காத்மாண்டு சமவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காத்மாண்டு நகரச் சதுக்கம்
பசுபதிநாத் கோவில்
பதான் அரண்மனை சதுக்கம்
சுயம்புநாதர் கோயில்
பௌத்தநாத்து

காத்மாண்டு சமவெளியில் (Kathmandu Valley) (நேபாளி: काठमाडौं उपत्यका, நேபாளத்தின் தேசியத் தலைநகரமாக காட்மாண்டு நகரம் உள்ளது. பல பண்பாடு, வரலாறு, இயற்கைச் சின்னங்கள் கொண்ட காத்மாண்டு சமவெளியில் புகழ் பெற்ற இந்து மற்றும் பௌத்தக் கோயில்களும், தேசியப் பூங்காக்களையும் கொண்டுள்ளது. காத்மாண்டு சமவெளியில் ஏழு உலகப் பாரம்பரியக் களங்கள் உள்ளது. [1]

நேபாளத்தில் காத்மாண்டு சமவெளி மக்கள் தொகையும், பொருளாதார வளர்ச்சியும் கொண்டது. காத்மாண்டு சமவெளி காத்மாண்டு மாவட்டம், லலித்பூர் மாவட்டம், சித்வான் மாவட்டம், பக்தபூர் மாவட்டம் என நான்கு மாவட்டங்களையும், காட்மாண்டு, லலித்பூர், பரத்பூர், வீரகஞ்ச் என நான்கு மாநகராட்சிகளையும் கொண்டுள்ளது.

தற்கால நேபாள அரசின் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் காத்மாண்டு சமவெளியில் உள்ளதால், நேபாளத்தின் பொருளாதார மையமாக விளங்குகிறது. ஏப்ரல், 2015ல் காத்மாண்டு சமவெளியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சிதைந்தது.[2]மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது படுகாயமடைந்தனர். இந்நிலநடுக்கத்தால் காத்மாண்டு சமவெளியின் உள்கட்டமைப்புகள் சீர்குலைந்தது.

வரலாறு[தொகு]

பண்டைய வரலாறு[தொகு]

பரத கண்டத்தின் காத்மாண்டு சமவெளியில், முதலில் கிராதர்கள் கிராத நாட்டை நிறுவினர்.

மௌரியப் பேரரசர் அசோகரின் மகளான சாருமதி, கிமு மூன்றாம் நூற்றாண்டில், பதான் எனப்படும் லலித்பூர் நகரத்தில் தூபிகளை நிறுவினார்.

வைசாலி நாட்டின் லிச்சாவி வம்சத்தினர், காத்மாண்டு சமவெளியைக் கைப்பற்றி, கிபி 400 முதல் கிபி 750 முடிய ஆண்டனர். [3]

எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திபெத்திய பேரரசால் லிச்சாவிகளின் காத்மாண்டு சமவெளி வெற்றி கொள்ளப்பட்டது.

லிச்சாவி குலத்திற்குப் பின்னர் இராகவதேவன் என்ற மன்னர் கிபி 869-இல் நிறுவிய தாக்கூரி வம்ச அரசு 869 முதல் 1200 முடிய காத்மாண்டு சமவெளியை ஆண்டது. [4]

மத்தியகால வரலாறு[தொகு]

மல்ல வம்சத்தவர்கள் காத்மாண்டு சமவெளியில் பதான் நகரப் பரப்பை மேலும் விரிவு படுத்தினர். மல்ல வம்ச மன்னர் வீரதேவன் என்பவர் லலித்பூர் எனும் பாதன் நகரத்தை நிறுவினார். மல்லர்கள் காத்மாண்டு சமவெளியை கி பி 1201 முதல் 1768 முடிய ஆண்டனர்.

மல்லர்கள் ஆட்சியில், காத்மாண்டு சமவெளியில் காட்மாண்டு, லலித்பூர் மற்றும், பக்தபூர் போன்ற நகரங்களில் காத்மாண்டு நகர சதுக்கம், பக்தபூர் நகர சதுக்கம், பாதன் நகர சதுக்கம் போன்ற அரண்மனைகளும், நகர சதுக்ககங்களும் கட்டப்பட்டது. மல்லர்களின் இறுதி மன்னரான ஜெயப்பிரகாஷ் மல்லர், கிபி 1768ல் நடைபெற்ற கீர்த்திப்பூர் போரில் நாட்டை ஷா வம்ச மன்னர்களிடம் பறிகொடுத்தார்.

