சினெல்லின் சன்னல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சினெல்லின் சன்னல் (Snell's window) (சினெல்லின் வட்டம் (Snell's circle)[1] அல்லது ஒளியியல் ஆழ்துளை (Optical man-hole)[2] எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த கோட்பாட்டைப் பயன்படுத்தி நீருக்கடியில் பயன்படுத்தும் கண்ணாடி, பரப்புக்கு மேலே 96 டிகிரி கோணம் வரையே பார்க்க இயலுவது ஏன் என்பது விளக்கப்படுகிறது.[3]

இந்தத் தோற்றப்பாடு நீருக்குள் செல்லும் ஒளியானது ஒளி விலகலடைவதால் ஏற்படுகிறது. இது சினெல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.[4]

சினெல்லின் சன்னலுக்கு வெளியேயுள்ள பகுதி கருமையாகத் தெரியும் அல்லது முழு அக எதிரொளிப்பின் மூலம் நீருக்கடியிலுள்ள பொருட்கள் தெரியும்.

நீருக்கடியில் புகைப்படம் எடுப்போர், சினெல்லின் சன்னலுக்கு கீழேயுள்ள பொருட்களை காண தேவையான ஒளி மூலங்களைப் பயன்படுத்துவர்.

பிம்பம் உருவாதல்[தொகு]

சினெல்லின் சன்னலில் பிம்பம் உருவாகும் விதம்

நீருக்கடியிலிருந்து மேலே பார்க்கும் போது தொடுவானத்திலிருந்து தொடுவானம் வரை, அரை வட்ட வடிவில் தெரிய வேண்டும். ஆனால் காற்றுக்கும் நீருக்கும் இடையேயுள்ள ஒளி விலகல் காரணமாக 180° தெரிய வேண்டிய பார்வைக் கோணம், சினெல்லின் சன்னலால் 97° சுருக்கப்படுகிறது. இது மீனின் கண் போன்ற அமைப்பைக் கொண்ட வில்லையைப் போல் செயல்படுகிறது. பிம்பங்களின் ஒளியின் பொலிவு, சாய்கோணம் குறையக் குறைய, குறைகிறது. ஒளியானது எதிரொளிக்கப்படுவதற்குப் பதிலாக விலகல் அடைகிறது. அலைகள் மற்றும் சிற்றலைகள் (ripples) ஏற்படுத்தும் ஒளி விலகல் பிம்பத்தை சிதறடிக்கிறது. கலங்கிய நீரும் பிம்பத்தை சிதறடிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினெல்லின்_சன்னல்&oldid=3455668" இலிருந்து மீள்விக்கப்பட்டது