சிரிப்பான் (பறவை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லியோத்ரிசிடே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிரிப்பான்
வெள்ளைக் கொண்டைச் சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
Superfamily:
சில்வியோய்டே
குடும்பம்:
ஸ்வைன்சன், 1831

சிரிப்பான்கள் (ஆங்கிலப் பெயர்: Laughingthrushes) என்பவை பறவைகளின் ஒரு குடும்பம் ஆகும். இவை பழைய உலகக் குருவிகள் ஆகும். இவை பல்வேறு வகை அளவு மற்றும் நிறங்களில் காணப்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன. முக்கியமாக இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாவில் பல்வேறு வகைகளாக உள்ளன. இந்தக் குடும்பம் முழுவதும் பழைய உலக வாயாடிகளின் குடும்பமான டிமலீடேயின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தன.

பண்புகள்[தொகு]

இவை பொதுவாகப் பூச்சியுண்ணிகள் ஆகும். எனினும் பெரும்பாலானவை பெர்ரிகளையும், பெரிய இனப்பறவைகள் சிறிய ஓணான்களையும் மற்றும் பிற முதுகெலும்பிகளையும் உண்ணும்.[1][1]

பேரினங்களின் பட்டியல்[தொகு]

  • பேரினம் பபக்ஸ் (Babax) (23 இனங்கள்)
  • பேரினம் கர்ருலக்ஸ் (Garrulax) – (தோராயமாக 14 இனங்கள்)
  • பேரினம் ட்ரோசலோப்டெரோன் (Trochalopteron) (19 இனங்கள்)
  • பேரினம் மான்டிசின்க்லா (Montecincla) (4 இனங்கள்)
  • பேரினம் டுர்டோயிடேஸ் (Turdoides) (27 இனங்கள்)
  • பேரினம் குபியோர்னிஸ் (Kupeornis) (3 இனங்கள்)
  • பேரினம் பைல்லந்துஸ் (Phyllanthus)
    • கபுச்சின் வாயாடி, Phyllanthus atripennis
  • பேரினம் குடியா (Cutia) (2 இனங்கள்)
  • பேரினம் லியோத்ரிக்ஸ் (Leiothrix) (2 இனங்கள்)
  • பேரினம் க்ரோசியாஸ் (Crocias) (2 இனங்கள்)
  • பெரினம் ஹெடிரோபசியா (Heterophasia) (8 இனங்கள்)
  • பேரினம் லியோசிச்லா (Liocichla) (5 இனங்கள்)
  • பேரினம் அக்டினோடுரா (Actinodura) (7 இனங்கள்)
  • பேரினம் மின்லா (Minla) (1 இனம்)

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Perrins, C. (1991). Forshaw, Joseph. ed. Encyclopaedia of Animals: Birds. London: Merehurst Press. பக். 188–190. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85391-186-0. 
  • Cibois, A. 2003. Mitochondrial DNA phylogeny of babblers (Timaliidae). Auk 120: 35–54.
  • Collar, N. J., and C. Robson. 2007. Family Timaliidae (babblers). Pages 70–291 in J. del Hoyo, A. Elliott, and D.A. Christie (editors), Handbook of the Birds of the World Volume 12: Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.
  • Gelang, M., A. Cibois, E. Pasquet, U. Olsson, P. Alström and P.G.P. Ericson. 2009. Phylogeny of babblers (Aves, Passeriformes): major lineages, family limits and classification. Zoologica Scripta 38: 225–236.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரிப்பான்_(பறவை)&oldid=3479301" இலிருந்து மீள்விக்கப்பட்டது