நிறைவுறா ஒருமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிறைவுறா ஒருமங்கள் (Unsaturated monomers) என்பவை கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்பைக் கொண்டுள்ள கரிம வேதியியல் சேர்மங்களைக் குறிக்கும். பொதுவாக ஒரு வேதிச் சேர்ம வகையுடன் நிறைவுறா என்ற சொல் பயன்படுத்தப்பட்டாலே அச்சேர்மத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டை அல்லது முப்பிணைப்புகள் இருக்கும் என்பது அறியக்கூடிய ஓர் உண்மையாகும். இந்நிறைவுறா சேர்மத்துடன் கூடுதலாக ஐதரசன் மூலக்கூறைச் சேர்த்தால் அச்சேர்மம் நிறைவுற்ற சேர்மமாகிவிடும்.

அக்ரைலிக் அமிலம், அக்ரைலோலைல் குளோரைடு, மெத்தில் மெத்தக்ரைலேட்டு உள்ளிட்ட சேர்மங்கள் நிறைவுறா ஒருமங்களுக்கு எடுத்துக் காட்டுகளாகும். நிறைவுறா ஒருமங்கள் இன ஒற்றுமையுடன் ஒன்றாக ஒருங்கிணைவதால் உருவாகும் சேர்மங்கள், செயற்கை இழைகளின் எதிர்வுருவமை வளையபுரோப்பேனாக்கல் செயல்முறையில் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்று ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Krumper, JR; Gerisch, M; Suh, JM; Bergman, RG; Tilley, TD (12 December 2003). "Monomeric rhodium(II) catalysts for the preparation of aziridines and enantioselective formation of cyclopropanes from ethyl diazoacetate at room temperature". The Journal of Organic Chemistry 68 (25): 9705-10. doi:10.1021/jo035120e. பப்மெட்:14656097. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/14656097. பார்த்த நாள்: 6 April 2017. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறைவுறா_ஒருமம்&oldid=2434275" இலிருந்து மீள்விக்கப்பட்டது