வியட்நாமில் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியட்நாம் தொலைக்காட்சி (VTV)
Đài truyền hình Việt Nam
Typeதரை வழி ஒளிபரப்பல் தொலைக்காட்சி
Countryவியட்நாம்
Availabilityதேசிய அளவில்
பன்னாட்டு அளவில்
Headquartersகனாய், வியட்நாம்
Ownerவியட்நாம் அரசு
Launch date
7 செப்டம்பர் 1970
Former names
வியட்நாம் தொலைக்காட்சி அமைப்பு' (7 செப்டம்பர் 1970 – 4 ஜூலை 1976)
நடுவண் தொலைக்காட்சி (5 ஜனவரி 1976 – 30 ஏப்பிரல் 1987)
Picture format
576i (16:9 SDTV)
1080i (HDTV)
Official website
vtv.vn

வியட்நாம் தொலைக்காட்சி (Vietnam Television), அல்லது விடிவி என்பது வியட்நாமின் தேசிய ஒளி/ஒலி பரப்பு அமைப்பாகும்.

வரலாறு[தொகு]

வியட்நாமில் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பு 1966 இல் தொடங்கியது. அப்போது ஐக்கிய அமெரிக்கா வியட்நாம் மொழியிலும் ஆங்கில மொழியிலும் ஒவ்வொரு அலைவரிசையை வியட்நாம் குடியரசுக்காக சாய்கோன் நகரில் தோற்றுவித்தது. இது தாய் திரூயேன் கின் வியட்நாம் (Đài Truyền hình Việt Nam) எனப்பட்டது. இது சாய்கோன் வீழ்ச்சி வரை செயல்பட்டது.

வியட்நாம் தொலைக்காட்சி கியூபாவின் தொழில்நுட்ப உதவியுடனும் பயிற்சியுடனும் 1970 செப்டம்பர் 6 இல் கனாயில் வியட்நாம் அரசுத் துறையாக நிறுவப்பட்டது. வியட்நாம் போரின்போது ஒரு மலை வட்டாரத்தில் இருந்து அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டது .

வியட்நாம் போர் முடிந்து 1975 இல் வியட்நாம் ஒருங்கிணைந்ததும், தெற்கில் இயங்கிய அமெரிக்க நிலையங்கள் வியட்நாம் தேசிய வலைத்தொகுப்பில் இணைந்தன. அவற்றில் இருந்து நாடு முழுவதும் ஒளிபரப்பு நிகழத் தொடங்கியது.

வண்ணத் தொலைக்காட்சி 1978 இல் தொடங்கப்பட்டு, 1978 இல் முழுமையுற்றது.[1]வியட்நாம் தொலைக்காட்சி எனும் பெயர் 1987 ஏப்பிரல் 30 இல் இருந்து வழக்கில் வந்தது. 1990 அளவில் இரண்டாம் வியட்நாம் தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலானது.[2][3]

வியட்நாம் தொலைக்காட்சியின் வட்டார ஒளிபரப்பு நிலையங்கள் ஓ சி மின் நகரிலும் கியே விலும் தாநாங்கிலும் பூயென்னிலும் நாதிராங்கிலும் சாந்தோவிலும் அமைந்துள்ளன. நிகழ்ச்சிகள் தேசிய வலைதொகுப்பில் இருந்து நாடுமுழுவதும் மாகாண, நகராட்சி நிலையங்கள் வழியாக ஒளிபரப்பப்படுகின்றன. நாட்டின் நெடுதொலைவுப் பகுதிகளிலும் அலைசெலுத்திகள் அமைந்துள்ளன. 2003 ஆம் ஆண்டளவில் நகர்ப்புற வீடுகளில் 80% அளவுக்கும் கூடுதலாக தொலைக்காட்சிக் கருவிகள் இணைந்திருந்தன. ஊரக வீடுகளில் இந்த விழுக்காடு குறைவாக இருந்தாலும் மிக நெடுந்தொலைவில் உள்ள ஊர் உணவு விடுதிகளிலும் ஒரு தொலைக்காட்சிக் குறுந்தட்டு வழி காணொளிப் படங்கள் காண ஏற்பாடுகள்.[சான்று தேவை]

