வி. அ. அழகக்கோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. ஏ. அழகக்கோன்
V. A. Alegacone
இலங்கை நாடாளுமன்றம்
for மன்னார்
பதவியில்
1956–1973
முன்னையவர்சி. சிற்றம்பலம், சுயேட்சை
பின்னவர்எஸ். ஏ. ரகீம், ஐதேக
தலைவர், மன்னார் நகரசபை
பதவியில்
1947–1956
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1903-03-19)19 மார்ச்சு 1903
இறப்பு25 நவம்பர் 1973(1973-11-25) (அகவை 70)
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
முன்னாள் கல்லூரிபுனித சேவியர் ஆண்கள் கல்லூரி
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

விராசிப்பிள்ளை அல்பர்ட் அழகக்கோன் (Virasipillai Albert Alegacone, 19 மார்ச் 1903 - 25 நவம்பர் 1973) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அழகக்கோன் 1903 ஆம் ஆண்டு மார்ச் 19 இல்[1] பஸ்தியாம்பிள்ளை விராசிப்பிள்ளை சின்னையா, அன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மன்னார் புனித சேவியர் ஆண்கள் கல்லூரியில் கல்வி கற்ற இவர்[1], சட்டக் கல்வி பயின்று மன்னாரில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவர் மன்னார், மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டப் பேரவைத் தலைவராகப் பல ஆண்டுகள் சேவையாற்றினார்.[1]

பஸ்தியாம்பிள்ளை அரசரத்தினம் எனபவரின் மகள் மேரி செபஸ்தியம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு அருந்ததி, தேவதாசன், பாலேந்திரா, சத்தியவன், அரிச்சந்திரன் என ஐந்து பிள்ளைகள்.[1]

அரசியலில்[தொகு]

1940களில் அழகக்கோன் மன்னார் நகரசபை உறுப்பினராகத் தெரிவானார். 1947 முதல் 1956 வரை நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார்..[1]

1952 நாடாளுமன்றத் தேர்தலில் அழகக்கோன் சுயேட்சை வேட்பாளராக மன்னார் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2] பின்னர் அவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து அக்கட்சி சார்பாக 1956 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] பின்னர் அவர் 1960 மார்ச்[4], 1960 சூலை[5], 1965[6], 1970 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7]

மறைவு[தொகு]

அழகக்கோன் 1973 நவம்பர் 25 இல் காலமானார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 2. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  2. 1952%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 1956%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 1960 03 19%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. 1960 07 20%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  6. 1965%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  7. 1970%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._அ._அழகக்கோன்&oldid=3228371" இலிருந்து மீள்விக்கப்பட்டது