ஆனந்தா கோவில்

ஆள்கூறுகள்: 21°10′14.90″N 94°52′04.28″E / 21.1708056°N 94.8678556°E / 21.1708056; 94.8678556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்தா கோவில்
ஆனந்தா கோவில்
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்21°10′14.90″N 94°52′04.28″E / 21.1708056°N 94.8678556°E / 21.1708056; 94.8678556
சமயம்தேரவாத பௌத்தம், பௌத்தம்

ஆனந்தா கோவில் மியான்மரில் உள்ள பகன்னில் அமைந்துள்ளது. இது ஒரு பெளத்த மதக் கோவிலாகும். இந்தக் கோவில் கி.மு 1105 ஆம் ஆண்டுவாக்கில் பாகன் வம்சாவழியில் வந்த கியான்சித்தா என்ற அரசரால் கட்டப்பட்டது. ஏறக்கிறைய 912 ஆண்டு தொண்மையானது. பகனில் இருக்கும் நான்கு புராதன கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

கோயிலில் பல மாடிகளை கொண்டு அமைந்திருக்கிறது. இந்த அமைப்பு ஒரு குடையின் மேல் ஒரு சிறிய அடுக்குத் தூபிவைக் ஹதி (குடை அல்லது மேல் ஆபரணத்தின் பெயர்) கொண்டிருக்கும் கோவில் அமைப்பைக் கொண்டிருக்கிறது, இதுபோன்ற குடை அமைப்பு மியான்மரில் கிட்டத்தட்ட அனைத்து அடுக்குத் தூபிக்களிலும் உள்ளது. இந்த பௌத்த ஆலயத்தில் நான்கு புத்தர் சிலைகள் நின்றவ்வாறு உள்ளது. ஒவ்வொரு புத்தரும் ஒவ்வொரு திசைகளை நோக்கிப் பார்த்தபடி வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு உள்ளனர். இந்த கோவில் மோன் இணத்தின் ஒரு சிறந்த கட்டிடக்கலை அதிசயமாக கருதப்படுகிறது மற்றும் இந்திய கட்டிடக்கலை பாணியையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஈர்க்கக்கூடிய கோவில் மியான்மரின் வெஸ்ட்மினிஸ்டர் அபே என்றழைக்கப்படுகிறது.[1][2][3][4]

இந்தக் கோவில் 10 வது-11 ஆம் நூற்றாண்டின் இடைபட்ட காலத்தில் உருவான பத்தொட்டியா கோயிலுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது, மேலும் அது "கற்கள் நிறைந்த அருங்காட்சியகம்" என்றும் அழைக்கப்படுகிறது.[5][6]

1975 ஆம் ஆண்டு பகானில் ஏற்பட்ட பூகம்பத்தால் இந்தக் கோவில் சேதமடைந்தது. பின்னர் கோவில் முழுமையாக மீழைமைக்கப்பட்டது அதனை தொடர்ந்து கோவில் மதில் சுவர்கள் முழுவதும் வண்ணம் பூசப்பட்டு பாதுகாக்கப்பட்டது. கோவில் தோற்றுவிக்கப்பட்ட 900 ஆம் ஆண்டு நினைவுக் கொண்டாட்டம் 1990 ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக பகான் நகரில் கொண்டாடப்பட்டது.[1][2]

பெயர்க் காரணம்[தொகு]

இந்த ஆலயத்தின் பெயர் அனந்தா என்பது புத்தரின் முதல் உறவினர், தனிப்பட்ட செயலாளர், அவருடைய பல முக்கிய சீடர்களில் ஒருவராகவும், பக்தியுள்ள உதவியாளராகவும் இருந்தவரின் பெயராகும். இது ஒரு காலத்தில் ஆனந்தா கோயில் என்று அறியப்பட்டது, சமஸ்கிருத மொழியில் ஆனந்த பின்யா என்ற சொற்றொடர் இருந்து வந்தது, இது "முடிவில்லா ஞானம்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாலி, சமஸ்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளில் ஆனந்தா என்ற வார்த்தை பேரின்பம் என்ற அர்த்தமும் உள்ளது. இந்தப் பெயர் பிரபலமான பௌத்தம் மற்றும் இந்து மதம் இரண்டிலும் பிரபலமான பெயராகும் . புத்தரின் பண்புகளையும், அவரது முடிவிலா ஞானத்தையும் ("பர்மியிலும் பாலிவிலும் ஆனந்தபின்யா") ஆனந்தா என்ற பெயரால் நினைவுகூரப்படுகிறது.[1][2][7]