பெருநகரங்களில் மட்டுமின்றி, 51 மாகாணங்களிலும் ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையம் இயங்குகிறது.[சான்று தேவை]

அலைவரிசைகள்[தொகு]

வியட்நாம் தொலைக்காட்சி கீழ்வரும் அலைவரிசைகளில் இயங்குகிறது[4][5][6][7]

  • விடிவி1 (VTV1 எச்டி): செய்திகளும் நடப்பு நிலவரங்களும், 24/24 மணிநேர இயக்கம் .[8] VTV1, 1970 செப்டம்பர் 7 இல் இயங்கத் தொடங்கியது. உயர்வரையறை VTV1 அலைவரிசை 2014 மார்ச்சு 27 இல் இயக்கிவைக்கப்பட்டது.
  • விடிவி2 (VTV2 எச்டி): அறிவியல் தொழில்நுட்பம், 24/24 மணிநேர இயக்கம்.
  • விடிவி3 (VTV3 எச்டி): பொழுதுபோக்கு அலைவரிசை, 24/24 மணிநேர இயக்கம். இது 1996 மார்ச்சு 31 இல் தொடங்கியது. இதன் உயர்வரையறை அலைவரிசை 2013 மார்ச்சு 31 இல் தொடங்கி வைக்கப்பட்டது.
  • விடிவி4 (VTV4 எச்டி): பன்னாட்டு அலைவரிசை 1998 இல் தொடங்கிவைக்கப்பட்டது; இதன் உயர்வரையறை அலைவரிசை 2015 ஜூன் 19 இல் தொடங்கப்பட்டது.
  • விடிவி5 (VTV5 எச்டி): வியட்நாமில் வாழும் இனக்குழுக்கான அலைவரிசை, 24/24 மணிநேர இயக்கம். விடிவி5 2002 பிப்ரவரி 10 இல் இயங்கத் தொடங்கியது. இதன் உயர்வரையறை அலைவரிசை 2015 ஜூலை 1 இல் தொடங்கி வைக்கப்பட்டது.
  • விடிவி6 (VTV6 எச்டி): இளைஞர், விளையாட்டு அலைவரிசை, 24/24 மணிநேர இயக்கம். இது 2007 ஏப்பிரல் 29 இல் இயங்கத் தொடங்கியது.
  • விடிவி7 (VTV7 எச்டி): கல்வித் தொலைக்காட்சி, காலை 06 மணி முதல் நள்ளிரவு வரை இயக்கம். இதன் உயர்வரையறை அலைவரிசைகலாகிய விடிவி7, விடிவி7 எச்டி ஆகியவை2016 ஜனவரி 1 இல் தொடங்கி வைக்கப்பட்டன.
  • விடிவி8 (VTV8 எச்டி): வியட்நாமின் நடுவன் மேட்டுச் சமவெளிப் பகுதிகளுக்கன அலைவரிசை, காலை 05 மணி முதல் நள்ளிரவு வரை இயக்கம். இதன் உயர் வரையறை அலைவரிசைகளாகிய விடிவி8 யும் விடிவி8 எச்டி யும் 2016 ஜனவரி 1 இல் தொடங்கப்பட்து.
  • விடிவி9 (VTV9 எச்டி): தெற்குப் பகுதிக்கான அலைவரிசை, 2007 அக்தோபர் 8 இல் தொடங்கப்பட்டது. இதன் உயர் வரையறை அலைவரிசை 2015 ஆகத்து 28 இல் தொடங்கி வைக்கப்பட்டது .

