ராணி ராஜராஜேஸ்வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ராணி ராஜராஜேஸ்வரி
நேபாள ராணி
நேபாள அரசப் பிரதிநிதி
துணைவர்ராணா பகதூர் ஷா
வாரிசு(கள்)திலோத்தமா தேவி
அரச மரபுஷா வம்சம் (திருமணத்தால்)
பிறப்புநேபாள இராச்சியம்
இறப்பு5 மே 1806
சங்கு, நேபாளம்
சமயம்இந்து சமயம்

ராணி ராஜராஜேஸ்வரி தேவி (Raj Rajeshwari Devi) (இறப்பு: 5 மே 1806), நேபாள இராச்சியத்தின் மன்னர் ராணா பகதூர் ஷாவின் பட்டத்து ராணியாகவும், இரண்டு முறை நாட்டின் அரசப் பிரதிநிதியாக நேபாளத்தை நிர்வகித்தவர். தாபா வம்ச அமைச்சரும், படைத்தலைவருமான பீம்சென் தபாவின் வற்புறுத்தல் காரணமாக, 5 மே 1806ல் தீக்குளித்து உயிர் நீத்தார்.

வாழ்க்கை[தொகு]

ராணா பகதூர் ஷாவின் தனது நான்காவது மனைவி கந்தவதி தேவிக்குப் பிறந்த குழந்தை கீர்வான் யுத்த விக்ரம் ஷா, நேபாள இராச்சியத்தின் அரியணை ஏற்ற முடிவு செய்ததால், வாரணாசிக்கு நாடு கடத்தப்பட்டார். ராணி ராஜராஜேஸ்வரி, குழந்தை கீர்வான் யுத்த விக்ரம் ஷாவின் அரசப் பிரதிநிதியாக சில காலம் நேபாள நாட்டை ஆண்டார். பின்னர் ராணி ராஜேஸ்வரி, கணவர் ராணா பகதூர் ஷாவுடன் வாரணாசியில் வாழ்ந்தார். இதனால் ராணா பகதூர் ஷாவின் இரண்டாம் மனைவி ராணி சுபர்ண பிரபா தேவி, குழந்தை கீர்வான் யுத்த விக்ரம் ஷாவின் அரசப் பிரதிநிதியாக நேபாளத்தை நிர்வகித்தார்.[1] பின்னர் 26 சூலை 1801ல் ராஜராஜேஸ்வரி நேபாளம் திரும்பினார். [2][3]

ராணி ராஜராஜேஸ்வரி தேவியின் அடியாட்கள், ராணி சுபர்ண பிரபா தேவியை வீட்டுச் சிறையில் வைத்து விட்டு[4], நாட்டின் தலைமை அமைச்சர் கீர்த்திமான் சிங் பஸ்யந்தை, 28 செப்டம்பர் 1801 அன்று கொன்றனர். [5]பின்னர் ராணி ராஜராஜேஸ்வரி கீர்வான் யுத்த விக்ரம் ஷாவின் அரசப் பிரதிநிதியாக இரண்டாம் முறையாக நேபாள நாட்டை நிர்வகித்தார். [6][3]

1804ல் ராணா பகதூர் ஷா வாரணாசிலிருந்து மீண்டும் நேபாளத்திற்கு வந்து ஆட்சியை கைப்பற்றினார். இரண்டு ஆண்டுகள் கழித்து, ராணி ராஜராஜேஸ்வரி தேவியின் சகோதரன், மன்னர் ராணா பகதூர் ஷாவை கொன்று விடுகிறார். பீம்சென் தபாவின் கட்டாயத்தின் படி, விதவையான ராணி ராஜராஜேஸ்வரி 5 மே 1806ல் தீக்குளித்து உயிர் நீத்தார். [7][8]

பின்னர் ராணி திரிபுரசுந்தரி மற்றும் ராணி சுபர்னா பிரபா தேவி ஆகியோர் இளவரசன் கீர்வான் யுத்த விக்ரம் ஷாவின் அரசப் பிரதிநிதியாக நேபாள நாட்டை நிர்வகித்தனர். [9]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Acharya 2012, ப. 32.
  2. Nepal 2007, ப. 52.
  3. 3.0 3.1 Acharya 2012, ப. 36–37.
  4. Acharya 2012, ப. 43.
  5. Acharya 2012, ப. 34.
  6. Pradhan 2012, ப. 14.
  7. Genealogy, The Royal House of Shah, Nepal: 1777 - 1799 H.H. Svasti Sri Giriraj Chakrachudamani Narnarayanetyadi Vividha Virudavali Virajamana Manonnata Shriman Maharajadhiraja Sri Sri Sri Sri Sri Maharaj Rana Bahadur Shah Bahadur Shamsher Jang Devanam Sada Samar Vijayinam, Maharajadhiraja of Nepal. ... m. (first) at Katmandu, 1789, Sri Sri Sri Maharani Raj Rajeshwari Devi [Sri Vidya Lakshmi Devi] (k. by forced sati on the orders of Bhimsen Thapa, on the bank of the Salinadi rivulet, at Sankhu, 5th May 1806)
  8. Worldwide Guide to Women in Leadership, "Women In Power, 1770-1800" ("1799-1800 and 1802-04 Regent Sri Sri Sri Maharani Raj Rajeshwari Devi of Nepal ... she was imprisoned at Helambu and killed by being forced to commit sati.").
  9. Guide 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_ராஜராஜேஸ்வரி&oldid=3797361" இலிருந்து மீள்விக்கப்பட்டது