எருசலேம் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருசலேம் நாள்
எருசலேம் நாள் 2007, யாபா வீதி
அதிகாரப்பூர்வ பெயர்எபிரேயம்: יום ירושלים‎ (Yom Yerushalayim)
கடைபிடிப்போர்இஸ்ரேல்
வகைதேசிய
முக்கியத்துவம்ஆறு நாள் போர் முடிவில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் எருசலேம் ஒன்றிணைக்கப்பட்டது. இரண்டாம் கோவில் உரோமரால் கிபி 70 இல் அழிக்கப்பட்ட பின் முதல் தடவையாக எருசலேம் யூதர் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
தொடக்கம்இயர் 28 (எபிரேய நாட்காட்டி)
நாள்28 Iyar
நிகழ்வுஆண்டு

எருசலேம் நாள் (Jerusalem Day; எபிரேயம்: יום ירושלים‎, Yom Yerushalayim) என்பது இசுரேலின் தேசிய நாளாகும். 1967 யூன் மாதத்தில் இடம் பெற்ற ஆறு நாள் போர் முடிவில் பழைய நகர் இசுரேலியர்களின் கட்டுப்பாட்டில் வந்ததையும் எருசலேமின் மீள் ஒன்றிப்பையும் கொண்டாடும் விழாவாக இது உள்ளது. இந்நாள் அதிகாரபூர்வமாக அரச விழாவாகவும் நினைவு சேவையாகவும் அடையாளமிடப்பட்டது.

இசுரேலின் தலைமைக்குரு எருசலேம் நாளை மேற்குச் சுவர் பகுதியில் அணுகுதலை மீளவும் பெற்றுக் கொண்டதை அடையாளப்படுத்தும் ஒரு சிறிய சமய விழாவாக அடையாளப்படுத்தினார்.[1][2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Adele Berlin (2011). "Yom Yerushalayim". The Oxford Dictionary of the Jewish Religion. Oxford University Press. பக். 803. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-973004-9. https://books.google.com/books?id=hKAaJXvUaUoC&pg=PA803. 
  2. "Yom Yerushalayim – Jerusalem Day | Jewish Virtual Library". jewishvirtuallibrary.org. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எருசலேம்_நாள்&oldid=3364967" இலிருந்து மீள்விக்கப்பட்டது