நிலத்தடி நீர்மட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நில உருவ அமைப்பைப் பொறுத்து நிலத்தடி நீர்மட்டத்தின் வேறுபாடுகளையும், தங்கு நிலத்தடி நீர்மட்டத்தையும் காட்டும் குறுக்கு வெட்டுமுகம்

நிலத்தடி நீர்மட்டம் என்பது, நிலத்தின் கீழ் காணப்படும் நீர் நிரம்பல் வலயத்தின் மேற்பரப்பைக் குறிக்கும். நுண்துளைகளும், வெடிப்புக்களும் நீரால் நிரம்பியுள்ள நிலத்தின் பகுதியே நீர் நிரம்பல் வலயம் எனப்படுகிறது.[1]

நிலத்தடிநீர் மழையினாலோ, நிலத்தடி நீர்படுகையில் உள்ள நீரினாலோ உருவாகலாம். போதிய மழைவீழ்ச்சி உள்ள இடங்களில், மேற்பரப்பில் விழும் மழை நீர் நிலத்தில் உள்ள துளைகள் வழியே நிரம்பல் நிலையில் இல்லாத வலயத்தின் ஊடாகக் கீழ் நோக்கிச் செல்லும். இவ்வாறு செல்லும் நீர் கீழ்ப் பகுதிகளில் உள்ள துளைகளில் நிரம்புவதால் நீர் நிரம்பல் வலயம் உருவாகிறது. நிலத்தடி நீர்மட்டத்துக்குக் கீழே நிரம்பல் வலயத்தில் நீரை ஊடுசெல்ல விடக்கூடிய பாறைப் படலங்கள் இருக்கும். நிலத்தடி நீரை வழங்கும் இப்பாறைப் படலங்கள் நிலத்தடி நீர்ப்படுகைகள் எனப்படுகின்றன.

வடிவங்கள்[தொகு]

மழைவீழ்ச்சி, ஆவியாதல் போன்ற பருவகால மாற்றங்களைப் பொறுத்து நிலத்தடி நீர்மட்டம் மாறக்கூடும். போதிய மழைவீழ்ச்சியைப் பெறும், ஊடுபுகவிடும் மண்ணைக் கொண்ட, மேம்பாட்டுக்கு உட்படாத பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆறுகளை நோக்கிச் சரிந்து காணப்படும். இந்த ஆறுகள், நிலத்தடி நீரை வடியச் செய்து நிலத்தடி நீர்ப் படுகைகளில் உருவாகும் அழுத்தத்தைக் குறைக்கின்றன.நிலத்தடி நீர்மட்டம் நில மேற்பரப்பை எட்டும்போது, ஊற்றுக்கள், ஆறுகள், ஏரிகள், பாலைவனச்சோலைகள் என்பன உருவாகின்றன. மலைப்பாங்கான பகுதிகளில் சரிவான நில மேற்பரப்பு நிலத்தடி நீர்மட்டத்தை வெட்டும் இடங்களில் ஊற்றுக்கள் உருவாகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "What is the Water Table?". imnh.isu.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-11-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலத்தடி_நீர்மட்டம்&oldid=2749309" இலிருந்து மீள்விக்கப்பட்டது