வட்டாரத் தன்னியக்க அலைவரிசைகள் (5)[தொகு]

  • விடிவி கியூவே
  • விடிவி தா நாங்
  • விடிவி பூ யேன்
  • விடிவி சான் தோ 1
  • விடிவி சான் தோ 2

2003 ஆம் ஆண்டளவில் மேலே உள்ள அனைத்து அலைவரிசைகளும் வியட்நாம் நாடு முழுவதும் செயற்கைகோள் வழியாகவும் இலக்கவியல் தரைநிலையங்கள் வழியாகவும் இலக்கவியல் வட வலையமைப்புகள் வழியாகவும் கிடைக்கின்றன. விடிவி மட்டுமே இருகட்டண முறையில் 15 அலைவரிசைகளை இயக்குகிறது. இவை முறையே K+ (செயற்கைகோள் வழிச்செலுத்தம்) எனவும் விடிவிCab (வடத் தொலக்காட்சிவழிச் செலுத்தம்) எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றில் போன்ற பன்னாட்டு நிகழ்ச்சிகளும் அடங்கும். பன்னாட்டு அலைவரிசைகளில், ராய்ட்டர்ஸ், ஈஎஸ்பிஎன், டிஸ்னி, டிஸ்கவரி தொலைக்காட்சி, பிபிசி, எச்பிஓ ஆகியவற்றோடு ஏறத்தாழ 40 தன்னாட்டு அலைவரிசைகளும் அடங்கும்.

விடிவி வட்டார அலைவரிசைகளில் 2016 ஜனவரி 1 முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. விடிவி கியூயே, விடிவி தாநாங், விடிவி பூயேன்]] ஆகியவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலை நிறுத்திவிட்டன. வியட்நாமின் நடுவண், மேட்டுநில வட்டாரங்களுக்காக தனியாக விடிவி8 சிறப்பு அலைவரிசையாக இயங்கத் தொடங்கியது. பழைய விடிவி9 (ஓ சி மின் நகருக்கும் தென்மேற்கு வட்டாரங்களுக்கும் ஒளிபரப்பிய்து), விடிவி சான் தோ 1 (சான் தோ ந்கருக்கும் காவு கியாங் மாகாணத்துக்கும் ஒளிபரப்பியது) ஆகிய இரண்டும் புதிய விடிவி9 ஆக ஒருங்கிணக்கப்பட்டது. இது வியட்நாமின் தென்கிழக்கு, தென்மேற்கு வட்டாரங்களுக்கு ஒளிபரப்பலானது. விடிவி சான் தோ 2 எனும் அலைவரிசை விடிவி5 தாய்நாம் போ எனப் பெயர் மாற்றப்பட்டு கேமர்-வியட்நாமிய இருமொழி அலைவரிசையாக இயங்கலானது.

விவரங்கள் :வியட்நாம் தொலைக்காட்சியின் ஒளிபரப்புகளின் பட்டியல்

வியட்நாமிய வடங்களில் இயங்கும் அலைவரிசைகளின் பட்டியல்[தொகு]

EPG எண். EPG பெயர் அலைவரிசை பெயர் அலைவரிசை வகை கிடைப்புதிறம் குறிப்புகள்
1 விடிவி1 விடிவி1 இலவசத் தொலைக்காட்சி காற்றலை செய்தி, நடப்பு நிலவரங்கள் அலைவரிசை, அலைவரிசை எண்கள் 1, 300(எச்டி அல்ல).
2 விடிவி2 விடிவி2 இலவசத் தொலைக்காட்சி காற்றலை கல்வி, அறிவியல் அலைவரிசை. அலைவரிசை என்அள் 2, 303(எச்டி அல்ல).
3 விடிவி3 விடிவி3 இலவசத் தொலைக்காட்சி காற்றலை பொழுதுபோக்கு அலைவரிசை. அலைவரிசை எண்கள் 3, 301(எச்டி அல்ல).
4 விடிவி4 விடிவி4 இலவசத் தொலைக்காட்சி காற்றலை பன்னாட்டு அலைவரிசை அலைவரிசை எண்கள் 4, 304(எச்டி அல்ல).
5 விடிவி5 விடிவி5 இலவசத் தொலைக்காட்சி காற்றலை பல இனக்குழுக்களுக்கான அலைவரிசை. அலைவரிசை எண்கள் 5, 308(கேமர் மட்டும், எச்டி அல்ல).