வரலாறு[தொகு]

கி.மு. 1105 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கச்சிதமான பரிமாணம் கொண்ட கோவிலின் அமைப்பிற்கும் புகழுக்கும் காரணமாகவும் சொந்தமாகவும் இருந்தவர் அரசர் கியான்சித்தா. இது "ஆரம்பகால பகான் காலத்தின் அழகிய முடிவாகவும் மற்றும் மத்திய காலத்தின் ஆரம்பவும்" அமைந்தது என்று குறிப்பிடபடுகிறது.[2] கி.மு. 1080 ஆம் ஆண்டு, பஹோத்தான்யா கோயில் கட்டப்பட்ட போது ஆரம்பிக்கப்பட்ட சமயக் கல்வியின் உச்சநிலையாக இந்த கோயிலின் கட்டுமான காலம் கருதப்படுகிறது. அரசர் ஏற்றுக்கொண்ட தேரவாத பௌத்தம் , புத்தரின் போதனைகளை ஒரு கோவிலின் ஊடாக துல்லியமாகவும், உண்மையான வழியாகவும், பர்மாவை ஒரு கொடியின் கீழ் ஐக்கியப்படுத்துவதற்கும், "வெகுஜன மத நம்பிக்கையை உருவாக்குவதற்கும்" அவரைத் இந்தக் கோவில் கட்டத் தூண்டியது. புத்தரின் கோட்பாட்டில் அவரது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியதன் மூலம், அரசின் பாதுகாவலனாக அரசர் இருக்க விரும்பினார் எனக் கருதப்படுகிறது:[3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Ananda Temple". Ancient Bagan. Archived from the original on 2010-07-19. பார்க்கப்பட்ட நாள் 2010-03-18.
  2. 2.0 2.1 2.2 2.3 "Ananda Temple". Myanmar Information 2009. Archived from the original on 2009-03-18. பார்க்கப்பட்ட நாள் 2010-03-18.
  3. 3.0 3.1 Schober, Juliane (2002). Sacred biography in the Buddhist traditions of South and Southeast Asia. Motilal Banarsidass Publ.. பக். 87–92. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-1812-1. https://books.google.com/books?id=oeBL7ci3MKoC&pg=PA89&dq=Ananda+temple&hl=en&ei=T9miS_qxN5O1rAeb3uzECA&sa=X&oi=book_result&ct=result&resnum=10&ved=0CF8Q6AEwCTgK#v=onepage&q=Ananda%20temple&f=false. பார்த்த நாள்: 2010-03-19. 
  4. Murari, Krishna (1985). Cultural heritage of Burma. Inter-India Publications. பக். 23. https://books.google.com/books?id=m3huAAAAMAAJ&q=Ananda+temple&dq=Ananda+temple&hl=en&ei=AOKiS4jpMoq7rAeg0dXoCA&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CEkQ6AEwBDgU. பார்த்த நாள்: 2010-03-19. 
  5. Journal of Indian history, Volume 49. Dept. of Modern Indian History. 1971. பக். 80. https://books.google.com/books?id=4h-2AAAAIAAJ&q=Ananda+temple&dq=Ananda+temple&hl=en&ei=AOKiS4jpMoq7rAeg0dXoCA&sa=X&oi=book_result&ct=result&resnum=7&ved=0CFEQ6AEwBjgU. பார்த்த நாள்: 2010-03-19. 
  6. Majumdar, R.C (1994). Ancient India. Motilal Banarsidass Publ.. பக். 496–497. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-0436-8. https://books.google.com/books?id=XNxiN5tzKOgC&pg=PA497&dq=Ananda+temple&hl=en&ei=T9miS_qxN5O1rAeb3uzECA&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CEUQ6AEwAzgK#v=onepage&q=Ananda%20temple&f=false. பார்த்த நாள்: 2010-03-19. 
  7. Takkasuili, Ranikunj (1986). Glimpses of glorious Pagan. Universities Press. பக். =15, 59. https://books.google.com/books?id=Xg1wAAAAMAAJ&q=Ananda+temple&dq=Ananda+temple&hl=en&ei=ldOiS9nwO4ayrAe6243KCA&sa=X&oi=book_result&ct=result&resnum=9&ved=0CFsQ6AEwCA. பார்த்த நாள்: 2010-03-19. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தா_கோவில்&oldid=3586143" இலிருந்து மீள்விக்கப்பட்டது