வரலாற்று காலம்[தொகு]

கோர்க்கா மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா என்பவர், 1768ஆம் ஆண்டில் நடைபெற்ற கீர்த்திப்பூர் போரில், மல்ல நாட்டவர்களை வென்று, அகண்ட நேபாள இராச்சியத்தை நிறுவினார். ஷா வம்சத்தவர்கள், காத்மாண்டு சமவெளி உள்ளிட்ட நேபாள இராச்சியத்தை 1846 முடிய ஆண்டனர். ஷா வம்ச மன்னர்களின் பரம்பரை அமைச்சர்களாகவும், படைத்தலைவர்களாகவும் இருந்த ராணா வம்சத்தின், ஜங் பகதூர் ராணா, கிபி 1846ல் ஷா வம்ச மன்னர்களை பொம்மை அரசர்களாக ஆக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார். ராணா வம்சத்தவர்கள் கிபி 1951 முடிய நேபாளத்தின் ஆட்சியார்களாக செயல்பட்டனர். கிபி 1951ல் ராணா வம்சத்தவர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டு, மீண்டும் ஷா வம்சத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. ஷா வம்ச மன்னர்களின் ஆட்சி கிபி 2008 முடிய நீடித்தது.

ராணா வம்சம்[தொகு]

காத்மாண்டு சமவெளி உள்ளிட்ட நேபாளத்தை 1846 - 1951 முடிய ஆண்டவர்கள் ராணா வம்சத்தினர் ஆவார். [5] ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா என்பவர் 1846ல் நேபாள இராச்சியத்தின் ஆட்சி அதிகாராங்களை கைப்பற்றி, ஷா வம்ச மன்னர்களை கைப்பாவையாக வைத்துக் கொண்டு, அவரும், அவரது பரம்பரையினரும் 1951 முடிய ஆட்சி செலுத்தினார்.

புவியியல்[தொகு]

கிண்ணம் போன்ற அமைப்பில் அமைந்த காத்மாண்டு சமவெளியின் மையப் பகுதி, கடல் மட்டத்திலிருந்து 1425 மீட்டர் உயரத்தில் உள்ளது. இச்சமவெளியின் வடக்கில் இமயமலையின் 2825 மீட்டர் உயரம் கொண்ட நாகார்ஜுன் மலைத்தொடரும், 2895 மீட்டர் உயரமுடைய பூல்சௌக் மலைத்தொடரும், 2551 மீட்டர் உயரமுடைய சந்திரகிரி மலைத்தொடரும் கொண்டது. இச்சமவெளியில் முக்கிய ஆறுகளில் ஒன்றான பாக்மதி ஆறு பாய்கிறது.

220 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காத்மாண்டு சமவெளியில் காத்மாண்டு மாவட்டம், லலித்பூர் மாவட்டம் மற்றும் பக்தபூர் மாவட்டம் என மூன்று மாவட்டங்களைக் கொண்டுள்ளது. காத்மாண்டு சமவெளி, நேபாளத்தின் பண்பாட்டு மற்றும் அரசியல் மையமாக உள்ளது.

காத்மாண்டு சமவெளியின் நடுவில் சித்வான் தேசியப் பூங்காவும் மற்றும் வடக்கில் சிவபுரி நாகார்ஜுன் தேசியப் பூங்காவும் உள்ளது.

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

காத்மாண்டு சமவெளியில் பார்க்க வேண்டிய இடங்கள்:உலகப் பாரம்பரியக் களங்களான அனுமன் தோகா நகர சதுக்கம், பக்தபூர் நகர சதுக்கம், பதான் தர்பார் சதுக்கம், பசுபதிநாத் கோவில், காத்மாண்டு நகர சதுக்கம், சித்வான் தேசியப் பூங்கா மற்றும் சிவபுரி நாகார்ஜுன் தேசியப் பூங்கா. [6][7]மற்றும் ஜானகி கோயில் மற்றும் சங்கு நாராயணன் கோயில்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://whc.unesco.org/en/list/121
  2. "Nepal Disaster Risk Reduction Portal". Government of Nepal. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015.
  3. https://books.google.co.uk/books?id=4ff2gk27p9oC&pg=PA437&dq=Licchavis+conquered+Nepal+bihar&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q=Licchavis%20conquered%20Nepal%20bihar&f=false
  4. Thakuri Dynasty
  5. Van Praagh, D. (2003). Greater Game: India's Race with Destiny and China. MQUP. பக். 319. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780773571303. https://books.google.co.uk/books?id=KVDIvLQDGckC&pg=PA319. பார்த்த நாள்: 11 September 2017. 
  6. Kathmandu Valley
  7. Properties inscribed on the World Heritage List (4)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kathmandu Valley
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்மாண்டு_சமவெளி&oldid=3922318" இலிருந்து மீள்விக்கப்பட்டது