னி ஜம்ப் கெனான் விருதும் அடங்கும்.[2] இவர் 2002 இல் வானியலுக்கான நியூட்டன் இலேசி பியர்சு பரிசை அமெரிக்க வானியல் கழகத்தில் இருந்து பெற்றார்.[3] இவர் 2007 இல் அமெரிக்க இயற்பியல் கழகத்தில் இருந்து மரிய கோய்ப்ர்ட் விருதைப் பெற்றுள்ளார்.[4] இவர் 2002 இல் 2002 சுலோவன் ஆய்வுநல்கையும் 2003 இல் டேவிட், உலூசில்லே பக்கார்டு ஆய்வுநல்கையும் பெற்றார். இவர் 2017 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[5]

குறிப்புகள்[தொகு]

  1. "The Morphs" Durham University, United Kingdom
  2. "Annie J. Cannon Award in Astronomy". American Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் September 13, 2013.
  3. "Newton Lacy Pierce Prize in Astronomy". American Astronomical Society. Archived from the original on பிப்ரவரி 11, 2013. பார்க்கப்பட்ட நாள் September 13, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "2007 Maria Goeppert Mayer Award Recipient: Amy Barger". American Physical Society. பார்க்கப்பட்ட நாள் September 13, 2013.
  5. 2017 Fellows, American Association for the Advancement of Science, archived from the original on 2017-12-01, பார்க்கப்பட்ட நாள் 2017-11-20

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமி_பர்கர்&oldid=3541280" இலிருந்து மீள்விக்கப்பட்டது