பைலோஸ் போர் இரத்தினக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Pylos Combat Agate
செய்பொருள்அகேட் கல்
அளவு3.4 சென்டிமீட்டர்கள் (1.3 அங்)
உருவாக்கம்கிமு 1450
காலம்/பண்பாடுஏஜியன் வெண்கலக் காலம்
பைலோஸ் போர் இரத்தினக்கல் is located in கிரேக்கம்
பைலோஸ் போர் இரத்தினக்கல்
கண்டுபிடிக்கப்பட்ட இடம்

பைலோஸ் போர் இரத்தினக்கல் ( Pylos Combat Agate) என்பது பண்டைய கிரேக்க காலத்திய மினோவன் நாகரிக முத்திரை ஆகும். இதில் போரில் ஈடுபட்ட வீரர்களை சித்தரித்து உள்ளது.[1][2] இது மியோவான் பைஸ்ஸில் உள்ள நெஸ்ஸேரின் அரண்மனைக்கு அருகில் உள்ள தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் கி.மு 1450 காலத்தியதாக கருதப்படுகிறது.[3] இந்த முத்திரையில் உள்ள நுணுக்கமான செதுக்கல்கள் இதன் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பின்னணி[தொகு]

அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கிரேக்க நாட்டின் பைலோஸ் நகரில் ஒரு வீரனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 3.6 சென்டிமீட்டர் நீளம் (1.4 அங்குலங்கள்) அளவைக் கொண்ட ஒரு முத்திரை ரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. கி.மு 1450 க்கு முற்பட்ட வெண்கல காலத்திய வீரரின் கல்லறையில் நான்கு தங்க முத்திரை மோதிரங்களுடன் இந்தக் கல்லும் கண்டுபிடிக்கப்பட்டது.[4][5] இந்த ரத்தினக்கலில் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தில் இருவர் நேருக்கு நேர் வாள் சண்டையிடுகிறார்கள். இன்னொருவர் சண்டையில் தோற்று கீழே விழுந்து கிடக்கிறார். வீரர்கள் திடகாத்திரமான உடலுடன் காட்சி தருகிறார்கள். இதில் உள்ள சிற்பமானது உருப்பெருக்கி கண்ணாடி மூலம் பார்த்தால்தான் தெரியும். சுண்ணாம்புப் பொருளால் மூடப்பட்ட இந்த ரத்தினக்கல்லை மிகக் கவனமாகச் சுத்தம் செய்து, ஓராண்டு கழித்து இந்தச் சிற்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த இரத்தினக் கல்லில் காணப்படும் சித்திரம் கல்லறை வீரரை சித்தரிக்கிறது என்று நம்பப்படுகிறது, இருப்பினும் அவர் ஒரு பூசாரியாக இருக்கவும் சாத்தியம் உள்ளது .[6]

தாக்கம்[தொகு]

கிரேக்க கலாச்சார அமைச்சகம் இது கடந்த 65 ஆண்டுகளில் கண்டறியப்பட்ட கிரேக்கத்தில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று குறிப்பிடுகிறது. எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத காலகட்டத்தில், மிகச் சிறிய இடத்துக்குள் இவ்வளவு நுணுக்கமான ஒரு சிற்பத்தை எப்படி வடிக்க முடிந்தது என்று எல்லோரும் வியக்கின்றனர். சில தொல்லியல் ஆய்வாளர்கள் இத்தகைய சிறிய சிற்பத்தை உருபெருக்கும் கண்ணாடி உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்ககலாம் என்று நம்புகிறார்கள், "கிரேக்க கலைகளைப் பற்றிய வரலாறு, இப்போது இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னோக்கிச் சென்றுவிட்டது." என்கின்றனர். இந்த கண்டுபிடிப்பு மினோவன் நாகரிகத்தின் கலை வளர்ச்சியைப் பற்றி முன்னர் நிறுவப்பட்ட முடிவுகளுக்கு சவால்களாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Unearthing a masterpiece" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-07.
  2. Pettit, Harry (8 November 2017). "Mystery of the incredibly detailed 3500-year-old sealstone that was found buried with an ancient Greek warrior - and was 1000 years ahead of its time". Daily Mail Online. http://www.dailymail.co.uk/sciencetech/article-5057947/Rare-sealstone-tomb-Bronze-Age-Greek-warrior.html. பார்த்த நாள்: 8 November 2017. 
  3. Gibbens, Sarah (7 November 2017). "Ancient Greek 'Masterpiece' Revealed on Thumb-Size Gem". பார்க்கப்பட்ட நாள் 7 November 2017.
  4. Goenka, Himanshu (7 November 2017). "Pylos Combat Agate, Ancient Greek Seal, Fine Specimen Of Miniature Prehistoric Art". International Business Times. http://www.ibtimes.com/pylos-combat-agate-ancient-greek-seal-fine-specimen-miniature-prehistoric-art-2611420. பார்த்த நாள்: 7 November 2017. 
  5. In, Geology. ""Pylos Combat Agate' Rare Minoan Sealstone Discovered". Geology IN. https://www.geologyin.com/2017/11/pylos-combat-agate-rare-minoan.html. பார்த்த நாள்: 2017-11-09. 
  6. "A treasure-filled tomb of a Bronze Age warrior may rewrite the history of Greek civilization" (in en). Newsweek. 2017-11-07. http://www.newsweek.com/ancient-greece-treasure-filled-tomb-bronze-age-warrior-may-rewrite-history-703965. பார்த்த நாள்: 2017-11-08.