இங்கு காட்டப்படாத வியட்நாமிய வடத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் வியட்நாமில் இயங்குகின்றன.

நிகழ்ச்சிநிரல்[தொகு]

வியட்நாம் தொலைக்காட்சி அமைப்பு தனக்கெனவொரு திரைப்படம் எடுக்கும் நிறுவனத்தைக் கொண்டுள்ளது. இதன் பெயர் வியட்நாம் தொலைக்காட்சி திரைப்பட மையம் என்பதாகும். இது தொலைக்காட்சிக்கான திரைப்படங்களையும் தொடர்நாடகங்களையும் படமாக்கியது. என்றாலும், வியட்நாம் தொலைக்காட்சியைல் 30% பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் படங்களுமே வியட்நாமில் எடுக்கப்பட்டவை. மற்றவை இறக்குமதி செய்து வியட்நாமியத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டனவே. இவற்ரில் கொரிய, சீன தொடர்நாடகங்கள் அடங்கும். இவை இரவில் விடிவி3 இல் முதன்மையாக்க் காட்டப்பட்டன.

செய்திகள், நடப்பு நிகவரங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளைத் தவிர, விடிவி1 இசைநிகழ்ச்சிகளுக்கும் கதைப்படல்களுக்கும் மரபு அரங்க நிகழ்ச்சிகளுக்கும் சிறுபான்மை இனக்குழுப் பன்பாட்டு நிகழ்ச்சிகளுக்கும் திரைபடங்களுக்கும் கூட ஏற்பாடு செய்கிறது.

மேலும், சீனப் புத்தாண்டு நாளுக்கு முன்னாளில், விடிவி மறுநாள் பின்னிரவு 2 மணிவரை சிறப்பு செய்திகளையும் கேளிக்கை நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் இசைகச்சேரிகளையும் வாணவெடிப்புக் காட்சிகளையும் காட்டுகிறது.

விடிவி சார்ந்த உலகளாவிய நிலையங்கள்[தொகு]

இப்போது நடப்பில், விடிவி சார்ந்த 11 நிலையங்கள் உரிய பணியாளர்களுடனும் நிருபர்களுடனும் பின்வரும் இடங்களில் இயங்குகின்றன:
• வியழ்சியேன், இலாவோசு
• பினோம் பென், கம்போடியா
சிங்கப்பூர் (கிழக்காசியப் பகுதி)
• பீகிங், சீனா
தோக்கியோ, யப்பான்
மாஸ்கோ, உருசியா
பிரசல்சு, பெல்ஜியம் (ஐரோப்பா)
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
• வாழ்சிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
• இலாசு ஏஞ்சலிசு, ஐக்கிய அமெரிக்கா

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Giới thiệu VTV - Đài Truyền Hình Việt Nam | VTV.VN
  2. VTV Official Site - Overall பரணிடப்பட்டது 3 சூலை 2006 at the வந்தவழி இயந்திரம்
  3. VTV Official Site - Milestones பரணிடப்பட்டது 27 சனவரி 2010 at the வந்தவழி இயந்திரம்
  4. VTV Official site - Channel list பரணிடப்பட்டது 30 ஏப்பிரல் 2011 at the வந்தவழி இயந்திரம்
  5. vtv6.vtv.vn. "VTV6 - Ban Thanh thiếu niên - Đài Truyền Hình Việt Nam". VTV6. பார்க்கப்பட்ட நாள் 12 July 2015.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  6. "VTV sẽ có thêm 3 kênh truyền hình mới". Archived from the original on 13 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 12 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Ra mắt kênh truyền hình VTV9". Archived from the original on 19 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Lịch phát sóng - Lịch phát sóng truyền hình VTV - VTV.VN". Đài truyền hình Việt Nam. Archived from the original on 16 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 12 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]