மதிசுதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதிசுதா
பிறப்புமகேசுவரி தில்லையம்பலம் சுதாகரன்
8 மார்ச்சு 1985 (1985-03-08) (அகவை 39)
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுநடிகர், இயக்குநர்

மதிசுதா (பிறப்பு: மார்ச் 8, 1985) இலங்கையைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகரும் ஆவார். இவரது இயற்பெயர் மகேசுவரி தில்லையம்பலம் சுதாகரன் ஆகும்.

இளமைக்காலமும் கல்வியும்[தொகு]

தொடக்கக்கல்வியை யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசனில் கற்றார். போரின் நடுவே இடம்பெயர்வுகளால் 7 பாடசாலைகளில் படித்து, மல்லாவி மத்திய கல்லூரியில் உயர்தரத்தையும் பின்னர் IHS இல் உதவி மருத்துவர் கற்கையையும் கற்றிருக்கிறார்.

உயர்தரம் படிக்கும் காலத்திலேயே பத்திரிகைக்கு ஆக்கங்கள் எழுதி அறியப்பட்ட இவர் 2009 இன் பின்னர் வலைப்பதிவாளராகவும் அறியப்பட்டிருந்தார்.

திரைத்துறை அடைவுகள்[தொகு]

ஆவணப்பட உருவாக்கத்திற்கான உயர் பட்டயக் கற்கையினை முடித்திருககிறார் 12 குறும்படங்கள், 5 ஆவணப்படங்கள், ஒரு பாடல் என்பவற்றை இயக்கியதுடன் 25 குறும்படத்துக்கு மேல் நடித்தும் உள்ளார்.

இதுவரை இவர் இயக்கிய/நடித்த குறும்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பங்களிப்பு
2012 ரொக்கட் ராஜா இயக்குனர்
2013 துலைக்கோ போறியள் இயக்குனர்
2013 மிச்சக்காசு இயக்குனர், நடிகர்
2013 தாத்தா இயக்குனர்
2014 தொடரி இயக்குனர்
2014 தழும்பு இயக்குனர்
2014 கொண்டோடி இயக்குனர்
2015 கருவறைத் தோழன் இயக்குனர்
2016 பந்து இயக்குனர்
2016 பாதுகை இயக்குனர்
2017 The house wife இயக்குனர்

இதுவரை இயக்கிய/நடித்த முழுநீளப் படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பங்களிப்பு
2016 மனசுக்குள் ஒரு மழைச்சாரல் நடிகர்
2017 உம்மாண்டி இயக்குனர், நடிகர்

விருதுகளும் பாராட்டும்[தொகு]

சிறந்த நடிகருக்கான விருது[தொகு]

  • Canadian tamil film festival (தழும்பு) - 2015
  • Navalar fil festival - france (கருவறைத் தோழன்) - 2016
  • Adsaram film festival (போலி) - 2015
  • Thrivenor talkies film festival (போலி) - 2015

சிறந்த இயக்குனர் விருது[தொகு]

  • Balumahendra film festival – 2014 (துலைக்கோ போறியள்)
  • Balumahendra film festival - 2015 (தாத்தா)

சிறந்த திரைக்கதைக்கான விருது[தொகு]

  • vimbam film festival london – 2017 (பாதுகை)
  • ilamai fm film festival – 2014 (மிச்சக்காசு)
  • AAA international film fesival – 2014 (மிச்சக்காசு)

சிறந்த கலை இயக்குனர்[தொகு]

  • Navalar film festival - france (கருவறைத் தோழன்)

சிறப்பு நடுவர் விருது[தொகு]

  • London international film festival (2015) (தாத்தா)
  • Olikkeetru festival france (2014) (சுவர் தேடும் சித்திரம் பாடல்)

சிறந்த படத்துக்கான விருது[தொகு]

  • Balumahendra film festival – 2015 (தாத்தா)
  • Vimbam festival london – 2016 (பந்து)

[1]

http://www.kuviyam.lk/tag/mathi-sutha/[தொடர்பிழந்த இணைப்பு]

  1. "Actor Mathi Sutha, Latest News, Photos, Videos on Actor Mathi Sutha | Actor - Cineulagam". Actor Mathi Sutha, Latest News, Photos, Videos on Actor Mathi Sutha | Actor - Cineulagam. Archived from the original on 2017-11-25. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதிசுதா&oldid=3566401" இலிருந்து மீள்விக்கப்பட்டது