பிந்தோல பரத்துவாஜர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பிந்தோல பரத்துவாஜர்
பிந்தோல பரத்துவாஜரின் மரச்சிற்பம், மிமுரோட்டா-ஜி கோயில், ஜப்பான்
சுய தரவுகள்
வேறு பெயர்(கள்)பிந்தோலா
Occupationபிக்கு
பதவிகள்
Teacherகௌதம புத்தர்

பிந்தோல பரத்துவாஜர் (Pindola Bharadvaja), கௌதம புத்தரின் நேரடிச் சீடர்களில் ஒருவர் ஆவார். பௌத்த சமயத்தின் துவக்க கால அமிதாப் புத்தரின் சூத்திரங்கள் கூறும் நான்கு முக்கிய பௌத்த அருகதர்களில் ஒருவர். புத்தரின் வழிகாட்டுதல்களின் படி, பிந்தோல பரத்துவாஜர், பௌத்த சமய தருமங்களை பரத கண்டத்தின் கிழக்கு திசையில் பரப்பியவர். [1]


புத்தரின் கட்டளையை மீறி, எளிய மக்கள் முன் தனது பெருமையை வெளிப்படுத்த அட்டமாசித்திகளை தேவையின்றி தவறாக பயன்படுத்தியதால் பிந்தோல பரத்துவாஜர், பௌத்த சங்கத்திலிருந்து சில காலம் விலக்கி வைக்கப்பட்டிருந்தார்.[2] [3]

புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான ஆனந்தருடன், பிந்தோலா பரத்துவாஜர், மகத நாட்டு மன்னர் உதயணனின் கௌசாம்பி அரண்மனைப் பெண்களுக்கு, இரண்டு நிகழ்வுகளின் போது, புத்தரின் உபதேசங்களை அருளியவர் ஆவார். [4]

பிந்தோல பரத்துவாஜர் ஆயிரம் பிக்குகளுடன் கிழக்கு விதேக நாட்டின் மலைக் குகைகளில் பௌத்த சாத்திரங்களை ஆய்ந்தவர். [5]

புத்தர் வாழ்ந்த காலத்தில் நான்கு பிக்குகள் மட்டுமே அருக நிலைக்கு உயர்ந்திருந்தனர். புத்தருக்கு பின்னர் பௌத்த சமயத்தில் பதினெட்டு பிக்குகள் அருகதநிலையை அடைந்திருந்தனர். திபெத்திய பௌத்தத்தில் பதினெட்டு அருகதர்களின் ஓவியங்களில், பிந்தோல பரத்துவாஜர் ஒரு கையில் பிட்சை பாத்திரத்தையும், மற்றொரு கையில் ஏட்டுச் சுவடிகளுடன் ஓவியங்களில் காட்சியளிக்கிறார்.

அரச குடும்பத்தில் பிறந்த பிந்தோல பரத்துவாஜர், தன் வாழ்க்கை அர்த்தமற்றது என உணர்ந்து, பிக்குவாக மாறி, பௌத்த சமயத்தில் இணைந்து, புத்தரின் சீடரானார். [6][7]

பௌத்த ஓவியங்களில் பிந்தோல பரத்துவாஜரை, வலது கையில் ஏட்டுச் சுவடிகள் தாங்கியவாறும், இடக்கையில் பிட்சை பாத்திரத்தை தாங்கி இருப்பது போன்று காட்சிப்படுத்தப்படுகிறது. [8]

ஜப்பானில்[தொகு]

ஜப்பானில் புகழ்பெற்ற அருகதரான பிந்தோல பரத்துவாஜர், பின்சுரு என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். ஜப்பானின் நர நகரத்தில் அமைந்த தோதாய்ஜி கோயிலில், தாமரை மலரில் அமர்ந்த நிலையில், பின்சுரு எனப்படும் பிந்தோல பரத்துவாஜரின் மரச்சிற்பம் உள்ளது. ஜப்பானிய ஓவியங்களில், பிந்தோல பரத்துவாஜரை, பாறையில் அமர்ந்து, கையில் தர்மசூத்திரங்கள் அடங்கிய ஏட்டுச் சுவடிகளை தாங்கிய அலலது இறகு விசிறியுடன் கூடிய முதியவராக காட்சிப்படுத்தப்படுகிறார். [9]

அடிக்குறிப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pindola Bharadvaja
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. [http://www.palikanon.com/english/pali_names/pu/pindola.htm Pindola]
  2. [http://the-wanderling.com/flying.html DO YOU THINK FLYING IN THE SKY IS MAGICAL?]
  3. "The Buddha's Attitude to Miracles". Life of Buddha. www.buddhanet.net. பார்க்கப்பட்ட நாள் 2008-06-27.
  4. Vin.ii.290f; SNA.ii.514; J.iv.375
  5. "Pindola Bharadvaja - Rigpa Wiki". www.rigpawiki.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03.
  6. "Pindola Bharadvaja - Rigpa Wiki". www.rigpawiki.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03.
  7. "Pindola Bharadvaja - Rigpa Wiki". www.rigpawiki.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03.
  8. "Pindola Bharadvaja - Rigpa Wiki". www.rigpawiki.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03.
  9. "Pindola - Bindora Baradaja". rakan-arhat-lohan. onmarkproductions. பார்க்கப்பட்ட நாள் 2008-06-27.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்தோல_பரத்துவாஜர்&oldid=2753312" இலிருந்து மீள்விக்கப்பட்டது